கேட்டரிங்க்காக வெளியான ஓட்டிங் ரிசல்ட்.. புகழ்ந்து தள்ளும் கோபி.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே..!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் செப்டம்பர் 28ஆம் தேதிக்கான எபிசோட் வெளியாகி இருக்கிறது.
அதில் பாக்யா கேன்டினில் கேட்டரிங் தொடரலாமா வேண்டாமா என்று நடந்த ஓட்டிங்கில் ரிசல்ட் வந்திருக்கிறது.

இதுவரைக்கும் வெற்றி பெற்று வந்த பாக்கியா முதல் முறையாக ராதிகாவிடம் தோற்றுப் போய் இருக்கும் நிலையில் கோபி எதிர்பாராத செயலை செய்து இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கணேசன் தன்னுடைய வீட்டில் தூங்காமல் இரவு முழுக்க அமிர்தா பற்றி ஏதாவது தகவல் கிடைக்குமா? என்று தேடிக் கொண்டிருக்கிறார். அப்போது அமிர்தாவின் காலேஜ் ஐடி கார்டு, புத்தகம் எல்லாவற்றையும் பார்த்து விடுகிறார். அப்போது அங்கே சத்தம் கேட்பது பார்த்து கணேசன் பெற்றோர் வந்து என்ன தேடுகிறா? என்று கேட்ட கணேஷ் அமிர்தாவின் ஐடி கார்டு, புக் எல்லாவற்றையும் எடுத்துக்காட்டுகிறார்.

அதற்கு அவர்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டு பிறகு அமிர்தாவை அவங்க அம்மா வந்து கூட்டிட்டு போய்ட்டாங்க என்று மீண்டும் பொய் சொல்லி சமாளிக்கின்றனர். அதைத் தொடர்ந்து கோபி ராதிகா வீட்டில் சோகமாக இருக்க அப்போது ராதிகா என்ன ஆச்சு என்று விசாரிக்கிறார். அதற்கு கோபி ஆபிஸ் டென்ஷன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ராதிகா ஆபீஸ் பொறுப்பு முழுவதையும் கோடீஸ்வரன் சார் என்கிட்ட தந்துட்டு போயிருக்காரு.
இந்த சந்தர்ப்பத்தை வைத்து பாக்கியாவின் கேண்டின் ஆர்டரை கேன்சல் செய்து விட்டேன் என்று சொல்ல, அதைக் கேட்டு கோபி ரொம்பவே சந்தோஷப்படுகிறார். அத்தோடு அந்த இடியட்டை இப்படித்தான் பழி வாங்க வேண்டும் என்று சந்தோஷத்தில் ராதிகாவை பாராட்டிக் கொண்டிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து அடுத்த நாள் காலையில் கேண்டினுக்கான எலக்ஷன் நடைபெறுகிறது. அதில் ராதிகா சொன்னது போலவே யாருமே பாக்கியாவிற்கு ஓட்டு போடவில்லை. ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் உங்க பெட்டியை கட்டிக் கொண்டு போங்க என்று ராதிகா சொல்ல, பாக்கியா அதிர்ச்சியாகி என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார். அதே நேரத்தில் வீட்டில் பாக்கியா எலெக்ஷனில் எப்படியும் ஜெயித்திருவா என்று எல்லோரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அங்கு வரும் பாக்யாவை கண்டதும் எல்லோரும் என்ன ஆச்சி என்று விசாரிக்க, அதற்கு பாக்கியா கதறி அழுது கொண்டு அங்கு நடந்த விஷயத்தை சொல்ல, அதைக் கேட்டு குடும்பமே அதிர்ச்சி அடைகின்றனர். அத்தோடு ராதிகாவை எல்லோரும் திட்டிக் கொண்டிருக்கின்றனர். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைந்தது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications