பாக்யா பக்கத்தில் பழனி.. ஈஸ்வரி என்ன இப்படி மாறிட்டாங்க? இனியாவுக்கு புது காதல்! கடைசியில் தான் ட்விஸ்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் பன்னிரண்டாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் பாக்கியா மற்றும் பழனிச்சாமிக்கு கல்யாணம் நடத்தி வைக்க வேண்டும் என்று பழனிச்சாமியின் அம்மா ஆசைப்பட்டு கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் புதியதாக அறிமுகமாகி இருக்கும் பழனிச்சாமியின் அக்கா மகள் விமலுக்கும், இனியாவுக்கு காதல் ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பழனிச்சாமியுடன் எழில் இனியா, ஈஸ்வரி, ராமமூர்த்தி என எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பழனிச்சாமி எங்க அம்மா தெரு முழுக்க வாழைமரம் கட்டி சீரியல் செட் போட்டு பாட்டு போட சொல்லி இருந்தாங்க. நான் அதெல்லாம் வேண்டான்னு சொல்லிட்டேன் என்று சொல்ல இனியா ஒரு டிஜே மியூசிக் போட்டிருக்கலாம் என்று சொன்னதும்,

பாட்டு தானே ஸ்பீக்கர் ரெடியா இருக்கு போன்ல கனெக்ட் பண்ணி பாட்டை போட்டு விட்டால் முடிஞ்சு போச்சு என்று சொல்ல ராமமூர்த்தி நல்ல பழைய பாட்டா ஒன்னு சூப்பரா போட்டு விடு என்று சொல்ல, அதெல்லாம் முடியாது இப்போ உள்ள டிரெண்ட் பாட்டு தான் அங்கிள் பிறந்த நாளில் போடணும் என்று புது பாட்டு போட்டு கொண்டாடலாம் என்று சொல்லி எழில் பாட்டை போட, அதற்குப் பழனிசாமியின் அக்கா மகன் விமல் டான்ஸ் ஆடிக்கொண்டே கீழே இறங்கி வந்து வர ஈஸ்வரி, ராமமூர்த்தி எல்லார் முன்பும் குத்தாட்டம் போடுகிறார்.
பிறகு பழனிச்சாமி இது என்னுடைய அக்கா மகன் என்று எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறார். எல்லோரிடமும் சகஜமாக பேசிக் கொண்டிருக்கும் விமல் இனியாவை பார்த்ததும் வியந்து போக இனியாவும் விமலை பார்த்து வெட்கப்படுகிறார். அதற்கு பிறகு இனியா தனியா வெளியே போன் பேசிக் கொண்டிருக்க அங்கு வரும் விமல் தன்னை அறிமுகம் செய்து கொண்டு இனியா பற்றி தெரிந்து கொள்கிறார்.
மறுபக்கத்தில் பழனிச்சாமியின் அக்கா கல்யாணத்தை பத்தி பாக்கியா கிட்ட பேசலாம் என்று சொல்ல, அதற்கு பழனிச்சாமியின் தங்கச்சி வேண்டாம் இந்த நேரம் சரியா இருக்காது என்று சொல்கிறார். அதோடு பாக்யா கிட்ட பேசாம நாம அவங்க அத்தை ஈஸ்வரி அம்மா கிட்ட பேசலாம் என்று பேசிக்கொண்டு இருக்கும்போதே ஈஸ்வரி அங்கு வந்து என்ன பேசுறீங்க என்று கேட்க? அதற்கு எதையோ சொல்லி சமாளித்து விடுகிறார்கள்.

பிறகு விமல் இனியாவின் போன் நம்பர், காலேஜ் பற்றி கேட்க இனியா அதெல்லாம் தர முடியாது என்று சொல்கிறார். அதற்கு விமல் சரி நானே அதை எல்லாம் கண்டுபிடித்து விடுகிறேன் என்று சொல்ல, பார்க்கலாம் என்று இருவரும் பேசிக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் அங்கு வரும் பழனிச்சாமியின் தங்கச்சி அவருடைய அக்காவை கூப்பிட்டு பாரு நாம பழனிச்சாமிக்கும் பாக்யாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு பார்த்தா உன் பையன் அவன் கல்யாணத்துக்கு ரூட் போடுறான் என்று சொல்ல அதற்கு அவரும் சரி என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என்று சொல்லி இனியா மற்றும் விமலை வீட்டிற்குள் கூப்பிடுகின்றனர்

பிறகு பழனிச்சாமி கேக் வெட்ட விமல் போட்டோ எடுக்கிறார். அப்போது பாக்யாவின் குடும்பத்தார் பழனிச்சாமி உடன் போட்டோ எடுத்துக் கொள்ள வந்தபோது பழனிச்சாமி அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த பாக்யாவை கூப்பிட்டு தன்னுடைய பக்கத்தில் நிற்க வைத்து போட்டோ எடுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications