அமிர்தாவிற்கு கல்யாணம் ஆனதை தெரிந்து கொண்ட கணேசன்.. வீட்டிற்கு வந்த ஆட்கள்.. மாட்டிவிட்ட எழில்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அக்டோபர் ஐந்தாம் தேதிக்கான எபிசோடு மற்றும் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ஹாஸ்பிடலில் இருக்கும் செழியனை மிரட்டி மாலினி தன்னுடைய வீட்டிற்கு வரவைத்து விடுகிறார்.
அதே நேரத்தில் அமிர்தாவுக்கு இரண்டாவது திருமணம் முடிந்து விட்டது என்ற விஷயம் கணேசனுக்கு தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

இந்த வகையில் இன்றைய எபிசோட்டில் செழியன் ஹாஸ்பிடலில் இருக்க மாலினி அடிக்கடி போன் செய்து கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் தனக்கு குழந்தை பிறந்து இருக்கிறது தான் ஹாஸ்பிடல் இருக்கிறேன் என்று கோபத்தில் செழியன் மாலினி இடம் பேசுகிறார். ஆனால் அதை எல்லாம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது நான் இப்பவே உங்களை பார்க்க வேண்டும் நீங்கள் வாங்க என்று மாலினி கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்.
அதோடு மாலினியின் தொல்லை தாங்காமல் செழியன் போனை கட் பண்ணி விட அதனால் கோபமான மாலினி, நான் நீங்கள் வரலைன்னா கையை வெட்டிக்குவேன் என்று வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறார். அதை பார்த்து பயந்து போன செழியன் அங்கு போவதற்கு கிளம்ப அப்போது பாக்கியா எங்கே போகிறாய்? ஆபீசுக்குன்னு மட்டும் சொல்லாத இந்த நேரத்தில் எல்லாம் போக முடியாது என்றெல்லாம் மிரட்டி பார்க்க அதற்கு செழியன் பாக்யாவை சமாதானப்படுத்தி விட்டு மாலினியை பார்க்கப் போகிறார்.

அங்கு மாலினியை பார்த்ததும் செழியன் அடிக்க கை ஓங்குகிறார். அதற்கு மாலினி அழுது கொண்டே உங்களை பார்க்காமல் என்னால் இருக்க முடியாது என்று சொல்லி இன்று ஒரு நாள் நீங்க என் கூடவே இருக்கணும் என்று வற்புறுத்த வேறு வழி இல்லாமல் செழியன் அங்கேயே தங்கி விடுகிறார். அந்த நேரத்தில் ஹாஸ்பிடலில் பாக்கியாவிடம் அமிர்தா, அவர் ஆபிசுக்கு தானே போயிருக்கிறார் விடுங்க பாத்துக்கலாம் என்று சமாதானம் செய்கிறார்.
அதைத்தொடர்ந்து இரண்டு நபர்கள் பாக்யாவின் வீட்டிற்கு வந்து கோபியை பற்றி விசாரிக்க, செழியன் அப்படி இங்கே யாரும் இல்லை என்று சொல்கிறார். அந்த நேரத்தில் எழில் வந்து என்னவென்று விசாரிக்க கோபி கிரெடிட் கார்டு பில் கட்டவில்லை என்று சொல்ல, கோபியை மாட்டி விட வேண்டும் என்று நினைத்து எழில் கோபியின் வீட்டை காட்டி கொடுக்கிறார். அங்கு வந்து ஆட்கள் கோபியிடம் கிரெடிட் கார்டு பில் பற்றி பேச கோபி அவர்களிடம் தனியே கூட்டிட்டு வந்த நான் எப்படியாவது கட்டி விடுகிறேன்.

நீங்கள் வீட்டுக்கு வராதீங்க என்று கெஞ்சி அனுப்பி வைக்கிறார். பிறகு ராதிகா வந்து என்னவென்று விசாரிக்க கிரெடிட் கார்டு வாங்க வேண்டும் என்று தொந்தரவு செய்தார்கள் என்று சமாளிக்கிறார். அதைத்தொடர்ந்து தற்போது வெளியான ப்ரோமோவில் அமிர்தாவை தேடி அலையும் கணேஷுக்கு அமிர்தாவின் தோழி ஒருவர் மூலமாக அமிர்தாவுக்கு இன்னொரு கல்யாணம் முடிந்து விட்டது என்ற உண்மை தெரிய வருகிறது. இதை கேட்ட கணேசன் தெருவில் பித்து பிடித்தது போன்று அலைந்து கொண்டிருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications