மீண்டும் வந்த அமிர்தாவின் முதல் கணவர்.. எழில் சொன்ன வார்த்தை.. பாராட்டும் ஈஸ்வரி..அதிர்ச்சியில் பாக்யா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் செப்டம்பர் 7ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் அமிர்தாவின் முதல் கணவர் கணேசன் மீண்டும் உயிரோடு வந்து அவருடைய பெற்றோருக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

Baakiyalakshmi Serial 2023 September 7th Episode full update

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியாவும் இனியாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது எவ்வளவோ பிரச்சனைகள் வந்தாலும் உன்னால் மட்டும் எப்படி அம்மா எல்லா தடைகளையும் தாண்டி சாதிக்க முடிகிறது என்று இனியா கேட்டுக் கொண்டிருக்க, அதற்கு பாக்யா உன்னால் முடியாது என்று யாரெல்லாம் சொல்கிறார்களோ அவர்கள் முன்பு சாதித்து காட்ட வேண்டும் என்று நாம முயற்சி எடுத்தாலே வெற்றி பெற்று விடலாம் என்று பாக்யாவும் பேசிக் கொண்டிருக்கிறார்.

அது தொடர்ந்து அடுத்த நாள் காலையில் இனியா, ஈஸ்வரி, செல்வி மூவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாக்கியாவை குறித்து ஈஸ்வரி பாராட்டிக் கொண்டிருக்கிறார். அதை அம்மாவிடம் நீங்க சொல்லலாமே என்று இனியா கேட்க, அதற்கு ஈஸ்வரி சமாளித்துக் கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியா எல்லோருக்கும் சாப்பாடு ரெடி செய்து விட்டு இனியா ப்ராஜெக்ட்டுக்காக வெளியே செல்லலாம் என்று எல்லோரும் முடிவெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து அமிர்தாவின் மாமியார் வீட்டில் சமையல் செய்து கொண்டு தன்னுடைய மகன் கணேசனை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். மூன்று வருடத்தில் தான் அவனை நினைத்து அழாத நாளே இல்லை. சாகுற வயசா அவனுக்கு? அவன் நல்லா வாழனும்னு ஆசைப்பட்டோம். இப்போ இல்லாம போயிட்டானே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து ராமமூர்த்தி பாக்யாவுக்கு போன் செய்து எல்லாரும் நல்லா இருக்கீங்களா என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார்.

அப்போது பாக்கியா அங்கு நடந்த பிரச்சனைகள் பற்றி சொல்லிக் கொண்டிருக்க பிறகு செழியன் அங்கு வந்தானா? என்று பாக்கியா விசாரிக்க அப்போது அங்கு செழியன் வரவில்லை. ஜெனி வீட்டில் இருப்பானா இருக்கும் என்று ராமமூர்த்தி சொல்ல, பாக்யா அதிர்ச்சியாகிறார். பிறகு நான் பேசுகிறேன் என்று சொல்லி போனை கட் பண்ணி விடுகிறார். அதை தொடர்ந்து அமிர்தாவின் மாமியார் அவருடைய மகனின் புகைப்படத்தை வைத்து அழுது கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் அமிர்தா சோகமாக இருப்பதை பார்த்த ராமமூர்த்தி வீட்டில் யாரும் இல்லை என்கிறதால உனக்கு வருத்தமா இருக்கா என்று கேட்க, அதற்கு எழில் கணேசனின் இறந்த நாள் அதனால்தான் அமிர்தா இப்படி இருக்கிறார் என்று முன்னாடியே தெரிஞ்சி இருந்தா நாம அங்க ஒரு நாள் முன்னாடியே போயிருக்கலாம்.

வழக்கமா எல்லா வருஷமும் என்ன பண்ணுவார்களோ அதை இந்த வருஷமும் பண்ண சொல்லி நான் அம்மாகிட்ட சொல்லிட்டேன் என்று எழில் சொல்ல, அதற்கு ராமமூர்த்தி அவன் தெய்வமாய் இருந்து உங்கள நல்ல பாத்துக்குவாமா என்று அமிர்தாவிடம் சொல்லிவிட்டு எழில் நீ இந்த பொண்ணு மேல காட்டுற அன்பாலதான் அவள் அவளுடைய கஷ்டங்களை மறக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

Baakiyalakshmi Serial 2023 September 7th Episode full update

அதைத்தொடர்ந்து அமிர்தாவின் அத்தை மாமா சாமி கும்பிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்க, அந்த நேரத்தில் கணேசன் வீட்டு கதவை தட்டுகிறார். கணேசனை பார்த்ததும் அப்பா அம்மா அதிர்ச்சியாக அப்பா என்ன மறந்துட்டீங்களா நான் சாகலப்பா உயிரோட தான் இருக்கேன் என்று சொல்ல, அவரை வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வருகின்றனர். பிறகு வீட்டிற்குள் தன்னுடைய போட்டோவிற்கு மாலை போட்டு படையல் வைத்திருப்பதை பார்த்ததும் கணேசன் அதிர்ச்சி அடைகிறார்.

அதற்கு கணேசா நீ உயிரோடு இருக்குறது எங்களுக்கு தெரியாது டா என்று அம்மாவும் அப்பாவும் சொல்ல, இனி நீங்க அழவே கூடாது என்று கணேசன் சொல்லிவிட்டு சரி அமிர்தாவை எங்க என்று கேட்டு, அமிர்தாவை அங்கும் இங்கும் தேடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+