புது சீரியலில் கமிட்டான பாக்கியலட்சுமி சீரியல் சுசித்ரா.. அதுவும் எந்த சேனல்? டைட்டில் எது தெரியுமா? லீக்கான தகவல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த மெகா ஹிட் தொடரான பாக்கியலட்சுமி மூலம் வீடு தோறும் அறிமுகமானவர் நடிகை சுசித்ரா. குடும்பத்திற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யும் பாக்யா கதாபாத்திரத்தில் அவரின் இயல்பான நடிப்பு ரசிகர்களை ஆழமாகக் கவர்ந்தது.
இந்த சீரியல் வெற்றிக்கு பிறகு, தமிழில் புதிய சீரியலில் அவர் எப்போது நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அந்த காத்திருப்புக்கு தற்போது ஒரு சூடான அப்டேட் வெளியாகியுள்ளது.

புதிய சீரியல் அப்டேட்
விஜய் டிவியில் விரைவில் தொடங்க உள்ளதாக சொல்லப்படும் "ஆதலால் காதல் செய்வீர்" என்ற புதிய தொடரில் சுசித்ரா ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், இந்த செய்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது. "டீஸர் எப்போது?", "பாக்யா மாதிரி இன்னொரு மாஸ் கேரக்டரா?" என்ற கேள்விகள் ஏற்கனவே இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சுசித்ராவின் சின்னத்திரை பயணம்
தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான முகமாக மாறிய சுசித்ரா, பல மொழிகளில் ஒளிபரப்பான தொடர்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ஒளிபரப்பான ஸ்ரீவரு, நந்தினி போன்ற தொடர்கள் மூலம் அவர் கவனம் பெற்றார். குடும்ப கதைகளை மையமாகக் கொண்ட பாத்திரங்களில் அவரின் நடிப்பு பாராட்டப்பட்டது.
திரைப்படங்களிலும் தடம்
சின்னத்திரையைத் தாண்டி வெள்ளித்திரையிலும் சுசித்ரா தனது முகத்தை காட்டியுள்ளார். அவர் நடித்த திரைப்படங்களில் பிரம்மச்சாரி, சைவம் உள்ளிட்ட படங்கள் குறிப்பிடத்தக்கவை. இந்த படங்களில் சிறிய ஆனால் நினைவில் நிற்கும் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
பாக்கியலட்சுமி - ஒரு மைல்கல்
2020 ஆம் ஆண்டு தொடங்கிய பாக்கியலட்சுமி தொடர், ஒரு சாதாரண குடும்பத் தலைவியின் வாழ்க்கை போராட்டத்தை மிக நெருக்கமாக காட்டி TRP பட்டியலில் நீண்ட காலம் முன்னிலையில் இருந்தது. கணவரின் துரோகம், குழந்தைகளின் பொறுப்பு, தன்னம்பிக்கையுடன் மீண்டும் எழும் பெண் - இந்த பயணத்தை சுசித்ரா உணர்ச்சிப்பூர்வமாக எடுத்துச் சென்றதே அந்த தொடரின் மிகப்பெரிய பலமாக அமைந்தது.
ரசிகர்கள் காத்திருக்கும் ரீ-என்ட்ரி
இப்போது "ஆதலால் காதல் செய்வீர்" தொடரில் அவர் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், சுசித்ராவின் ரீ-என்ட்ரி மீண்டும் TRP-யை கலக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் நாளை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
சின்னத்திரையில் பாக்யா உருவாக்கிய மாயாஜாலம் போல, சுசித்ராவின் அடுத்த பயணமும் வெற்றிக் கதை எழுதுமா? - இதுதான் இப்போது ரசிகர்கள் மத்தியில் ஹாட் டாபிக். இந்த சீரியலிலும் இவருக்கு மூன்று குழந்தைகள் இருப்பது போலவும் அவர்களை சுற்றி கதை வருவது போலவும் இருக்கிறதாம். இந்த சீரியலிலும் கதை சுசித்ராவின் கேரக்டரை தான் மையப்படுத்தி இருக்கப் போவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications