வேறு சேனலில் அறிமுகமாகும் பாக்கியலட்சுமி சீரியல் அமிர்தா.. புது சீரியலில் இப்படி ஒரு கேரக்டரா?
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் நடிகை ரித்திகா அமிர்தா கேரக்டரில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் புது சீரியலில் ரித்திகா மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் ராமமூர்த்தி இருவரும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விரைவில் ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் அண்ணா என்ற சீரியலில் ரித்திகா நடிகர் மிர்ச்சி செந்திலின் தங்கையாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

போட்டி போடும் சேனல்கள்
சின்னத்திரையில் பல வருடங்களாக சன் டிவி சீரியல்கள் தான் ரெக்க கட்டி பறந்து வருகிறது. இந்த சேனல் சீரியலுக்கு அதிகமாக ரசிகர்களின் மத்தியில் மவுசு இருக்கிறது. சன் டிவி சீரியல்களை மட்டுமே பல ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வரும் நிலையில் தற்போது அதற்கு போட்டியாக பல சேனல்கள் முளைத்து கொண்டிருக்கின்றன. புதிது புதிதாக வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் சன் டிவியை தொடர்ந்து விஜய் டிவி இருந்து வருகிறது. அதைத்தொடர்ந்து ஜீ தமிழ் இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் விஜய் டிவிக்கு போட்டியாக ஜீ தமிழ் பல சீரியல்களை புதியதாக அறிமுகம் செய்கிறது.

டிஆர்பிக்காக போட்டி
சில வருடங்களுக்கு முன்பு செம்பருத்தி சீரியல் ஜீ தமிழில் டிஆர்பி யில் முன்னணி இடத்தை பிடித்திருந்தது. இந்த சீரியல் மூலமாக சன் டிவி சீரியலுக்கு டிஆர்பியில் ஜீ தமிழ் சவால் விட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அந்த சீரியலில் திடீரென கதாநாயகன் மாற்றப்பட்ட பிறகு அந்த அளவிற்கு போட்டி போடும் சீரியல்கள் இல்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் கார்த்திக் நடிக்கும் சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்தாலும், அது தற்போது தான் முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சன் டிவியில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த ரோஜா பிரியங்கா நல்கரியை ஜீ தமிழில் சீதாராமன் என்னும் சீரியலில் அறிமுகம் செய்து வைத்திருக்கின்றனர்.

புது சீரியல்
நாளுக்கு நாள் இந்த சீரியலுக்கும் டிஆர்பி ரேட்டிங் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அடுத்ததாக விஜய் டிவியில் டாப் சீரியலாக இருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து கதாநாயகியை ஜீ தமிழில் அறிமுகம் செய்து வைப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் ஜீ தமிழில் அடுத்ததாக அண்ணா என்ற சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அண்ணா சீரியல்
இந்த சீரியலில் மிர்ச்சி செந்தில் ஹீரோவாக நடிக்க நந்தினி சீரியல் மூலம் பிரபலமான நித்யா ராம் கதாநாயகியாக நடிக்க இருக்கிறாராம். அதோடு இந்த சீரியலில் மிர்ச்சி செந்தில் நான்கு தங்கைகளுக்கு அண்ணாவாக நடிக்க இருக்கிறதாக கூறப்படுகிறது. அதில் நான்கு தங்கைகளில் ஒருவராக பாக்கியலட்சுமி சீரியல் அமிர்தாவாக நடிக்கும் ரித்திகா தமிழ்ச்செல்வி கமிட் ஆகி ஆகியிருக்கிறாராம். அது மட்டும் அல்லாமல் மிர்ச்சி செந்திலின் அப்பா கேரக்டரில் பாக்கியலட்சுமி ராமமூர்த்தி கேரக்டரில் நடிக்கும் எஸ்.டி.பி ரோஸரி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மீண்டும் சீரியலில் அறிமுகம்
ஏற்கனவே விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் என பல ஹிட் சீரியல்களை கொடுக்க மிர்ச்சி செந்தில் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜீ தமிழில் சீரியலில் அறிமுகமாகிறார். இது அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருந்தாலும், ஏற்கனவே நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் அண்ணன் சென்டிமென்ட்டில் இவர் கலக்கி இருந்தது போல, தற்போதும் இந்த சீரியலிலும் வரப்போகிறதா? என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். இந்த சீரியல் ஏப்ரல் மாதத்தில் ஒளிபரப்பாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications