தாய்லாந்தில் கனவை நிறைவேற்றிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகைகள்.. ஆளே மாறிட்டாங்களே
சென்னை: விஜய் டிவியில் 5 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் கடந்த வருடத்தில் முடிவுக்கு வந்தது. அந்த சீரியல் முடிந்த பிறகு அந்த சீரியலில் நடித்த நடிகைகள் திவ்யா கணேஷ் , அக்ஷிதா மற்றும் நேகா 3 பேரும் தாய்லாந்து சென்றிருக்கின்றனர். அப்போது அங்கு எடுத்த வீடியோக்கள், புகைப்படங்களை அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். அது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

வெயில் கொடுமை
ஏப்ரல் மாதம் பிறந்ததுமே வெயிலின் கொடுமையும் தலைவிரித்து ஆட தொடங்கிவிட்டது. வீட்டை விட்டு வெளியே வருவதற்கே யோசிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதனாலயே பலருக்கும் குளு குளுன்னு ஏதாவது இடத்திற்கு போகலாமா என்று ஆசை இருக்கும். அதுபோல பாக்கியலட்சுமி சீரியல் நடிகைகளுக்கும் தாய்லாந்து போக வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசையாக இருந்ததாம். அது ஒரு வழியாக இப்போது நிறைவேறி விட்டது என்று தாய்லாந்து போட்டோக்களை இவர்கள் வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியல் நடிகைகள்
சின்னத்திரையில் சீரியல் பார்ப்பவர்களுக்கு பாக்கியலட்சுமி சீரியல் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. காரணம் இந்த சீரியல் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை விஜய் டிவியில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலை பார்க்காதவர்கள் கூட இந்த சீரியலில் ப்ரோமோவை பார்த்திருப்பார்கள். அதிலும் சில காட்சிகள் எல்லாம் சோசியல் மீடியாவில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது. அதனால் சீரியல் பார்க்காத ரசிகர்களுக்கும் இந்த சீரியல் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
பாக்கியலட்சுமி ஜெனி
அதுபோல இளைஞர்களையும் பாக்கியலட்சுமி சீரியல் பார்க்க வைப்பதுற்கு காரணம் திவ்யா கணேஷ் தான். அவர் அந்த சீரியலில் ஜெனி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அதற்கு முன்பு ஒரு சில சீரியலில் நெகடிவ் கேரக்டரில் அவர் நடித்திருந்தாலும் அவருக்கு பாக்கியலட்சுமி சீரியல் தான் பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. அதற்கு பிறகு மகாநதி உட்பட ஒரு சில சீரியல்களில் நடித்தார். ஆனால் அதில் எல்லாம் பாதியிலேயே விலகிவிட்டார்.

பிக் பாஸ்
பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வந்த அடுத்த சில மாதங்களிலேயே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கடைசியில் அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகவும் மாறிவிட்டார். வைல்ட் கார்டு போட்டியாளராக பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திவ்யாவிற்கு முதல் வாரத்திலேயே சப்போர்ட் கிடைக்க தொடங்கி விட்டது. அதிலும் அவர் கம்ருதீன் மற்றும் பார்வதியை இறங்கி அடித்தது பலராலும் பாராட்டப்பட்டது.
அதுபோல சீரியலில் இனியா கேரக்டரில் நடித்த நேகாவையும் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இந்த சீரியலால் யார் வாழ்க்கை மாறியதோ இல்லையோ நேகாவின் வாழ்க்கை ரொம்பவே மாறியிருந்தது. பாக்கியலட்சுமி சீரியலின் ஆரம்பத்தில் அவர் ஸ்கூல் படித்துக்கொண்டிருந்தார். பிறகு காலேஜ் படிப்பு முடித்து கல்யாணமும் முடிந்தது போலத்தான் சீரியல் முடிவடைந்தது.
பல நாள் ஆசை
அந்த சீரியலில் அதிகமாக ட்ரோலில் சிக்கியது அவர்தான். அதிலும் இனியாவின் காலேஜ் டான்ஸ் வீடியோ எல்லாம் அந்த நேரத்தில் அதிகமாக ட்ரோலானது. இது ஒரு பக்கம் இருந்த சீரியலில் நடிக்கும் போது நண்பர்களாக இருந்தாலும் அந்த சீரியல் முடிவுக்கு வந்த பிறகு பலர் அவர் அவர்களுடைய வேலையை பார்த்து பிரிந்து போய் விடுவார்கள் ஆனால் இந்த சீரியல் முடிவடைந்து கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் ஆகப்போகிறது ஆனாலும் நாங்கள் எப்போதும் இணை பிரியாத தோழிகள் என்று இவர்கள் மூன்று பேரும் நிரூபித்து இருக்கிறார்கள்.
தாய்லாந்தில் ஜாலியாக திவ்யா கணேஷ், அக்ஷிதா, மற்றும் நேகா சுற்றி திரிந்த புகைப்படங்கள் வீடியோக்களை மூன்று பேரும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்கள். திவ்யாவிற்கு தாய்லாந்து போக வேண்டும் என்று பல நாள் ஆசையாம். ஆனால் அது இப்போதுதான் நிறைவேறி இருக்கிறது என்று திவ்யா குறிப்பிட்டிருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications