மகிழ்ச்சியில் ஆட்டம் போடும் பாக்கியா..கோபி சொன்ன ஹாப்பி நியூஸ்..ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்தது
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் இருந்து விலகப் போவதாக சதீஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த முடிவை மாற்றிக் கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் மறைமுகமாக தான் இந்த சீரியலில் தொடர போகிறேன் என கோபி கூறி இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் அதிகமான ரசிகர்கள் கொண்டாடும் சீரியல் ஆக இருக்கிறது. அதனாலேயே இந்த சீரியல் டாப் சீரியல்களில் முதல் இடத்தை பிடித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் பல எதிர்பாராத திருப்பங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பாக்கியா தன்னுடைய வீட்டில் இருக்க வேண்டும் என்றால் அதற்கு தனக்கு பணம் தர வேண்டும் என்று ஏற்கனவே கோபி கூறி இருந்த நிலையில் பாக்யா இரண்டு மாதம் டைம் கேட்டு அதற்கான முதல் தவணை தொகையை கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் கோபி தற்போது குடிக்க தொடங்கி இருக்கும் நிலையில் குடித்துவிட்டு வண்டி ஓட்ட முடியாமல் தவித்த கோபியை செழியன் வீட்டிற்கு கூட்டி கொண்டு வர, இனி கோபி இருக்கும் இடத்தில் தான் நானும் இருப்பேன் என்று ராதிகாவும் அதே வீட்டிற்கு வந்து விடுகிறார்.
ராதிகா எப்படியும் இந்த வீட்டிலிருந்து பாக்கியாவை வெளியேற்றி விடுவேன் என்று சபதம் போட்டு வேலை செய்து கொண்டிருக்க இனி கோபி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு அனைவர் மத்தியில் இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் 10 அல்லது 15 எபிசொட்டில் நான் விலகி விடுவேன் என்று சதீஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதைத் தொடர்ந்து அதிர்ச்சியான ரசிகர்கள் பலரும் அவர் மீண்டும் சீரியலில் தொடர வேண்டும் என்று கூறி வந்தனர்.

இந்த நிலையில் ரசிகர்கள் அதிகமானோர் எனக்கு கமெண்டில் தொடர வேண்டும் என்று தங்களுடைய விருப்பங்களை தொடர்ந்து வருகிறார்கள். எல்லோருக்கும் நன்றி என்று கூறியிருக்கிறார். அதேபோல நடிகர் சதீஷ் உடன் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து விஜே விஷால் அதாவது எழில் அப்பாவை நான் எங்கேயும் விடமாட்டேன் என்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதனால் இனி கோபி கேரக்டரில் சதீஷ் தான் தொடர்வார் என்று செய்திகள் பரவி வருகிறது.
இந்த நிலையில் பாக்யாவாக நடிக்கும் சுசித்ரா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பாக்கியா கெட்டப்பில் டான்ஸ் ஆடி வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் கோபி மாறவில்லை என்ற சந்தோஷத்தில் பாக்கியா இப்படி ஒரு ஆட்டம் போடுகிறாரா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். தற்போது இந்த வீடியோ அதிகமாக வைரல் ஆகி வருகிறது.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications