ஈஸ்வரி இந்த அவமானம் தேவையா? எழில் கொடுத்த குட்டு.. கோபிக்கு விழுந்த பேரிடி.. சந்தோஷத்தில் பாக்யா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மார்ச் 4ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ஈஸ்வரி அமிர்தாவை குழந்தை பெற்றுக்கொள்ள சொல்லி வற்புறுத்தியதால் எழில் ஈஸ்வரியிடம் நேரடியாகவே வார்னிங் கொடுக்கிறார்.

அதே நேரத்தில் பாக்யாவுக்கு பிசினஸில் இருந்த பிரச்சனையை பழனிசாமி தீர்த்து வைக்கிறார். ஆனால் சற்றும் எதிர்பாராமல் கோபிக்கு பிசினஸில் பெரிய அதிர்ச்சி கிடைக்கிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Baakiyalakshmi Serial April 4th promo and episode full update

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியா ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி மூவரும் பேசிக்கொண்டிருக்கும்போது எழில் கீழே வந்து ஈஸ்வரியிடம் அமிர்தா கிட்ட என்ன கேட்டீங்க என்று கேட்க, அதற்கு ஈஸ்வரி எல்லா வீட்டிலும் கேட்கிறதை தான் கேட்டேன். அதுக்குள்ள உன் பொண்டாட்டி வந்து உன்கிட்ட பத்த வச்சுட்டாளா என்று அமிர்தாவை தப்பு தப்பாக பேச அதற்கு எழில் குழந்தையை பற்றி நீங்க ஏன் அமிர்தா கிட்ட கேக்குறீங்க?

இனிமே அவ கிட்ட இதை பத்தி கேட்காதீங்க என்று சொல்கிறார். அதற்கு ஈஸ்வரி ஏன் நான் கேட்கக் கூடாதா? என்று கேள்வி கேட்க, அதற்கு எழில் நீங்க என்கிட்ட வேணா கேளுங்க. என்ன அடிங்க, திட்டுங்க, இல்ல கோச்சுக்க கூட செய்யுங்க ஆனால் அமிர்தா கிட்ட இதை பத்தி இனிமே கேட்காதீங்க என்று சொல்கிறார். ஆனாலும் ஈஸ்வரி பேசிக்கொண்டே இருக்க அதற்கு எழில் குழந்தை விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது நானும் அமிர்தாவும் தான்.

நீங்க அதில் தலையிடாதீங்க என்று அதிர்ச்சி கொடுக்கிறார். இதைக் கேட்டு ஈஸ்வரி உடைந்து போய் உட்காருகிறார். அடுத்ததாக பாக்யாவை பிடித்து என்ன புள்ள வளர்த்து வெச்சிருக்க என்று சத்தம் போட அதற்கு பாக்கியா, நான் நல்லா தான் வளர்த்து வச்சிருக்கேன். உங்க பையனுக்கு நீங்க சொல்லிக் கொடுக்காததை எல்லாம் நான் சொல்லிக் கொடுத்து வளர்த்து இருக்கிறேன் என்று பாக்யாவும் அவமானப்படுத்தி பேசுகிறார்.

Baakiyalakshmi Serial April 4th promo and episode full update

அதோடு இப்பதெல்லாம் காலம் மாறிப்போச்சு யாரும் கல்யாணமான பத்தாவது மாசத்துலயே புள்ள பெத்துக்கிறது கிடையாது. அவங்களுக்கு எப்போ தோணுதோ அப்போதான் பெத்துக்குவாங்க. என் பையனுக்கு எது சரியா தோணுதோ அதை செஞ்சுட்டு போறான். அவன் பொண்டாட்டிக்காக சப்போர்ட் பண்ணுறதை பார்க்கும்போது எனக்கு சந்தோஷமா தான் இருக்கு. அவன் சரியா தான் இருக்கிறான். அதனால அவன் பக்கத்துல தான் நான் நிற்பேன் என்று சொல்ல, அதற்கு ஈஸ்வரி கோபித்துக் கொண்டு ரூமுக்கு போய்விடுகிறார்.

பிறகு ராமமூர்த்தியிடம் நான் எதுவும் தப்பா பேசவில்லையே மாமா என்று பாக்கியா வழக்கம் போல கேட்க, அதற்கு ராம மூர்த்தியும் நீ சரியா தாமா பேசின, ஈஸ்வரி தான் எல்லார் மேலேயும் இருக்கிற பாசத்தால தேவையில்லாத விஷயத்தை திரும்ப திரும்ப பேசிட்டு இருக்கா என்று சொல்லிவிட்டு அவரும் ரூமுக்கு போய் விடுகிறார்.

அடுத்ததாக பழனிச்சாமி பாக்யாவின் ரெஸ்டாரன்ட் பக்கத்தில் இருக்கும் இடத்தில் கார் பார்க்கிங் வைப்பதற்காக அவரிடம் பேசி பத்தாயிரம் ரூபாய்க்கு சம்மதம் வாங்க அதற்கு பாக்யா சந்தோஷப்படுகிறார். மறுபக்கத்தில் கோபி 150 சாப்பாடு ஆர்டர் ரெஸ்டாரண்டுக்கு வர, அங்கு வேலை செய்பவர்கள் எல்லாம் அப்படியே நின்று கொண்டிருக்கிறார்கள்.

Baakiyalakshmi Serial April 4th promo and episode full update

என்னவென்று விசாரிக்க அங்கு செப் வரவில்லை, அவர் லீவ் என்று சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார். பிறகு அங்கு இருப்பவர்கள் யாருக்கும் சமைக்க தெரியாது என்று எல்லோரும் சொல்ல கோபி என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக்கொண்டு ராதிகாவுக்கு போன் போட ராதிகா என்னால ஒன்னும் பண்ண முடியாது எனக்கு ஆபீஸ்ல மீட்டிங் இருக்கு என்று சொல்லி போனை வைத்து விடுகிறார்.

அதற்கு அடுத்து சில நிமிடங்களில் ஆர்டர் கொடுத்தவர் மீண்டும் கோபிக்கு போன் போட்டு இன்னும் சாப்பாடு வரவில்லை என்று மிரட்டி விட்டு போனை வைக்கிறார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் கோபி ஈஸ்வரிக்கு போன் போட்டு நான் பெரிய பிரச்சனையில் இருக்கிறேன். செப் லீவு என்று ரெஸ்டாரண்டில் நடந்ததை சொல்ல ஈஸ்வரியும் அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+