பாக்கியலட்சுமி: தற்கொலை முயற்சியில் இனியா! ராமமூர்த்தி சொன்ன வார்த்தை.. கதறி அழும் கோபி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் தன்னுடைய வீட்டில் எல்லோரும் தன்னால் அழுது கொண்டிருக்கின்றனர் என்று வீட்டை விட்டு போகப்போகிறேன் என்று இனியா தவறான முடிவு எடுக்கிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ராமமூர்த்தியும் ஈஸ்வரியும் இனியாவை காலேஜிலிருந்து கூட்டிட்டு வருகின்றனர். பிறகு ஈஸ்வரி கால் வலியில் இருக்க பாக்கியா ஈஸ்வரிக்கு காலில் எண்ணெய் தேய்த்து தூங்க அனுப்பி வைக்கிறார். இதையெல்லாம் பார்த்து இனியா குற்ற உணர்ச்சியில் நிற்க பாக்கியா இனியாவிற்கு அட்வைஸ் கொடுக்கிறார்.

அப்போது காலேஜில் இந்த விஷயம் பற்றி யாராவது உன்னை கிண்டல் செய்றாங்களா? உன்னிடம் இது பற்றிய யாராவது பேசினார்களா? என்று பாக்யா கேட்க, இனியா இல்லை என்று சொல்கிறார். நீ செஞ்ச ஒரு வேலையால் வீட்டில் எல்லோரும் எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னு பாத்தியா. உனக்காக பாட்டியும் தாத்தாவும் அவங்களுடைய உடல் நிலையை கூட கவனிக்காமல் ஆட்டோவில் தினமும் காத்திருந்து உன்னை கூட்டிட்டு வராங்க.
காலேஜில் என்னை பிரின்ஸ்பல் திட்டி விடக்கூடாது என்பதற்காக தாத்தாவும் பாட்டியும் மொத்த பழியையும் ஏற்றுக்கொணடு தலை குனிந்து நிற்கிறார்கள் என்று சொல்ல இனியா பாக்கியாவிடம் மீண்டும் மன்னிப்பு கேட்கிறார். மறுபக்கத்தில் கோபி ராதிகாவிடம் தன்னுடைய அம்மா அப்பா யாரும் என்னை மதிக்கவில்லை என்று சொல்ல, ராதிகா திட்டுகிறார். அதனால் கோபி உன்கிட்ட சொன்னது தப்புதான் என்ன மன்னிச்சிடு என்று மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

பிறகு ரெஸ்டாரண்டில் சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க அங்கு அவருடைய நண்பர் வந்ததும் அவரிடம் கோபி அழுது புலம்புகிறார். எனக்குனு யாரும் இல்லை ராதிகாவை கல்யாணம் பண்ணிய பிறகு என்னுடைய நிம்மதி எல்லாம் போயிடுச்சு. ராதிகா எனக்காக சப்போர்ட்டா இருப்பா என்று நினைத்தேன். ஆனால் அவா எப்போதும் எனக்கு சப்போர்ட்டா இல்ல. நான் அவளிடம் ஆறுதலுக்கு போனால் கூட எல்லா பிரச்சனைக்கும் காரணம் நான் தான் என்கிற மாதிரியே பேசுறா என்று ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கிறார்.
கோபியின் நண்பர் சென்னையில் சமையல் போட்டியில் கோபி வெற்றி பெற்ற செய்தி பேப்பரில் வந்திருப்பதாக சொல்ல அதை பார்த்து கூட கோபி சந்தோஷப்படும் மனநிலையில் இல்லாமல் கவலையாகவே இருக்கிறார். இதை தொடர்ந்து ராமமூர்த்தியும் ஈஸ்வரியும் இரவு தூக்கம் வராமல் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது செழியன் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டான், எழில் மட்டும் இன்னும் செட்டில் ஆகல.. அவனும் குழந்தை பெத்துக்கல இனியாவுக்கும் நல்லபடியா கல்யாணம் ஆகணும்.. நல்ல வேலைக்கு போகணும் என்று பேசிக் கொண்டிருக்க இது எல்லாம் தலைகீழா மாறினதற்கு காரணம் கோபி தான் என்றும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு ராமமூர்த்தி நான் செத்தா கூட அவன் இந்த என் பிணத்தை பார்க்க கூட வரக்கூடாது, எனக்கு கொள்ளி வைக்க கூடாது என்று ஈஸ்வரிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.

மறுபக்கத்தில் இனியா தன்னுடைய ரூமிற்கு வந்து பார்க்க அங்கு பாக்கியா தூங்கிக் கொண்டிருக்கிறார். அதற்கு பிறகு தான் நடந்தது எல்லாவற்றையும் நினைத்து பார்த்து அழுது கொண்டிருக்கிறார். பிறகு நான் உங்களை எல்லாம் விட்டுப் போகப் போகிறேன் என்ன மன்னிச்சிடுங்க என்று ஒரு லெட்டர் எழுதுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications