பிக் பாஸ் தமிழ் சீசன் 7-இல் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.. இதை கவனிச்சீங்களா? இனி ஆட்டம் வேற லெவல்
சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில வாரங்களில் ஒளிபரப்பாக இருக்கிறது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வமான ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருக்கிறது. அதில் வழக்கம் போல கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி மறைமுகமாக அப்டேட் கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில் பிக் பாஸ் பேக்ரவுண்டில் இருக்கும்படி பாக்கியலட்சுமி சீரியல் நடிகை புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதனால் அவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிக் பாஸ் 7: இதுவரை இல்லாத புது முயற்சி..2 வீடு கான்செப்ட் தெரியுமா? இவங்கதான் இந்த சீசன் சண்டகோழியா
விஜய் டிவியில் அதிகமான ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சி ஆறாவது சீசன் சமீபத்தில் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து ஏழாவது சீசன் எப்போது தொடங்கும் என்று அதிகமான ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இதை குறித்து அதிகாரப்பூர்வமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதே நேரத்தில் எப்போது இந்த சீசன் தொடங்கப்படும் என்று அப்டேட் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக உத்தேசமாக இந்த சீசனில் யார் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று சில பெயர்கள் அடிப்படும். அதாவது சேனல் தரப்பில் இருந்து பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை வைத்து உத்தேசமாக போட்டியாளர்களின் பெயர்கள் அடிபட்டுக் கொண்டிருக்கும்.

அந்த மாதிரி தான் இந்து சீசனிலும் கூட சில பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடிக்கும் நடிகை ரித்திகாவின் பெயரும் அடிபடுகிறது. சமீபத்தில் பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து ரித்திகா விலகப் போவதாக தகவல்கள் பரவி வருகிறது. ரித்திகாவுக்கு பதிலாக வேறு ஒரு நடிகை இந்த சீரியலில் கலந்து கொள்ளப் போகிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரித்திகா நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்வது போன்று வீடியோ வெளியிட்டு இருந்தார். இதை பார்த்து அதிகமான ரசிகர்கள் ரித்திகா திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிக்க தொடங்கியதால் தான் இந்த சீரியலில் இருந்து விலகப் போகிறாரா? என்று கேள்விகள் வலம் வருகிறது. இந்த நிலையில் இன்று ரித்திகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அதில் ரித்திகா பிக் பாஸ் வீடு போன்ற ஒரு பேக்ரவுண்ட் இருக்கும் இடத்தில் இருந்து புகைப்படங்களை எடுத்து இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் அப்போ இவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறாரா? அதனால் தான் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகினாரா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது குறித்து ரித்திகா எந்த கமெண்ட்டுகளுக்கும் பதில் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications