பாக்கியலட்சுமி: கோபி அனுப்பிய வீடியோ.. ராதிகா எடுத்த விபரீத முடிவு.. பாக்யா செய்த எதிர்பாராத செயல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் 25ஆம் தேதிக்கான எபிசோடில் ராதிகா, கோபி செய்த செயலால் கோபத்தில் வீட்டை விட்டு கிளம்பி போகிறார். அப்போது பாக்கியா ராதிகாவிற்கு அட்வைஸ் செய்கிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ராதிகா போன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ராதிகாவின் அம்மா வந்து உனக்கு என்ன நடக்குதுன்னு தெரியுமா? மாப்பிள்ளை உனக்கு போன் பண்ணுனாரா? எதுவும் சொன்னாரா? என்று கேட்க, அதற்கு ராதிகா இல்லையே என்னாச்சு என்று கேட்டதும் அவர் குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்தோடு போயிருக்காரு அடுத்த தெருவில் இருக்கும் பொண்டாட்டிய பார்க்க வரல.

மயூ பிறந்தநாளுக்கு கூட வந்து விஷ் பண்ணதுக்கு அவருக்கு டைம் இல்ல. ஆனா 500 கிலோமீட்டர் தாண்டி கோயிலுக்கு போக மட்டும் தெரியுதா என்று கேட்கிறார். அதோடு இப்பதான் எனக்கு மாப்பிள்ளை பத்தி தெரியுது என்று கோபப்பட, உடனே ராதிகா போன் போடுகிறார். ராதிகா போன் பண்ணுவதை பார்த்ததும் கமலா கோபிக்கு தான் போன் பண்ணுறாங்கன்னு நினைக்கிறார்.
ஆனால் ராதிகா வீடு பேக் பண்றவங்களுக்கு போன் போட்டு ஒரு மணி நேரத்துல வாங்க என்று சொல்கிறார். மறுபக்கத்தில் கோபி, இனியா, செழியன், ஈஸ்வரி நான்கு பேரும் பாட்டு போட்டு ஜாலியாக போய்க் கொண்டிருக்கின்றனர். பேக்கிங் வேலையை செய்து கொண்டிருக்கிறார். அப்போது கோபி தான் ஊருக்கு போய் இருப்பதாக சொல்லி ஒரு வீடியோவை ராதிகாவுக்கு அனுப்பி இருக்கிறார்.

ஆனால் ராதிகா அந்த வீடியோவை கண்டுகொள்ளாமல் தான் கிளம்ப முடிவு எடுக்கிறார். அடுத்த கட்டத்தில் பாக்யா, ஜெனி மற்றும் செல்வி மூன்று பேரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது செல்வி நீ இந்த இடத்தில் உட்கார்ந்து ரொம்ப நாளாச்சு என்று கேட்க, அதற்கு பாக்கியா ஆமா இந்த வீட்டில் அம்மா பையனோட பாச போராட்டத்தை பார்க்க என்னால் முடியவில்லை.
அதனால் தான் நான் கிச்சனுக்கும் ரூமுக்கும் போயிருந்தேன். இப்பதான் நிம்மதியா இந்த இடத்துல உட்கார்ந்து இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது அந்த தெருவில் இருக்கும் ஒரு நபர் வந்து நான் வீடு பார்த்துட்டு இருந்தேன். இப்போ இந்த தெருவிலேயே ஒரு வீடு ஆகப்போகுது அதனுடைய டீடெயில்ஸ் உங்களுக்கு தெரியுமா என்று கேட்க, அதற்கு ஜெனி ஆன்ட்டி இங்க செக்யூரிட்டியா இருந்தாலும் அவங்களுக்கு அந்த டீடைல்ஸ் எல்லாம் தெரியாது என்று சொல்கிறார்.

அப்போது வந்த நபர் ராதிகா தான் வீட்டுக்கு காலி பண்ணி போறாங்க அவங்க உங்களுக்கு தெரிஞ்சவங்க தானே என்று சொன்னதும் பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். பிறகு பாக்யா உடனே ஓடி வந்து வெளியில் பார்க்க அங்கு பொருட்கள் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றனர். உடனே ராதிகாவுக்கு போன் போட்டு நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் வரலாமா என்று கேட்கிறார்.
அதற்கு ராதிகா இப்ப வேண்டாம் என்று சொன்னாலும் பாக்கியா கேட்காமல் ஒரே ஒருமுறை மட்டும் உங்ககிட்ட பேசணும்னு சொல்ல அதற்கு ராதிகா வீட்டுக்கு வேண்டாம் பார்க்குக்கு வாங்க என்று சொல்கிறார். அங்கு பாக்கியா போகிறார். அங்கு வைத்து ராதிகாவிடம் நீங்கள் வீடு காலி பண்ணற முடிவு இப்போ தேவையா? அவருக்கு உடம்பு நல்லா ஆனதுக்கப்புறம் கண்டிப்பா உங்க வீட்டுக்கு வந்துடுவாரு என்று சொல்ல, அதற்கு ராதிகா நான் வீடு காலி பண்ணிட்டு போறதனால உங்க குடும்பத்துல எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம் தான்.
ஆனா நீங்க மட்டும் ஏன் வந்து என்கிட்ட பேசணும்னு நினைக்கிறீங்க? நான் ஏற்கனவே கல்யாண வாழ்க்கையில் ஏமாந்துட்டேன். இரண்டாவது வாட்டி இது மாதிரி ஆகணும்னு நினைக்கல என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது பாக்கியா நான் என்னுடைய முன்னாள் கணவரை கல்யாணம் பண்ணுனவங்க கிட்ட பேசுறேன்னு நினைக்கல.

இதற்கு முன்பு ராதிகா எனக்கு ஒரு பிரிண்ட்டா இருந்தாங்க, அவங்க கிட்ட பேசுறதா தான் நினைக்கிறேன் என்று சொல்ல அதற்கு ராதிகா என்னால உங்கள பழைய பாக்கியாவா பார்க்க முடியவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது நீங்க இன்னும் கூட கொஞ்சம் யோசிச்சு முடிவு எடுத்திருக்கலாம் என்று பாக்கியா சொல்ல ராதிகா எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
மறுபக்கத்தில் கோபி ஈஸ்வரி எல்லாரும் திருநெல்வேலிக்கு சென்று இருக்கிறார்கள். அங்கு உறவினர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு ஈஸ்வரி தன்னுடைய கல்யாணம் முடிந்த நேரத்தில் என்னெல்லாம் நடந்தது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது ஆறு வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் இங்கு உள்ள குலதெய்வ கோயிலுக்கு வேண்டிய பிறகு தான் கோபி பிறந்தான் என்று சொல்ல, கோபி கண்கலங்குகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications