பாக்யா விஷயத்தில் பழனிச்சாமி எடுத்த முடிவு.. குழந்தையிடம் ஈஸ்வரி காட்டும் பாகுபாடு.. எழிலின் அதிரடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் இரண்டாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் பாக்யா எழில் மற்றும் அமிர்தா வாழ்க்கையில் பிரச்சனையாக இருந்த கணேஷை போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதை தொடர்ந்து செழியன் மற்றும் ஜெனி வாழ்க்கையில் இருந்த பிரச்சனையையும் தீர்த்து வைத்திருக்கிறார்..
அடுத்ததாக பாக்கியா பிசினஸில் இருந்த பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக பழனிச்சாமி வந்திருக்கிறார். அதே நேரத்தில் வீட்டில் ஈஸ்வரி புது பிரச்சனையை உருவாக்குகிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியா, பழனிச்சாமி செல்வி, எழில் என நான்கு பேரும் ரெஸ்டாரண்டில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு காரில் வரும் கஸ்டமர்கள் பார்க் பண்ண இடமில்லாமல் வேறு ஹோட்டலுக்கு போய் விடுவதை பழனிச்சாமி பார்த்து நான் இதை உங்களிடம் முதல் நாள் ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவின் போது சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அப்போ நெகட்டிவா சொல்ல வேண்டாம் என்று தான் சொல்லல.
அதனால முதலில் நாம் இந்த பார்க்கிங் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்கணும் என்று சொல்லிவிட்டு கிளம்பி போகிறார். அப்போது செல்வி, பாக்யா அக்காவுக்கு மட்டும்தான் ஓடிவந்து உதவுவீங்களா? என்று கலாய்க்கிறார். பிறகு எழிலை கூப்பிட்டு இவங்க இருவரையும் பார்க்கும்போது உனக்கு என்ன தோன்றுகிறது என்று கேட்க, அதற்கு எழில் அவங்க ரெண்டு பேரும் நல்ல பிரண்ட் என்று சொல்ல, செல்வி இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று பேச்சை தொடங்குகிறார்.
அதற்கு எழில் இதைப் பற்றி நான் ஏற்கனவே அம்மாகிட்ட பேசி அடி வாங்கிட்டேன் என்று சொல்கிறார். அதற்கு செல்வி இருந்தாலும் அக்காவை அப்படியே விட முடியாது என்று சொல்கிறார். அடுத்ததாக பழனிச்சாமி காரில் போய்க்கொண்டிருக்கும் போது ஒரு இடத்தை பார்த்து அந்த இடத்தைப் பற்றி விசாரித்து பாக்யாவிடம் பேசுகிறார். அதற்கு பாக்கியா வாடகை அதிகமாக இருந்தால் என்னால் கொடுக்க முடியாது என்று சொல்கிறார்.

அதற்கு பழனிச்சாமி ஆரம்பத்தில் இந்த மாதிரி செலவுகள் எல்லாம் முதலீடு தான் என்று சொல்கிறார். பிறகு பாக்கியா அவரிடம் சரி பேசிப்பார்க்கலாம் என்று சொல்கிறார். அதை தொடர்ந்து ஈஸ்வரி வீட்டில் ஜெனி குழந்தையை வைத்து கொஞ்சி கொண்டிருக்கும் போது ராமமூர்த்தி வெளியில் கிளம்புகிறார். அந்த நேரத்தில் நிலா பாப்பாவும் ஓடி வந்து தாத்தாவிடம் சாக்லேட் கேட்க அதற்கு தாத்தா நான் இப்போ வெளியே தான் போறேன் வீட்டுக்கு வரும்போது வாங்கிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
நிலா குழந்தையை தொட்டு தொட்டு விளையாட ஈஸ்வரி நிலவை சோபாவில் இருந்து கீழே இறக்கி விடுகிறார். பிறகு ராதிகா நிலாவை கூட்டி சென்று வெளியில் விளையாட எழில் வந்ததும் நிலா அப்பா என்று ஓடி விடுகிறாள். பிறகு நிலா எழிலிடம் பாட்டி என்னை திட்டினாங்க என்று சொல்ல, அதற்கு ஈஸ்வரி அவ குழந்தையை தொட்டு தொட்டு விளையாடிட்டு இருந்தா அவளும் குழந்தை அதனால தான் விளையாட வேண்டாம் என்ற சொன்னேன் என்று சொல்ல எழில் முகம் மாறுகிறது.
பிறகு நிலாவே கூட்டிக்கொண்டு மாடிக்கு போய் விடுகிறார். மறுபக்கத்தில் கோபி ரெஸ்டாரண்டில் பிசினஸ் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது என்று ராதிகாவும் கோபியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வேலை செய்யும் மாஸ்டர் தான் புதியதாக செய்திருக்கும் டிஸ்ஸை கொண்டு வந்து கொடுக்க அதை சாப்பிட்டு பார்த்த கோபி ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து பேசுகிறார்.
அதற்கு ராதிகா இப்படி நீங்க புகழ்ந்து பேசினா நாளைக்கு அவங்க சொல்றதை தான் நாம கேட்க வேண்டியது இருக்கும். கொஞ்சம் ஸ்டெட்டா இருங்க என்று சொல்ல அதற்கு கோபி சரி இனி நான் ஸ்டெட்டாகவே இருக்கிறேன் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications