பாக்கியாவின் கேட்டரிங் ஆர்டரை கேன்சல் செய்த ராதிகா.. கணேசனால் வரும் புது பிரச்சனை..எதிர்பாராத முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் செப்டம்பர் 25ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் கோபி பழனிச்சாமி வீட்டிற்கு சென்று பழனிசாமியையும் பாக்கியாவையும் பற்றி பேச அதற்கு பழனிச்சாமியின் அம்மா நாங்கள் பாக்கியாவிற்கும் பழனிச்சாமிக்கும் திருமணம் செய்து வைக்க போகிறோம் என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.

அதே நேரத்தில் பாக்யாவை பழிவாங்க ராதிகா பாக்யாவின் கேட்டரிங் ஆர்டரை கேன்சல் செய்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு நான் ஆரம்பத்தில் அமிர்தாவின் வீட்டில் இருந்து கோபத்தில் வேகமாக வந்த கணேசன் அமிர்தா உயிரோடு இருக்கிறார்களா? என்னுடைய குழந்தை உயிருடன் தான் இருக்கா இல்லையா? என்று தன்னுடைய அம்மா அப்பாவிடம் கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார்.

பிறகு நான் அமிர்தா வீட்டுக்கு போயிருந்தேன். அவங்க அம்மா என்னை வெளியே தள்ளி கதவை சாத்திட்டாங்க என்று கோபத்தில் கணேசன் சொல்ல, அதைக் கேட்டு அவனுடைய அம்மாவும் அப்பாவும் கோபமாகி நீ எதற்காக அங்க போனா என்று திட்டி, பிறகு நாங்க அமிர்தாவை கண்டுபிடிக்கிறோம் என்று சொல்லி இருந்தோமே என்று சொல்லுகின்றனர். அதோடு நீ இறந்து போனதாக தெரிஞ்ச பிறகு உன்னுடைய ஜாதகத்தை எடுத்துட்டு போய் அவங்க ஜோசியர் கிட்ட காமிச்சி இருக்காங்க.
அவர் சொன்னதைக் கேட்டு ஏமாத்தி கல்யாணம் பண்ணி வச்சிட்டா எங்ககிட்ட கோபப்பட்டாங்க. பிறகு பெரிய சண்டை ஆயிடுச்சு. அதுல இருந்து அமிர்தாவையும் குழந்தையும் பார்க்கவே இல்லை என்று சொல்லி சமாளிக்கின்றனர். அப்போதும் இதை நம்பாத கணேசன் உண்மை மட்டும் தெரியட்டும் அப்புறம் இருக்கு என்று கோபப்பட்டு திட்டிக் கொண்டு ரூமிற்கு சென்று விடுகிறார்.

அதை தொடர்ந்து கோபி பழனிச்சாமி வீட்டுக்கு வந்து நீ என்ன பெரிய ஆளா? பாக்யாவிற்கு ஒரு பிரச்சனைன்னா ஓடி வந்துருவியா? என்று திட்டுகிறார் .. அதோடு உனக்கு இன்னும் கல்யாணம் ஆகல. அந்த பாக்கியா தனியாக இருக்கா, அதனால் அவளை நீ கரெக்ட் பண்ண பாக்குறியா? என்று பேச, அதைக் கேட்டு கோபமான பழனிச்சாமியின் அம்மா அது உனக்கு தேவையில்லாத விஷயம். நாங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் கூட பண்ணி வைப்போம் என்று திட்ட அதைக் கேட்டு கோபி கோபமாகி வெளியே கிளம்புகிறார்.
அதைத்தொடர்ந்து பழனிசாமி தன்னுடைய அம்மாவிடம் நாங்கள் இரண்டு பேரும் நல்ல நண்பர்கள். எப்பவும் நல்ல நண்பர்களாக மட்டும் தான் இருப்போம். மற்றதை பற்றி யோசிக்க வேண்டாம் என்று சொல்கிறார். அதைத்தொடர்ந்து கோடீஸ்வரன் ராதிகாவை கூப்பிட்டு என்னை நம்ம கெட்ட ஆபிசுக்கு வர சொல்லி இருக்காங்க. அதனால நான் உடனே அமெரிக்கா போறேன் ரெண்டு மாசத்துக்கு பிறகு தான் வருவேன். அதுவரைக்கும் நம்முடைய ஆபிஸை நீங்கதான் பொறுப்பா பார்த்துக்கணும். எல்லா முடிவுகளையும் நீங்களே எடுக்கலாம் என்று சொல்ல இதை கேட்டு ராதிகா சந்தோசம் படுகிறார்.

அதே நேரத்தில் பாக்கியா தன்னுடைய வேலை ஆட்களோடு சேர்ந்து நாளைக்கு மெனுவில் ஆப்பத்தையும் சேர்க்கலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அங்கு வரும் ராதிகா காண்ட்ராக்ட் படி நாங்க எல்லோருக்கும் ஆறு மாசம் தான் சமையல் ஆர்டர் கொடுப்போம். நீங்க இங்க வந்து 7 மாசம் ஆயிடுச்சு. அதனால உங்க காண்ட்ராக்ட் முடிஞ்சு போச்சு. காலி பண்ணிட்டு கிளம்புற வழியை பாருங்க என்று அதிர்ச்சி கொடுக்கிறார். அதைக் கேட்டு பாக்கியா கண்கலங்கி அழ அப்போதும் ராதிகா மனம் மாறாமல் இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications