பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கர்ப்பம்? ஈஸ்வரிக்கு கிடைத்த அதிர்ச்சி.. புலம்பும் பழனிச்சாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் 17-ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் எழில் மற்றும் அமிர்தா குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஈஸ்வரி பிரச்சனை செய்து கொண்டிருக்கும் நிலையில் ராதிகா வாந்தி எடுக்க அதை வைத்து கோபி கலாட்டா செய்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இன்றைய எபிசோடில் அமிர்தாவின் அம்மா ஈஸ்வரியிடம் அமிர்தாவிற்கு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசையா தான் இருக்கிறா. ஆனால் மாப்பிள்ளை தம்பி தான் இப்ப வேணாம்னு சொல்லுறாரு என்று சொல்ல, ஈஸ்வரி அவன் அப்படித்தான் நான் ஒன்னு சொன்னா அவன் ஒன்னும் செய்வான் என்று திட்டுகிறார். அதற்கு அமிர்தாவின் அம்மா நான் மாப்பிள்ளை கிட்ட பேசுறேன் என்று சொல்கிறார்.

Baakiyalakshmi Serial April 17th promo and episode full update

அந்த நேரத்தில் எழில் வீட்டிற்கு வர எழில் அவரை பஸ் ஏற்றி விடுவதற்காக கூட்டிக்கொண்டு போகிறார். மறுபக்கத்தில் பழனிசாமி பாக்கியாவை நினைத்து சிரித்துக்கொண்டே இருக்க, அவருடைய அம்மாவும் அக்காவும் நீ பாக்கியாவை பார்த்தியா என்று கேட்கின்றனர். அதற்கு ஆமாம் என்று சொல்ல, அப்போ பாக்கியா கிட்ட கல்யாண விஷயம் பற்றி பேசினியா என்று சொல்ல இப்போதைக்கு வேண்டாம் என்று பழனிசாமி சொல்கிறார்.

அதற்கு அவருடைய அம்மாவும் அக்காவும் கல்யாணத்தை பற்றி பேசுவதற்கு நாள் கிழமை எல்லாம் கிடையாது. அதற்காக காலத்தில் பேசி முடித்துவிடனும். இல்லனா தடைப்பட்டு கொண்டே போகும் என்று பேசிக்கொண்டு இருக்க, அதற்கு பழனிசாமி அன்பு பற்றி பாட்டு பாடி கொண்டு போகிறார். இதை அடுத்து செல்வி பாக்யாவின் முகத்தை பார்த்து சிரித்துக் கொண்டு இருக்கிறார்.

உன்னையும் பழனிசாமியையும் நினைத்து பார்த்தேன் என்று சொல்ல, பாக்கியா வழக்கம் போல செல்வியை திட்டிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் அமிர்தாவின் அம்மாவை எழில் பைக்கில் கூட்டிட்டு போகும் போது அவர் பைக்கை நிறுத்த சொல்லி எழில் இடம் குழந்தையை பற்றி பேச, அதற்கு எழில் நானும் அமிர்தாவும் பேசி முடிவெடுத்து விருப்பப்பட்டு குழந்தை பெத்துக்கணும்.

ஆனா நீங்க எல்லாரும் கொடுக்கிற பிரஷரில் நாங்க குழந்தை பெத்துக்க கூடாது. அதுபோல அமிர்தாக்கும் நிலாவுக்கும் எந்த பிரச்சனையும் வராது என்று அமிர்தா அம்மாவுக்கு ஆறுதல் கூறுகிறார். அடுத்த கட்டத்தில் ரெஸ்டாரெண்ட்டுக்கு வந்த ராதிகா கோபி இடம் பேசிக்கொண்டு இருக்க கோபி ராதிகாவை வெயிட் பண்ண வைத்து ப்ரைடு ரைஸ் ரெடி பண்ணி வந்து டின்னர் சாப்பிட்டு கிளம்பும் போது செஃப் வீட்டுக்கு கிளம்புகிறேன் என்று சொல்ல, நாளைக்கு வந்து விடுவீங்களா? உங்க வீட்டு அட்ரஸ் எனக்கு வாட்ஸ் அப் பண்ணி வைங்க என்று ரஃப் அண்ட் டப்பாக பேசுகிறார்.

இதனால் ராதிகா டென்ஷன் ஆகிறார். பிறகு எழில் வீட்டிற்கு வந்து ஈஸ்வரி இடம் குழந்தை பற்றி அமிர்தா அம்மா கிட்ட பேசினீங்களா? என்று கேட்க, அதற்கு ஈஸ்வரி நான் பேசுறதுல என்ன தப்பு இருக்கு? என்று கேட்கிறார். அதற்கு எழில் இந்த வீட்ல திரும்பவும் குழந்தையை பற்றி பேசாதீங்க என்று சொல்ல ஈஸ்வரி நீங்க குழந்தை பெத்துக்குற வரைக்கும் நான் பேசுவேன் என்று சொல்கிறார் இப்படியாக இன்று எபிசோடு முடிவடைகிறது.

நாளைக்கு என்று வெளியான வீடியோவில் ராதிகா வாந்தி எடுக்கிறார். அதற்கு கோபி ராதிகாவுக்கு தலையைப் பிடித்து விட்டபடியே என்னாச்சு என்று விசாரிக்கிறார். அதற்கு ராதிகா ஒண்ணும் இல்லை சாப்பிட்டது சேரலைன்னு நினைக்கிறேன் என்று சொல்ல, அதற்கு கோபி உன்னுடைய முகத்தை பார்த்தா இது வேற வாந்தி மாதிரி தெரியுது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+