கேண்டினை காலி செய்த பாக்கியா.. வீட்டில் ஈஸ்வரியால் காத்திருந்த அதிர்ச்சி.. தொடர்ந்து அவமானம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் செப்டம்பர் 29ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் அமிர்தாவை தேடி கணேஷ் சென்னைக்கு தன்னுடைய பெற்றோரையும் மீறி கிளம்பி வருகிறார்.
அதே நேரத்தில் கேண்டினில் இருந்து கேட்டரிங் பொருட்களை எடுத்துக்கொண்டு வந்த பாக்யாவிற்கு ஈஸ்வரி அதிர்ச்சி கொடுக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு நான் ஆரம்பத்தில் கணேசன் நான் அமிர்தாவை தேடி சென்னைக்கு போகப் போகிறேன் என்று தன்னுடைய பெற்றோருடன் சொல்ல, அவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். அதோடு கணேசனை அங்கே போக விடாமல் தடுக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் கணேஷ் அவர்கள் பேச்சைக் கேட்காமல் கிளம்பி விடுகிறார்.
அதே நேரத்தில் வீட்டில் பாக்கியா சோகமாக இருக்க, அதற்கு செல்வி பாக்யாவுக்கு ஆறுதல் கொடுக்கிறார். எந்த சோகங்களும், பிரச்சனைகளும் வந்தாலும் அதற்கு பிறகு சந்தோஷம் வரும். இந்த மாதிரி தற்போது நமக்கு இப்போ வந்திருக்கும் கஷ்டம் கூட இதைவிட பெரிய சந்தோஷம் கிடைப்பதற்காக கூட இருக்கலாம் என்று பாக்யாவுக்கு ஆறுதல் கூறிக்கொண்டு வா நாம கேண்டீன் போயிட்டு வரலாம் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த நேரத்தில் ஹாலில் ராமமூர்த்தியும் ஈஸ்வரியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு ரெண்டு பெண்கள் பாக்யாவை தேடி வருகின்றனர். அவர்கள் நாங்க இந்த கேட்டரிங் பிசினஸை நம்பித்தான் சீட்டு போட்டிருந்தோம். இப்ப இது இல்லை என்பதால் இனி என்ன செய்ய என்று பாக்கியாவிடம் கேட்க, அதற்கு நானும் கேட்டரிங் பிசினஸ் நல்லா போயிட்டு இருக்கு அதனால மசாலா பொடி ஆர்டர் எடுக்கிறது விட்டுட்டு இனி அது குறித்து ஏதாவது பார்ப்போம் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைக்கிறார்.
அதைத் தொடர்ந்து கேட்டரிங் வரும் பாக்யா அங்கு வேலை செய்யும் பெண்களை வைத்து அங்கு இருக்கும் பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு இருக்கின்றனர். அப்போது அந்தப் பெண்கள் பாண்டிச்சேரி பங்க்ஷனில் வேலை செய்ததற்கு இன்னும் சம்பளம் கொடுக்கவில்லை அதை கேட்கலாமா வேண்டாமா என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அதை கேட்ட செல்வி அவர்களை திட்டி இந்த நேரத்தில் பேச வேண்டிய பேச்சா இது என்று திட்டுகிறார்.
அப்போது இதை எல்லாம் பார்த்து பாக்யா அழுது கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் அங்கு வரும் ராதிகா இதையெல்லாம் பார்த்து சந்தோஷமாகிறார். கூடவே கேண்டின் போர்டையும் எடுத்துட்டு போங்க சொன்ன டைமுக்கு எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டீங்களே என்று பாராட்டுவது போன்று பாக்யாவை அவமானப்படுத்த பாக்யா கண்ணீரோடு அங்கிருக்கும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வருகிறார்.

அப்போது வீட்டிற்கு வந்த பிறகு பாக்கியாவிடம் சில பெண்கள் வந்து காசை கேட்கின்றனர். அதற்கு பாக்யா சீக்கிரம் தந்துவிடுவேன் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். அப்போது ஈஸ்வரி பாக்கியாவை பற்றி கடுப்பாகி திட்டுகிறார். இதுவெல்லாம் உனக்கு தேவை தான் டைவர்ஸ் ஆன பிறகு நீ அமைதியா இருந்தா இது எல்லாம் நடந்திருக்காது என்று திட்ட அதற்கும் பாக்கியா அழுது கொண்டிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து கோபி வீட்டில் என்ன நடந்திருக்குமோ என்று ஆர்வத்தோடு காத்திருக்க அந்த நேரத்தில் ராதிகா லேட்டாக வீட்டிற்கு வருகிறார். அப்போது என்ன ஆச்சு என்று கோபி கேட்க, அதற்கு பாக்கியா முதல் முறையா தோத்துட்டா என்று சொல்ல, கோபி ரொம்பவே சந்தோஷப்படுகிறார். பிறகு வா நீ, நான்,மயூ மூணு பேரும் வெளியே போய் சந்தோஷமா சாப்பிட்டு வரலாம் என்று கிளம்புகின்றனர். அப்போது பாக்கியா ஏற்கனவே கேண்டினில் நடந்தது பிறகு ஈஸ்வரி திட்டியது என எல்லாத்தையும் நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்தது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications