பாக்கியலட்சுமி: ஈஸ்வரி மாறவே மாட்டீங்களா? பட்டும் திருந்தாத பாக்யா.. இது உங்களுக்கு தேவையா ராதிகா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்க போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் செழியன் மற்றும் ஜெனி மீண்டும் சேர்ந்தது தன்னால்தான் என்று மொத்த கதையையும் ஈஸ்வரி மாற்றி பேசுகிறார்.
அதே நேரத்தில் பாக்யா ராதிகாவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது ஈஸ்வரி பற்றி பேசிய விஷயம் ராதிகாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் அமிர்தாவும் செல்வியும் என்ன ஆச்சுன்னு தெரியல பாக்கியா போனை கூட எடுக்க மாட்டேங்கறாங்க என்று பேசிக் கொண்டிருக்கும்போதே எழிலும் பாக்கியாவும் அங்கே வந்து செழியனும் ஜெனியும் சேர்ந்து விட்ட விஷயத்தை சொல்லி சந்தோஷப்படுகின்றனர். அப்போது செல்வி, ஜெனி பிரச்சனையையும், அமிர்தா பிரச்சனை ரெண்டையுமே அக்கா தீர்த்து வச்சிட்டாங்க பாக்யா அக்கா மாதிரி மாமியார் கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணும் என்று சொல்ல அதற்கு அமிர்தா சரியா சொன்னீங்க அக்கா என்று சந்தோஷப்படுகிறார்.
அடுத்ததாக ராமமூர்த்தி மற்றும் பாக்கியா என இருவரும் செழியன் ஜெனி சேர்ந்த விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது கிச்சனிலிருந்து ராதிகாவும் இதை கேட்டுக் கொண்டிருக்கிறார். அதேபோல சோபாவில் உட்கார்ந்து இவர்கள் பேசுவதை கேட்ட ஈஸ்வரி எழுந்து வந்து செழியனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க போறேன்னு நான் பேசினதனாலதான் இந்த பிரச்சனை தீர்ந்து இருக்கு.
நான் என்ன பேசினா இந்த வீட்டில என்ன நடக்கும் என்று எனக்கு தெரியும் அதனால தான் நான் செழியனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணனும் என்று பேசினேன் என்று கதையை மாற்றி பேசுகிறார். பிறகு ராதிகா பாக்யாவிடம் கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்கும் போது பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது நீங்க செழியன் ஜெனியை சேர்த்து வைக்க ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பீங்க, ஆனா அத்தை அதையெல்லாம் அவங்க செஞ்ச மாதிரி பேசிட்டு போறாங்களே உங்களுக்கு கோபமே வரலையா? என்று கேட்க
அதற்கு பாக்கியா இதெல்லாம் என்ன புதுசா எனக்கு பழகி போச்சு. நம்ம அத்தை தானே என்று ஈசியா எடுத்துப்பேன் என்று சொல்ல, என்னது நம்ம அத்தையா என்று ராதிகா கேட்க அதற்கு பாக்யா சிரித்தபடியே எனக்கு வேலை இருக்கு என்று சொல்லி சமைக்க தொடங்கி விடுகிறார். அடுத்த கட்டத்தில் பாக்கியா சமையல் முடித்துவிட்டு யாருமே சாப்பிட வரவில்லை என்பதால் மேலே வந்து பார்க்க அங்கே ரூமில் செழியன், ஜெனி, இனியா, எழில், அமிர்தா, நிலா பாப்பா என்று எல்லோரும் ஒன்றாக இருந்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அதை பார்த்து பாக்கியா ஆனந்த கண்ணீர் விடுகிறார். அப்போது செழியன் கீழே வந்து எல்லாத்துக்கும் நீதான்மா காரணம் என்று நன்றி சொல்லி கட்டிப்பிடித்து கண்கலங்குகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications