பாக்கியலட்சுமி: எழிலை வீட்டை விட்டு துரத்தும் பாக்கியா.. ஈஸ்வரி சொன்ன வார்த்தை.. கடைசியில் இப்படி ஆகிடிச்சே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 12ம் தேதி முதல் 17ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஈஸ்வரி அமிர்தாவை திட்டியதால் எழில் ஈஸ்வரியிடம் சண்டையிட பாக்யா வீட்டை விட்டு துரத்தி இருக்கிறார்.
அந்த வகையில் அடுத்த வாரம் பாக்கியலட்சுமி சீரியலில் யாரும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே ஈஸ்வரியை பல கஷ்டங்களுக்கு பிறகு தான் பாக்கியாவும் அவருடைய குடும்பமும் ஜெயிலிலிருந்து அவர் மீது தப்பில்லை என்று நிரூபித்து வெளியே கூட்டிட்டு வந்திருக்கின்றனர். ஆனால் வீட்டிற்கு வந்த ஈஸ்வரி மீண்டும் தன்னுடைய வில்லதனத்தை தொடங்கி விட்டார்.

ஏற்கனவே எழிலிடம் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்திக் கொண்டிருக்க, எழில் நான் வாழ்க்கையில் செட்டில் ஆன பிறகு தான் இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் சிக்கிக்கொண்ட அமிர்தா தினமும் அழுது கொண்டே இருக்கிறார். ராதிகாவின் அம்மா கமலா கொடுத்த கம்பளைண்ட் காரணமாக போலீஸ் வீட்டிற்கு ஈஸ்வரியை தேடி வந்திருந்த நாளில்தான் எழில் ஒரு ப்ரொடியூசரிடம் கதை சொல்ல போக கிளம்பி இருந்தபோது பாட்டிக்காக கதை சொல்ல போகவில்லை.
அதனால் தான் எழிலுக்கு வாய்ப்பு இல்லாமல் போயிருக்கிறது. அதற்காக அடுத்தடுத்து முயற்சி செய்து கொண்டிருக்கும் எழில் பல அவமானங்களை பட்டு கொண்டிருக்கிறார். வீட்டிற்கு வந்தால் ஈஸ்வரி அவர் பங்குக்கு எழிலை அவமானப்படுத்துகிறார். இந்த நிலையில் நேற்று ஜெனி இரண்டாவது குழந்தை கர்ப்பமாக இருப்பதை சொன்னதை தொடர்ந்து ஈஸ்வரி அமிர்தாவிடம் நீங்க குழந்தை பெத்துக்க விருப்பம் இல்லாமல் இருக்கீங்களா?
நீதான் எழிலிடம் நிலா மட்டும் போதும் இன்னொரு குழந்தை வேண்டாம் என்று சொல்லி இருக்கிறாயா? ஏற்கனவே உன் செத்து போன புருஷன் வந்து மீண்டும் பிரச்சனை செய்தான். இன்னமும் அவன் வந்து பிரச்சனை செய்யணுமா? என்று மிரட்டி இருந்ததார். இதைக் கேட்டு அமிர்தா அழுது கொண்டிருந்தார். இந்த நிலையில் அடுத்த வாரத்திற்கு என்று வெளியான ப்ரோமோவில் அமிர்தா அழுதது பற்றி தெரிந்து கொண்ட எழில் ஈஸ்வரியிடம் வந்து குழந்தை விஷயத்தை பற்றி அமிர்தா கிட்ட நீங்க என்ன சொன்னீங்க என்று கேட்கிறார்.

அதற்கு ஈஸ்வரி அதுக்குள்ள உன்கிட்ட வந்து இவ பத்த வச்சுட்டாளா? என்று கோபப்படுகிறார். அதோடு இவனால தான் இந்த வீட்டில எல்லா பிரச்சனையும்.. இவ என்னைக்கு இந்த வீட்டில காலடி எடுத்து வைத்தாலோ அன்னைக்கே உன் வாழ்க்கையில எல்லாம் முடிஞ்சு போச்சு... என்று சொல்ல இதைக் கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகின்றனர்.
அப்போது எழில், பாட்டி இதற்கு மேல ஒரு வார்த்தை பேசினீங்க அவ்வளவுதான் என்று சொல்ல ஈஸ்வரி நான் பேச தான் செய்வேன். நான் பேசுவதை கேட்டு இங்கு இருக்கிறதா இருந்தா இரு... இல்லன்னா கிளம்பி போயிட்டே இரு. வெளிய போய் கஷ்டப்பட்டால் தான் இந்த வீட்டில் எவ்வளவு சொகுசா இருந்தேன்னு தெரியும் என்று சொல்ல பாக்கியாவும் நீ வீட்டை விட்டு போய்விடு எழில்.. இதுக்கு மேல நீ எங்க இருக்க கூடாது என்று சொல்ல எழில் அமிர்தா மற்றும் குழந்தையை கூட்டிக்கொண்டு வீட்டை விட்டு போகிறார்.
பாக்கியா அழுது கொண்டிருக்கிறார். இப்படியாக ப்ரோமோ முடிவு அடைந்திருக்கிறது. ஆனால் இந்த வீட்டை தரவேண்டும் என்றால் எனக்கு பணம் தர வேண்டும் என்று ஏற்கனவே கோபி சொன்னபோது எழிலும் தன்னுடைய பங்குக்கு பணம் கொடுத்திருந்தார். ஆனால் ஈஸ்வரி அதை எல்லாம் மறந்து இப்போது எழிலை வீட்டை விட்டு போக சொல்லி இருக்கிறார்.

இந்த ப்ரோமோ வெளியானதை தொடர்ந்து ஈஸ்வரியை ரசிகர்கள் கமெண்ட்களில் திட்டி தீர்த்து வருகின்றனர். அதிலும் அதிகமான ரசிகர்கள் ஈஸ்வரி ஜெயிலிலேயே இருந்திருக்கணும் திரும்பி வந்திருக்கவே கூடாது என்று திட்டுகிறார்கள். அதோடு பாக்கியா வழக்கம் போல என் மாமியாருக்கு சப்போட்டாக பேசிக் கொண்டிருக்கிறார் என்று பாக்கியாவையும் திட்டுகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications