பாக்கியலட்சுமி சீரியலில் இப்படி பண்ணிட்டாங்களே? மீண்டும் வேதாளம் முருங்கமரம்.. இனி இதுதான் கதையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் ஒன்பதாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் செழியன் மற்றும் எழில் வாழ்க்கையில் பாக்கியா பிரச்சனையை தீர்த்து வைத்ததும் அடுத்ததாக பாக்யாவுக்கும் பழனிச்சாமிக்கும் காதல் கதையை தொடங்கி விட்டார்கள்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ராதிகா கோபியின் ரெஸ்டாரண்டிற்கு வந்திருக்கும் போது கோபி அங்கு இருக்கும் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். அதோடு எல்லோருக்கும் சொன்ன மாதிரி டெலிவரி பண்ணியாச்சு என்று சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார். அப்போது ராதிகா தன்னை பாராட்டவில்லை என்று கோபப்பட அதற்கு ராதிகா நீங்க என்ன சின்ன பிள்ளையா ஒரு சின்ன வேலையை முடிச்சிட்டீங்கன்னு ஒவ்வொரு முறையும் பாராட்டிக்கிட்டு இருக்க என்று திட்டுகிறார்.

Baakiyalakshmi Serial April 9th promo and episode full update

அதற்கு கோபி எம்பிளாய் கிட்ட என்ன ரொம்ப ஃப்ரீயா இருக்க கூடாதுன்னு சொல்லி இருந்தியே, இப்ப பாரு நான் என்ன பண்ணுகிறேன் என்று என்னை சொல்லி செஃப்பை வரச்சொல்லி என்னை கேட்காமல் கொள்ளாமல் எப்படி நீங்கள் லீவு போடலாம் என லீவு போடக்கூடாது எந்த ஒரு எமர்ஜென்சியாக இருந்தாலும் என்ன கேட்டு தான் லீவு போடணும்.

திரும்பவும் இந்த மாதிரி நடந்துச்சுன்னா அவ்வளவுதான் உங்களை வேலையை விட்டு தூக்கிடுவேன் எதை பத்தி யோசிக்க மாட்டேன் என்று ஓவராக திட்டி கொண்டிருக்க, ராதிகா போதும் என்று நிறுத்தி செஃப்பை அனுப்பி வைக்கிறார்.

அதற்கு கோபி எப்படி நான் திட்டி இருந்தேனா என்று கேட்க, அதற்கு ராதிகா இப்படி ஒரேயடியா அவரை ஓட வச்சிருவீங்க போல என்று திட்டுகிறார். அதற்கு கோபி இப்படி பண்ணினாலும் தப்பு அப்படி பண்ணினாலும் தப்பு என்று சொல்கிறா என்று புலம்பி கொண்டிருக்கிறார். அடுத்ததாக ரெஸ்டாரண்டுக்கு வந்த பாக்யா செல்வி மற்றும் அமிர்தாவை கூப்பிட்டு பழனிச்சாமி அம்மா பேசுறதுக்காக கூப்பிட்டு இருந்தாங்க என்று சொல்ல,

அதற்கு செல்வி அண்ணன் உன் கிட்ட பேச வெட்கபட்டுகிட்டு அவங்க அம்மா கிட்ட சொல்லி பேசினாரா? என்று கிண்டல் பண்ணுகிறார். அதற்கு பாக்கியா என்ன ஏதோ உளறிக்கிட்டு இருக்க, நாளைக்கு பழனிச்சாமி சாரோட பிறந்தநாள் அதனால சமையல் ஆர்டர் எனக்கு கொடுத்திருக்காங்க என்று சொல்ல, செல்வி ஓ இவ்வளவுதான் விஷயமா என்று கூறுகிறார்.

பிறகு பாக்யா நாளைக்கு என்ன சமைக்கலாம் என்று யோசித்து யோசித்து சிரித்துக் கொண்டே லிஸ்ட் போட அதை பார்த்த செல்வி அமிர்தாவிடம் அக்காவுக்குள்ள நட்பை தாண்டி ஏதோ ஒன்னு இருக்கு என்று சொல்கிறார். அதற்கு அமிர்தா சந்தோசம் தான் அப்படி இருந்தா சந்தோஷம் தான். ஆனால் அதை அவர்களே சொல்லட்டுமா எதுவும் கேட்கக்கூடாது என்று சொல்கிறார்.

பிறகு வீட்டில் செழியன் ஏழு மணிக்கு வந்து விடுவேன் என்று சொன்னதால் ஜெனி நேரத்தை பார்த்துக் கொண்டே இருக்கிறார். அங்கே இங்கே நடந்து கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கேட் திறக்கும் சத்தம் கேட்டதும் ஜெனி ஓடி வந்து பார்க்க அங்க அமிர்தாவும் பாக்யாவும் வீட்டிற்கு வருகின்றனர்.

பிறகு எட்டு மணிக்கு செழியன் வீட்டிற்கு வந்ததும் ஜெனி கோபமாக உள்ளே சென்று விடுகிறார். அதற்கு பாக்கியா இப்படி லேட் ஆச்சுன்னா, ஜெனிக்கு போன் பண்ணி சொல்லு என்று செழியனை திட்டி விட்டு போய் அவளை சமாதானப்படுத்து என்று அனுப்பி வைக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+