அமிர்தாவை தேடி அலையும் கணேசன்.. உண்மை தெரிந்து பிரச்சனை செய்யும் பாக்கியா.. திடீர் திருப்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் செப்டம்பர் 23ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் கோபி வீட்டிற்கு சென்று பாக்யா தன்னுடைய வீட்டு சாவி வேண்டும் என்று கேட்டு கோபி மற்றும் ராதிகாவை அவமானப்படுத்துகிறார்.

அதுபோல அமிர்தாவை தேடி கணேசன் அமிர்தாவின் அம்மா வீட்டிற்கு சென்று அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியா கடும் கோபத்தில் ராதிகா வீட்டில் கதவை போய் தட்ட, ராதிகா அப்போது லேப்டாப்பில் பிஸியாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். கதவு தட்டும் சத்தத்தை கேட்டு கதவை திறக்க அங்கே பாக்கியாவை கண்டதும் அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். அப்போது உள்ளிருக்கும் கோபி யாரது இவ்வளவு வேகமாக கதவு தட்டுறது என்று வெளியே வந்து பார்க்கிறார். பாக்யாவை கண்டதும் கோபியும் அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு பாக்யாவை ராதிகாவை கண்டுகொள்ளாமல் வீட்டிற்குள் உள்ளே நுழைய என்ன வீடு மாறி வந்துட்டியா? என்று கோபி கோபமாக கேட்க, அதற்கு குடிச்சிட்டு வீடு மாறி வர்ற பழக்கம் உங்களுடையது என்று பாக்கியா அவமானப்படுத்தி வீட்டு சாவியை திருடிட்டு வந்தது என அனைத்து விஷயங்களையும் கோபமாக கேள்வி மேல் கேள்வி கேட்க, ராதிகா பதிலுக்கு பேச போக, பாக்கியா ராதிகாவையும் அவமானப்படுத்துகிறார்.
கடைசியில் சாவியை தருகிறீர்களா? அல்லது போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் கம்ப்ளைன்ட் கொடுக்கவா? என்று பாக்யா மிரட்ட கோபி ஷாக் ஆகிறார். அந்த சாவியை கொடுத்து தொலைங்க என்று ராதிகா கத்த, வேறு வழி இல்லாமல் கோபி சாவியை கொடுக்கிறார். பிறகு சாவியை வாங்கியதும் பாக்யா கோபத்தில் கதவை வேகமாக சாத்திட்டு போக அது பற்றி பாக்கியாவின் கேரக்டரை குறித்து ராதிகா கோபி இடம் தவறாக பேசிக் கொண்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து அடுத்த நாள் காலையில் கோபி வாக்கிங் போய்க் கொண்டிருக்கும் போது பாக்யாவும், கோபியும் இருவரும் நேருக்கு நேர் மோத போகிறார்கள். பிறகு அந்த நேரத்தில் பாக்யாவோட ஃப்ரெண்ட்ஸ் வந்து பாக்கியாவிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். விஷயத்தை சொல்ல வர ஆனால் பாக்கியா அவங்க கிட்ட நலம் விசாரிச்சு கோபியை கடுப்பேற்றுகிறார்.
அப்போது கோபி நான் உன்னை என்னுடைய குடும்பத்தில் இருந்து பிரித்து நடுத்தெருவில் நிற்க வைப்பேன். நான் ஆசையா கட்டுன வீட்டில் இருந்து, என்ன நீ தானே வெளியே போக வச்ச என்று சபதம் போட அதற்கு பாக்யா பதிலுக்கு பதிலடி கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

அடுத்த கட்டமாக அமிர்தாவின் முதல் கணவர் அமிர்தாவை தேடி அமிர்தாவின் அம்மா வீட்டுக்கு போய் அத்தை அத்தை என்று கூப்பிட, அவர் கணேசை பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறார். பிறகு கணேஷ் அமிர்தாவை பற்றி விசாரிச்சு, அவருடைய போன் நம்பர் கேட்க, அமிர்தா அம்மா கணேசனை வெளியே அனுப்பிவிட்டு அழுகிறார். அதனால் கணேஷ் ஏமாற்றத்தோடு போகிறார்.
அடுத்து பாக்கியா கேண்டினில் தன்னோடு வேலை பார்ப்பவர்கள் அனைவரையும் பாராட்டிக் கொண்டிருக்கிறார். அமிர்தா மற்றும் தனது உடன் வேலை பார்ப்பவர்களால் தான் நான் வெளியே போய் என்னுடைய சொந்த வேலையை பார்க்க முடிந்தது என்று பாராட்டி பேசிக் கொண்டிருக்கும்போது ராதிகா வந்து வழக்கம் போல பிரச்சினை செய்கிறார். அதோடு இனி பாக்யா எந்த இடத்திற்கும் போகக்கூடாது. தினமும் கேண்டின்கு வரவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications