அமிர்தாவை சொந்தம் கொண்டாடிய கணேஷ்.. எழில் சொன்ன வார்த்தை.. குடும்பத்தினர் கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் 28ஆம் தேதி எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் கோவிலில் வைத்து கணேசனை பார்த்த அமிர்தா அதிர்ச்சியாகி எழில் பின்னாடி ஒளிந்து கொள்கிறார்.
அதைத்தொடர்ந்து கணேசனை பார்த்து முதலில் அதிர்ச்சியாகி நின்ற கணேசனின் பெற்றோரும் கோவிலுக்கு வந்து விடுகின்றனர். அதனால் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.

இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் அமிர்தா நிலாவுக்காக வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும், அதனால் உள்ளே சென்று அதுபற்றி விசாரித்துவிட்டு வருகிறேன் என்று கோயிலுக்கு உள்ளே போக அப்போது பின்னாடியே வந்த கணேஷ் அமிர்தா என்று கூப்பிட திரும்பிப் பார்த்த அமிர்தா கணேசனை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அங்கிருந்து ஓடி வந்து எழிலிடம் எதுவும் சொல்ல முடியாமல் எழில் கையிலேயே மயங்கி விழுந்து விட எழில் என்ன ஆச்சு என்று பதறிக் கொண்டிருக்கிறார்.

அப்போது அங்கு வந்த கணேஷ் எழில் கையைப் பிடித்து தள்ளிவிட்டு அவ என்னை பார்த்த சந்தோஷத்தில் மயங்கிட்டா என்று தன் பக்கம் இழுத்துக் கொள்ள எழில் அதிர்ச்சியாகி நிற்கிறார். அதோடு அமிர்தாவை தொடறதுக்கு நீ யாரு என்று கேட்க கணேஷ் எப்படி மீண்டும் வந்தார் என்று எழில் அதிர்ச்சியோடு யோசித்துக் கொண்டிருக்கிறார்.
அப்போது அமிர்தாவை கணேஷ் எழுப்புவதற்காக முகத்தில் தண்ணீர் தெளிக்கிறார். அந்த நேரத்தில் கணேசன் பெற்றோரும் கோவிலுக்கு வந்து விடுகிறார்கள். மயக்கத்தில் இருந்து எழும்பிய அமிர்தா கணேசனை பார்த்து பயப்பட கணேஷ் நிலா பாப்பாவையும் அமிர்தாவையும் தன்னோடு வருமாறு கெஞ்சுகிறார். அதோடு அமிர்தா அருகில் சென்று தொட்டு பேச பக்கத்தில் போக அதை பார்த்து பயந்து போன அமிர்தா எழில் பின்னாடி போய் நின்று கொள்கிறார்.

அப்போது கணேஷின் பெற்றோர் கணேஷ் மீண்டும் உயிரோடு வந்ததை பற்றி அமிர்தாவிடம் சொல்கின்றனர். மறுபக்கத்தில் பாக்யா எழில் விஷயம் பற்றி வீட்டில் சொன்னதால் எல்லோரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அதற்கு ஈஸ்வரி பாக்யா உன்னால தான் இந்த கல்யாணம் நடந்துச்சு. இது எல்லாத்துக்கும் காரணம் நீதான்.

நீ தான் எழில் வாழ்க்கையை நாசமாக்கிட்ட என்று திட்டுகிறார். அதற்கு ராமமூர்த்தி நடந்து முடிஞ்சதை பற்றி இனி பேசி என்ன பலன்... இனி நடக்கப்போவதை பார்ப்போம் இதனால் எல்லோரும் சேர்ந்து அமிர்தாவுக்கும் எழிலுக்கும் தெரியாமல் இந்த விஷயத்தை எப்படியாவது முடிக்கணும், கணேசுக்கு புரிய வைக்கணும் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து கோயிலில் கணேஷ் அமிர்தாவை தன்னோடு வரச் சொல்லி கெஞ்சி கொண்டிருக்க அதற்கு எழில் மறுத்து விட அமிர்தாவும் எந்த பதிலும் சொல்லாமல் எழில் பக்கத்திலேயே நின்று கொண்டிருக்க அதை பார்த்த கணேசின் பெற்றோர் கணேசிடம் அமிர்தாவுக்கு மெதுவாக புரிய வைக்கலாம் வா போகலாம் என்று அழைத்து செல்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications