கோபி செய்த சதியை அம்பலப்படுத்திய எழில்.. கோபத்தின் உச்சத்தில் ராதிகா.. ஆனால் இதை மறந்துட்டாங்களே?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் செப்டம்பர் 22ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் பாக்கியாவின் லைசென்ஸ் எப்படி பழனிச்சாமியிடம் போனது என்று கோபி பிரச்சனை செய்ய வந்து கடைசியில் அவர் செய்த ஏமாற்று வேலைகள் எழிலால் வெளிவந்து விட்டது. அதே நேரத்தில் கோபியால் ராதிகா கோபத்தில் இருக்க, பாக்கியா வீடு தேடி சென்று திட்டி தீர்க்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்யா வீட்டிற்கு வந்து கோபி உன்னுடைய லைசென்ஸ் எப்படி பழனிசாமி கிட்ட போச்சு? அதுக்கு பதில் சொல்லு என்று கேள்வி கேட்டு பிரச்சினை செய்து கொண்டு இருக்க அந்த நேரத்தில் எழில் வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கிறார். எழிலை பார்த்ததும் வாடா அம்மா புள்ள என்று கோபி எழிலையும் சீண்டி பார்க்கிறார்.
எழிலிடம் உங்க அம்மாவோட லைசென்ஸ் எப்படி அந்த பழனிச்சாமி கிட்ட போச்சு? இன்னும் என்னென்னல்லாம் கொடுத்து வச்சிருக்க? என்று கேள்வி கேட்க, அதற்கு எழில் நான் பதில் சொல்லட்டுமா என்று கேட்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு அந்த லைசன்ஸ் ஒன்னும் நேரா அவர் கிட்ட போகல ரெண்டு துண்டா உடைஞ்சு போச்சு என்று சொல்ல கோபி புரியாமல் இருக்க எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
யாரோ ஒருத்தர் வீடு புகுந்து லைசன்ஸை திருடி அது இரண்டாக உடைத்து போட அதுதான் பழனிச்சாமி சாரி கிட்ட போய் இருக்கு என்று சொல்ல, அமிர்தா என்ன சொல்லுறீங்க எங்களுக்கு எதுவுமே புரியலையே என்று கேட்க அதற்கு எழில் கோபி வீடு புகுந்து லைசென்ஸ் திருடிய விசயத்தையும் தன்னுடைய நண்பரிடம் பாக்கியாவை பற்றி சொன்ன வார்த்தைகளை பற்றியும் அனைத்தையும் சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
மேலும் அந்த ஹோட்டலுக்கு எதிர்பாராத விதமாக பழனிச்சாமி சாரும் போயிருக்கார். இவர் பேசிய எல்லாத்தையும் கேட்டிருக்கிறார்.. இவர் உடைத்து தூக்கி போட்ட லைசன்ஸ் எடுத்து தான் அவர் போட்டோ அனுப்பி எடுத்து அனுப்பி இருக்கிறார் என்று சொல்ல அதைக் கேட்ட பாக்கியை இவ்வளவு நாளா நீங்க ஏமாற்றுக்காரர் என்று தான் எங்களுக்கு தெரியும். ஆனா இப்படி திருட்டு புத்தியும் இருக்கணும்னு எங்களுக்கு தெரியலையே என்று திட்ட அதற்கு ஈஸ்வரி அப்போ நீ கார் அனுப்புனது எங்க மேல இருக்குற அக்கறையில் இல்ல.

பாக்யாவை நடுரோட்டில் நிற்க வைக்கணும்னு தானே? உனக்கு எங்க இருந்து இந்த புத்தி எல்லாம் வந்துச்சு என்று திட்டுகிறார். அப்போது எழில், ராமமூர்த்தி இருவரும் வீட்டை விட்டு வெளியே போங்க என்று திட்ட கோபி டென்ஷன் ஆகி வெளியே வருகிறார். அந்த நேரத்தில் ராதிகா வீட்டிற்கு வர, கோபியை பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறார். பிறகு கோபி ராதிகாவிடம் பாக்கியா ஆபீசுக்கு வந்து என்கிட்ட சவால் விட்டாள். அதனால் தான் நான் நாலு வார்த்தை நறுக்குனு கேட்டுட்டு வருகிறேன் என்று சொல்கிறார்.
மேலும் அவள் நல்லா இருக்கக்கூடாது. அவ நடு ரோட்டுக்கு வரணும் என்று வில்லனாக மாறி கோபப்படுகிறார். மேலும் அடி மனசுல இருந்து சொல்றேன் எனக்கு ஒரு ஆசை இருக்கு. என் அம்மா, என்னோட பசங்க, நீ, நான்,மயூ என எல்லோரும் ஒரே குடும்பமா வாழனும் என்று ராதிகாவிடம் சொல்ல ராதிகா பீல் பண்ணுகிறார். அதே நேரத்தில் பாக்யா நான் என்ன தப்பு பண்ணினேன் என்று பீல் பண்ணுகிறார். பிறகு ஒரு நிமிஷம் இருங்க நான் வந்துருவேன் என்று சொல்லி ராதிகா வீட்டு கதவை தட்டி அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
அதே நேரத்தில் சில தினங்களுக்கு முன்பு அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேசன் மீண்டும் உயிரோடு வந்திருப்பது போன்ற காட்சிகள் இருந்தது. ஆனால் இப்போது ஒரு சில நாட்களாகவே அதைப்பற்றி எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை. ஒருவேளை இதற்கு அதிகமான ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் அந்த கதையை இத்துடன் முடித்து விட்டார்களா? அல்லது இன்னும் ஒரு சில நாட்கள் கழித்து இதை வைத்து பிரச்சினை பண்ண போகிறார்களா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications