மாலினியிடம் டீல் பேசிய பாக்கியா.. ஜெனிக்கு கிடைத்த அதிர்ச்சி..ஈஸ்வரியின் நிலைமை? கடைசி முடிவு இதுவா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் இரண்டாம் தேதி முதல் நான்காம் தேதி வரைக்கும் ஆன ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் மாலினி பாக்யாவிடம் உங்க பையன் செழியன் என்னை ஏமாத்திட்டான் என்று சொல்ல, அதற்கு பாக்கியா இனி என் பையன் உன்கிட்ட வரமாட்டான் என்று சொல்கிறார்.
அதைத் தொடர்ந்து மாலினி பாக்யாவின் வீட்டிற்கே வந்து செழியா செழியா என்று கத்தி கூப்பிடுகிறார்ய இந்த நிலையில் இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் சமுதாயத்தில் தவறான உதாரணத்திற்கு பல எடுத்துக்காட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த சீரியலில் கோபிக்கு இரண்டு பொண்டாட்டி, ராதிகாவுக்கு இரண்டு புருஷன், பாக்யாவுக்கு ஒரு புருஷன் இன்னொரு நண்பன் ஆனால் அதுவும் எப்ப வேணும் என்றாலும் கணவராக மாறலாம்.
அதுபோல அதுபோல செழியனுக்கும் ஒரு மனைவி இருக்கையில் இன்னொரு காதலி. அமிர்தாவுக்கு இரண்டு புருஷன். இப்படியாக கதை நீண்டு கொண்டே போகிறது. இதில் புரட்சி நாயகியாக பாக்கியா அடிக்கடி ஒவ்வொரு பிரச்சனைகளையும் தலையிட்டு கடைசியில் சாதித்து காட்டுவது தான் வெற்றிக் கதையாக பயணித்துக் கொண்டிருக்கிறது.
ஆரம்பத்தில் இந்த சீரியல் ஒரு குடும்பத் தலைவி எவ்வளவு கஷ்டம் வேதனைகளில் படுகிறார் என்றும் அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பது போன்று கதை பயணித்துக் கொண்டிருந்தது. அதை பலரும் பாராட்டிக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது கதை வேறு விதமாக பயணித்துக் கொண்டிருப்பது இந்த சீரியலின் தீவிரமான ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்திருக்கிறது.
தொடர்ச்சியாக இந்த சீரியலின் கதையை மாற்ற வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஒரு பக்கம் இறந்து போய்விட்டார் என்று சொல்லிய கணேசன் மீண்டும் உயிரோடு வந்திருக்கிறார். அதுவும் வந்ததும் நான் உயிரோடு இருக்கும்போது எப்படி என்னுடைய மனைவி இன்னொரு கல்யாணம் பண்ணலாம் அது லீகல் இல்லை என்று மூச்சுக்கு 300 தடவை அவர் சொல்லிக் கொண்டிருப்பது பார்ப்பதற்கு தடுப்பாக இருக்கிறது.
மனைவி அம்மா அப்பா கண்ணு முன்னாடி மருத்துவமனையில் உயிர் போய் அவருடைய இறுதிச்சடங்குகளையும் நடத்தி முடித்து மூன்று வருடங்கள் கழித்து நான் உயிரோடு வந்து விட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதுவும் இத்தனை நாட்களாக எங்கே இருந்தார் என்பது சொல்லப்படாத ரகசியமாகவே இருக்கிறது. கேட்டால் நான் கோமாவில் இருந்தேன் என்று சொல்கிறார்.
இது சீரியல் ரசிகர்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கத்தில் மாலினி செழியன் பிரச்சனை. செழியன் ஆரம்பத்தில் ஜெனியை ஸ்கூல் படிக்கும்போது இருந்தே காதலித்து வீட்டு எதிர்ப்பையும் மீறி பாக்யா உதவியோடு திருமணத்தையும் செய்து முடித்து இருந்தார். இந்த நிலையில் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது அவர் தனக்கு ரொம்ப இம்பார்டன்ட் கொடுக்கவில்லையே என்று இன்னொரு பெண்ணிடம் மனம் சபலப்பட்டு விடுகிறது. இப்போது அந்த பெண்ணிடம் சிக்கிக் கொண்டு அவர் மிரட்டடுக்கு பயந்து கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மாலினியை கோவிலில் சந்திக்கும் பாக்கியா உனக்கும் செழியனுக்கும் இடையே என்ன நடக்குது என்று எனக்கு குழப்பமா இருந்து, ஆனா இப்போ அது தப்புன்னு எனக்கு நல்லா தெரியுது என்று சொல்ல, அதற்கு மாலினி செழியன் என்னை ஏமாத்திட்டார் என்று கத்தி பேசுகிறார்.
அதற்கு அதிர்ச்சியான பாக்கியா என் பையன் ஒரு பொண்ண ஏமாத்துனது தப்புதான். இனி செழியன் உன் பக்கம் கூட வராதபடி நான் பார்த்துக்கிறேன் என்று வாக்கு கொடுக்கிறார். அதோடு இனி உனக்கும் என் பையனுக்கும் எந்த பேச்சு வார்த்தையும் இருக்கக் கூடாது என்று சொல்ல அங்கிருந்து புயலாக கிளம்பி போகும் மாலினி பாக்யாவின் வீட்டிற்கு வருகிறார்.
அங்கு எல்லோரும் ஹாலில் இருக்கும் போது செழியா செழியா கீழே இறங்கி வா என்று கத்துகிறார். அதை தொடர்ந்து தனது மகனின் வாழ்க்கையில் வரும் தடைகளை தகர்த்தெறிவாளா பாக்கியலட்சுமி என்ற கேள்விக்குறியோடு ப்ரோமோ முடிவடைகிறது. ஏற்கனவே அமிர்தா எழில் வாழ்க்கையை காப்பாற்ற பாக்யா போராடிக் கொண்டிருக்கிறார்.
எழிலிடம் பேசுவதற்கு எனக்கு ஒரு மாதம் டைம் வேண்டும் என்று கணேசிடம் கெஞ்சி கேட்டு இருக்கிறார். இந்த நிலையில் இப்போது செழியன் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. இனி இதனால் ஜெனி வீட்டை விட்டு கிளம்பி போவது போன்று தான் கதை போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த ப்ரோமோவிற்கு அதிகமான நெகட்டிவ் கமெண்ட்கள் தான் குவிந்து வருகிறது.

அதிலும் ரசிகர்கள் தங்களுடைய ஏமாற்றத்தையும் அதில் பதிவு செய்து வருகிறார்கள். எப்படியெல்லாம் போய்க் கொண்டிருந்த சீரியலை ஏன் இப்படி கதையை மாற்றுகிறீர்கள். இது சுவாரசியமாகலாம் இல்ல. ரொம்ப மோசமாகத்தான் இருக்கிறது என்று கருத்து கூறி வருகிறார்கள். சீரியலில் லாஜிக் பார்க்கக் கூடாது என்று சொல்லலாம்.
ஆனால் இந்த அளவிற்கு படுமோசமாக பார்க்கும் ரசிகர்களை முட்டாள் என்று ஆக்கிக் கொண்டிருப்பது வேதனையாகத்தான் இருக்கிறது. ஆனாலும் இனியாவது இந்த கதையை மாற்றுவார்களா? என்று பார்ப்போம். அதோடு இந்த சீரியலுக்கு முடிவு போட்டுவிடால் நன்று என்பது பலருடைய கருத்தாகவும் இருக்கிறது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications