பாக்கியலட்சுமி: ராமமூர்த்தி இறந்து போயிட்டாரு.. சொன்னது பலிச்சிடுச்சு.. எதிர்பாராத திருப்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ராமமூர்த்தி பிறந்தநாள் இப்போதுதான் கொண்டாடப்பட்டது ஆனால் அவர் இறந்து போவது போன்று காட்சிகள் ப்ரோமோவில் இருக்கிறது.
அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் சில நாட்களாகவே ராமமூர்த்தி நான் செத்தால் கூட கோபி இந்த வீட்டுக்கு வரக்கூடாது என்று அடிக்கடி வசனம் பேசிக்கொண்டிருந்தார். அதனால் இவருக்கு ஏதாவது ஆவது போன்று சீரியலில் கதை கொண்டு போகப் போகிறார்களா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதை உறுதி செய்து இன்று புது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே தன்னுடைய பிறந்த நாளில் கோபி வந்ததற்கு கோபப்பட்ட ராமமூர்த்தி ஈஸ்வரியிடம் கோபி நான் செத்தாலும் கொள்ளி வைக்க கூடாது, அவன் எனக்கு மகனே கிடையாது. பாக்கியா தான் என்னுடைய பொண்ணு என்று செண்டிமெண்டாக பேசியிருந்தார். ஆனால் இன்று வெளியான ப்ரோமோ யாரும் எதிர்பார்க்காத வகையில் காட்டியிருக்கிறார்கள்.

பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய பில்லர் போல ராமமூர்த்தி தான் இதுவரைக்கும் இருந்து வந்தார். கோபிக்கு எதிராக அடிக்கடி சாபம் கொடுத்துக் கொண்டிருந்தாலும் பாக்கியாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே சப்போர்ட்டாக இருந்து வந்தார். பாக்யாவிற்கு அவருடைய மகன் எழில் மற்றும் ராமமூர்த்தி இருவரும் தான் சப்போர்ட்டாக இருந்தனர். ஆனால் சமீபத்தில் எழில் வீட்டை விட்டு வெளியே போயிருக்கிறார்.

ஆனாலும் ராமமூர்த்தி பிறந்த நாளை பாக்கியா பிரமாண்டமாக கொண்டாடி இருந்தார். எழில் இந்த பிறந்தநாள் பங்க்ஷனுக்கு வந்திருந்தார். பிறந்தநாள் பங்க்ஷனில் ராமமூர்த்தி கையால் மொத்த குடும்பத்தினரும் சாப்பாடு சாப்பிட்டு இருந்தனர். இந்த நிலையில் பிறந்தநாள் பங்க்ஷன் முடிந்து எல்லோரும் வீட்டிற்கு வந்து இருக்கின்றனர். அப்போது ராமமூர்த்தி இனியா மற்றும் ஈஸ்வரியோடு விதவிதமான புகைப்படங்கள் எடுத்து இருக்கிறார்.

அதோடு ராமமூர்த்தி ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறார். அப்போது பாக்யாவிடம் பாக்கியா நீ ரொம்பவும் நல்ல பொண்ணுமா. மத்தவங்களுக்காக ஓடி ஓடி உன் வாழ்க்கையை நீ வாழாமல் விட்டு விடாதே என்று சொல்ல பாக்கியா என்ன ஆச்சு மாமா? ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க? என்று கேட்க, அதற்கு ராமமூர்த்தி மனசு நிறைவா இருக்கு. அதனால என்னென்னமோ நான் பேசிட்டு இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு பெட்டில் வந்து படுக்கிறார்.

பிறகு ஈஸ்வரி வந்து எழுப்பி பார்க்க ராமமூர்த்தி எழும்பாமல் இருக்க மொத்த குடும்பத்தினரும் வந்து ராமமூர்த்தியை எழுப்பி பார்க்கின்றனர். ராமமூர்த்தியின் இறுதி தருணங்கள் என்று ப்ரோமோவில் கூறப்பட்டிருக்கும் நிலையில் இது சீரியல் ரசிகர்களை ரொம்பவும் பீல் பண்ண வைத்திருக்கிறது.
-
சிறகடிக்க ஆசை: ஒரு வழியாக மாறிய கதைக்களம்.. வீட்டை மீட்ட கையோடு நடந்த தரமான சம்பவம்! மனோஜுக்கு புதிய அதிர்ச்சி! -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications