புற்றுநோயால் ICUவில் இருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்.. கண்ணீரோடு மகள் வைத்த கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல், பொன்னி சீரியல், முத்தழகு சீரியல் போன்ற பல சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகர் நேத்ரன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அவருடைய மகள் அபிநயா கண்ணீரோடு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

பல வருடங்களாகவே நடிகர் நேத்ரன் சீரியல்களில் நடித்து வருகிறார். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் இன்று பல சேனல்களிலும் அவர் பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார். அவர் மட்டும் அல்லாமல் அவருடைய மனைவி தீபாவும் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியலில் தீபா நடித்து வருகிறார். அது போலவே ஏற்கனவே ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் போன்ற பல சீரியல்களில் தீபா நடித்திருக்கிறார்.

Television Baakiyalakshmi Serial vijay TV

அதுபோல நீ நேத்ரன் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் அண்ணனாக நடித்திருக்கிறார். இந்த நிலையில் தீபா மற்றும் நேத்ரனின் மகளான அபிநயாவும் நேத்திரனுடன் சேர்ந்து பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதற்குப் பிறகு அபிநயா பெரிய அளவில் பிரபலமானார். சமீபத்தில் வெளியான கனா காணும் காலங்கள் சீரியலிலும் அபிநயா நடித்திருந்தார்.

அதுபோல சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபிநயா ஒரு உருக்கமான வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் என்னுடைய அப்பா நேத்தரனுக்கு கேன்சர் பாசிட்டிவ். ஆனால் அது அறுவை சிகிச்சை செய்யப்பட்டு விட்டது. இருந்தும் தற்போது அவர் ICUவில் இருக்கிறார். சில நாட்களாகவே உடல்நிலை மோசமாக உள்ளது.

Television Baakiyalakshmi Serial vijay TV

முதலில் இதை சமூக வலைதளத்தில் பதிவிடுவதா வேண்டாமா என்று சந்தேகமாக இருந்தது. நோய் குறித்து பதிவிட்டால் நான் விமர்சிக்கப்படுவனோ என்று நினைத்தேன். இருந்தும் என்னுடைய எண்ணத்தை புறந்தள்ளிவிட்டு இதை இன்ஸ்டாவில் பதிவு செய்கிறேன். என்னுடைய தந்தை குணமாவதற்கு எல்லோரும் வேண்டிக் கொள்ளுங்கள். உங்களின் வேண்டுதலுக்காகவே இதை பதிவிடுகிறேன்.

அவர் மீண்டும் குணமாகி முன்பை விட வலுவாக வரவேண்டும் என்று நம்புகிறேன். அவருக்காக எவ்வளவு கஷ்டங்களை தாங்கிக் கொள்வேன். ஆனால் அவரை எந்த இடத்திலும் விட்டுக் கொடுத்தது இல்லை. அவரை ஒருபோதும் கைவிடமாட்டேன் என்று கண்கலங்க அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் நேத்ரன் மீண்டும் பழையபடி ஆரோக்கியமாக திரும்பி வர வேண்டும் என்று வேண்டி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+