பாக்கியலட்சுமி: கோபிக்கு அதிர்ச்சி கொடுத்த குடும்பம்.. மனம் மாறும் ஈஸ்வரி.. பீல் பண்ணும் ராமமூர்த்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் இராமமூர்த்தி பிறந்த நாளுக்கு எழில் வருவாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பில் எல்லோரும் இருக்கின்றனர். பாக்கியா வீட்டில் இருந்து எல்லோரும் கிளம்பி போவதை பார்த்து கோபி டென்ஷனாக இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ராமமூர்த்திக்கு ஈஸ்வரி தூங்காமல் முழித்திருந்து 12 மணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்கிறார். அதோடு அவருக்கு சாக்லேட் கொடுக்க ராமமூர்த்தி சந்தோஷப்படுகிறார் இருவரும் சந்தோஷமாக சிரித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். பிறகு அடுத்த நாள் காலையில் பாக்கியா சாமி கும்பிட்டு விட்டு ராமமூர்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி அவரிடம் ஆசிர்வாதம் வாங்கி கொள்கிறார்.

Television Baakiyalakshmi Serial vijay TV

அதுபோல வீட்டில் இருக்கும் இனியா, செழியன், ஜெனி என எல்லோரும் வரிசையாக ஆசீர்வாதம் வாங்குகின்றனர். அந்த நேரத்தில் ராமமூர்த்தி ஃபோனை எடுத்துப் பார்த்து பீல் பண்ணிக் கொண்டிருக்க, அதை பார்த்த ஈஸ்வரி என்ன ஆச்சு என்று விசாரிக்க எழில் இன்னும் போன் பண்ணல அதான் ஒரு மாதிரி இருக்கிறது என்று கலக்கமாக பேச ஈஸ்வரி ராமமூர்த்திக்கு ஆறுதல் சொல்கிறார்.

Television Baakiyalakshmi Serial vijay TV

பிறகு செழியன் பாக்யாவிடம் சென்று எழிலுக்கு போன் பண்ணி சொன்னீங்களா? அவன் எப்படி சொல்லாமல் வருவான்? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க கொஞ்ச நேரம் எந்த பதிலும் சொல்லாமல் பாக்யா மௌனமாக இருக்கிறார். ஆனாலும் விடாமல் செழியன் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பதால் அவன் கண்டிப்பாக வருவான் என்று பாக்கியா சொல்லி அனுப்பி விடுகிறார்.

அதுபோல இனியாவும் ஈஸ்வரியும் வந்து எழில் அண்ணா இல்லாதது ஒரு மாதிரி இருக்கு. அம்மா போன் பண்ணி கூப்பிடவே இல்லை என்று சொல்ல, ஈஸ்வரி எழில் நேரில் வந்து விஷ் பண்ணுவான் என்று எனக்கு தோணுகிறது என்று சொல்கிறார். பிறகு எல்லோரும் கோயிலுக்கு கிளம்பி சொல்ல காரில் ஏறும்போது அந்த நேரத்தில் கோபி அதை பார்த்து விடுகிறார்.

Television Baakiyalakshmi Serial vijay TV

எழில் வீட்டை விட்டு வெளியே போய் கஷ்டப்படுகிறான். ஆனால் இவங்க எல்லாரும் ரொம்ப சந்தோஷமா எங்கேயோ கிளம்பி போறாங்களே என்று சொல்லி செழியனுக்கு போன் பண்ண, செழியன் போனை எடுக்கவில்லை. அதுபோல இனியாவுக்கும் போன் பண்ணுகிறார் இனியாவும் போன் எடுக்கவில்லை இதனால் கோபி டென்ஷன் ஆக இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Television Baakiyalakshmi Serial vijay TV
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+