ராதிகா கர்ப்பத்தை கண்டுபிடித்த பாக்யா.. இவ்வளவு தைரியமா பேசிட்டாங்களே? இனியாவா இப்படி செஞ்சது?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் 23ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் ராதிகாவின் நடவடிக்கை பார்த்து அவர் கர்ப்பமாக இருப்பதாக செல்வி சொல்ல பாக்கியா குழப்பம் அடைகிறார். மறுபக்கத்தில் பழனிச்சாமிக்கு பாக்கியா இனியாவால் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருக்கிறார்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பித்தில் பழனிச்சாமி போட்டோவை பார்த்து பூமர் அங்கிள் மாதிரி இருக்கு என்று இனியா கிண்டல் செய்து கொண்டிருக்க, அதற்கு பாக்யா அப்படியெல்லாம் பேசக்கூடாது. அவர் நமக்காக எவ்வளவோ உதவி பண்ணி இருக்கிறார்கள். அப்படி பேசினால் அவர் மனசு கஷ்டப்படும் இல்லையா? என்று சொல்ல, அதற்கு இனியா அப்போ நல்லா இருக்கு என்று நீங்களே வாய்ஸ் மெசேஜ் பண்ணுங்க அப்போதான் நம்ம ஸ்டேட்டஸுக்கு அவங்க ரிப்ளை பண்ணுவாங்க என்று சொல்ல அதற்கு பாக்யா உங்க ஷர்ட் எல்லாம் அழகா இருக்கு என்று மெசேஜ் செய்கிறார்.

பாக்கி அனுப்பிய வாய்ஸ் மெசேஜை பழனிச்சாமி மீண்டும் மீண்டும் கேட்கிறார் நன்றி.. மிக்க நன்றி என்று திருப்பி வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறார். தன்னுடைய ஃபோனில் மேடம் என்று பாக்யாவின் பெயரை சேவ் பண்ணி வைத்திருந்த நிலையில் அதை பாக்கியலட்சுமி என்று மாற்றுகிறார். மறுபக்கத்தில் ராதிகா கோபியிடம் குழந்தை விஷயமா என்ன முடிவெடுத்து இருக்கீங்க? அம்மா தான் குழந்தை பெத்துக்க சொல்லிட்டாங்களே! என்று கேட்க அதற்கு கோபி நான் தாத்தாவாகி திரும்பவும் அப்பாவாக போகிறேன்.
எல்லோரும் என்னை என்ன சொல்லுவாங்க பேசாம அபார்ஷன் பண்ணிடலாமா? என்று கேட்க ராதிகா அதிர்ச்சியாகி தலையணையை தூக்கி அடிக்கிறார். பிறகு கோபி நான் இனி அபார்ஷன் பற்றி பேச மாட்டேன் என்று காலை பிடித்து விடுகிறார். அதற்குப் பிறகு ராதிகா கோபி இடம் பாக்யா கர்ப்பமாக இருக்கும் போது நீங்க எப்படி பீல் பண்ணினீங்க என்று கேட்க அதற்கு கோபி ரொம்ப சந்தோஷப்பட்டேன்.
அவளை எனக்கு பிடிக்காது. ஆனால் குழந்தை வரப்போகுதுன்னு தெரிஞ்சதும் நான் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தேன் என்று சொல்ல, பாக்கியா கர்ப்பமானால் மட்டும்தான் சந்தோஷப்படுவீங்க நான் கர்ப்பமானால் அபார்ஷன் பண்ண சொல்லுவீங்களா என்று திரும்பவும் கோபியை அடிக்கிறார். அதோடு இந்த விஷயத்தை வீட்ல சொல்லணும் எப்ப சொல்ல போறீங்க என்று ராதிகா கேட்க அதற்கு கோபி இப்போ ரொம்ப டயர்டா இருக்கு சாப்பிட்டு படுத்து ரெஸ்ட் எடுக்கலாம்.

இந்த விஷயத்தை காலையில் பேசிக்கலாம் என்று சொல்கிறார். அடுத்ததாக கோபி தூங்கிக் கொண்டிருக்கும் போது செழியன் குழந்தையை வைத்துக்கொண்டு தாத்தா பாட்டி இடம் உட்கார்ந்து கொண்டு இருக்கும்போது ராதிகாவுக்கு பிரசவமாகி குழந்தையுடன் வீட்டுக்கு வருவது போன்றும், வீட்டிற்கு வந்த போது ஈஸ்வரியிடம் உங்க பேர குழந்தையை பாருங்க என்று சொல்ல, ஈஸ்வரி குழந்தைக்கு முத்தம் கொடுக்க,
ராமமூர்த்தி பேரன் பேத்தி எடுத்த பிறகு பிள்ளை கேட்குதா? என்று திட்டுகிறார். பிறகு கோபி அண்ணன் செழியன் பாரு என்று குழந்தைக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். பதிலுக்கு செழியன் குழந்தை இடம் கோபியின் குழந்தையை காட்டி சித்தப்பாவை பாரு என்று காட்டுகிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியான கோபி என்னது சித்தப்பாவா என்று கேட்க ராமமூர்த்தி செழியனுக்கு தம்பின்னா அவன் குழந்தைக்கு சித்தப்பா தானே என்று நக்கல் அடிக்கிறார்.

பிறகு ஏதோ சூடாக இருக்கு என்ற குழந்தையின் துணியை கோபி விலக்கிப் பார்க்க வாயிலேயே உச்சா அடிக்கிறது. இப்படியாக கோபி கனவு கண்டு முழித்து விடுகிறார். மறுநாள் காலையில் ராதிகா கோபியை எழுப்பி என்ன முடிவெடுத்து இருக்கீங்க என்று கேட்கிறார் அதற்கு கோபி இன்னைக்கு ஒரு நாள் டைம் கொடு நான் வீட்டில் சொல்லியிருந்தேன் என்று சொல்கிறார்.

பிறகு ராதிகா காபி போட வருகிறார். பாக்யா கடுகு தாளிக்கும் போது வரும் ஸ்மெல்லை தாங்க முடியாமல் ராதிகா வாந்தி எடுக்க ஓடுகிறார். இதை பார்த்து செல்வி இந்த அம்மா என்ன புள்ள தாச்சி பொண்ணு மாதிரி தாளிப்பு வாசனைக்கு எல்லாம் வாந்தி எடுக்குது என்று கேட்கிறார். பாக்யாவும் யோசித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications