Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீரியல் நடிகை ரித்திகாவின் எளிமையான வளைகாப்பு.. குவிந்த விஜய் டிவி பிரபலங்கள்.. ஸ்பெஷல் கிப்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடித்து பிறகு அந்த சீரியலில் இருந்து விலகிய நடிகை ரித்திகா சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்த நிலையில் நேற்று அவருடைய வளைகாப்பு எளிமையாக கொண்டாடப்பட்டிருக்கிறது. அதில் பல விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

எத்தனையோ சினிமா மற்றும் சீரியல் நடிகைகள் இருந்தாலும் ஒரு சிலர் மட்டும்தான் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல ரசிகர்களின் மனதில் எளிமையாக ஒட்டி விடுகிறார்கள். அதில் ஒருவர் தான் ரித்திகா. இவர் சீரியல் நடிகையாக இருந்தாலும் எப்போதுமே ஹோம்லியான லுக்கோடு ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக இருக்கிறார்.

Television Baakkiyalakshmi Rithika

ஆரம்பத்தில் தொகுப்பாளராக பணியாற்றிய ரித்திகா ராஜா ராணி சீரியலில் முதல் பாகத்தில் சஞ்சீவ் தங்கையாக வினோதினி என்ற கேரக்டரில் நடித்து இருந்தார். அதை தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடித்திருந்தார். பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் போது அதிகமான ரசிகர்கள் இந்த கேரக்டர் உங்களுக்கு செட்டாகாது என்று கூறி வந்தனர். காரணம் இந்த சீரியலில் எப்போதுமே அழுது கொண்டிருப்பது போலத்தான் கதை இருந்தது.

Television Baakkiyalakshmi Rithika

அதிலும் அமிர்தாவின் கணவர் இறந்து போய்விட, கை குழந்தையோடு அவர் கஷ்டப்படுவது பார்க்கும் ரசிகர்களையும் கஷ்டப்படுத்துவதாக கூறி வந்தனர். அதற்குப் பிறகு எழில் மற்றும் அமிர்தாவின் திருமணம் பெரிய போராட்டத்திற்கு பிறகு நடைபெற்றது. ஆனாலும் திருமணத்திற்கு பிறகும் எப்போதும் அமிர்தா ஒரே அழுகாட்சி தான். இந்த நிலையில் தான் இந்த சீரியலில் ரித்திகா நடித்துக் கொண்டிருக்கும் போது 2022 ஆம் ஆண்டு விஜய் டிவி பிரபலமான வினு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இவர் சீரியலில் நடிப்பாரா? இல்லையா? என்று எதிர்பார்ப்போடு ரசிகர்கள் இருந்த நிலையில் சில வாரங்களிலேயே மீண்டும் நடிக்க தொடங்கி விட்டார். அதற்கு பிறகு சில மாதங்கள் அந்த சீரியலில் எப்போதும் போல நடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இவர் சீரியலில் இருந்து வெளியே விலகிவிட்டார். இது சின்னத்திரை ரசிகர்களை பெரிய அளவில் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Television Baakkiyalakshmi Rithika

ரித்திகா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தாலும் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக குக்காக கலந்து கொண்டு அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். ஆனால் இவர் பாக்கியலட்சுமி சீரியலை விட்டு எதற்காக போனார் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதற்குப் பிறகு சில மாதங்களிலேயே தான் கர்ப்பமாக இருப்பதை ரித்திகா அறிவித்திருந்தார்.

Television Baakkiyalakshmi Rithika

ஆனாலும் கர்ப்பமான நேரத்திலும் தன்னுடைய கணவரோடு டிரடிஷனலாக புடவை அணிந்து கர்ப்பகால போட்டோ சூட் புகைப்படங்களை சில நாட்களுக்கு முன்பு ரித்திகா வெளியிட்டது இணையத்தில் பலருடைய வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும் பெற்றது. பொதுவாக தற்போதையுள்ள சூழ்நிலைகளில் அதிகமான மாடல் மற்றும் நடிகைகள் கர்ப்ப கால போட்டோ சூட் நடத்துகிறார்கள்.

அதில் வயிறு முழுக்க காட்டி வித விதமான ஆடை அலங்காரத்தோடு புகைப்படங்கள் எடுக்கிறார்கள். ஆனால் இவர் புடவையில் வயிறு வெளியே தெரியாத வகையில் தன்னுடைய கணவரோடு க்யூட்டாக எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமான வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் ரித்திகாவின் வளைகாப்பு நேற்று எளிமையாக நடைபெற்று இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு ஆசீர்வாதங்கள் வழங்கி இருக்கிறார்கள். அதிலும் பாடகர் அஜய் கிருஷ்ணா, நடிகை ஸ்ரீதேவி அசோக்குமார், நடிகை அம்மு அபிராமி, நடிகை ஜனனி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இயக்குனராக இருந்த பார்த்திவ் மணி போன்ற பலர் கலந்து கொண்டு வாழ்த்தி இருந்தனர். நம்முடைய சார்பாகவும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்ளலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+