பாக்கியா வீட்டில் கணேஷ் கேட்ட கேள்வி.. எழில் சொன்ன வார்த்தை? காலில் விழுந்த அமிர்தா.. எதிர்பாரா முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் 29ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் பாக்கியா வீட்டிற்கு வந்த கணேஷ் அனைவர் முன்பும் அமிர்தாவை தன்னுடைய வீட்டிற்கு கூப்பிடுகிறார்.
அதோடு கணேஷ் எழில் இடம் பிரச்சனை செய்ய அதற்கு செழியன் பதிலடி கொடுக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

பிரச்சனைக்கு பஞ்சமே இல்லாத பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் பிரச்சனை ஒரு பக்கத்தில் பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கும் நிலையில் எழில் அமிர்தா வாழ்க்கையிலும் புயல் வீசுகிறது. அந்த வகையில் இன்று எபிசோட்டில் ஆரம்பத்தில் அமிர்தாவின் அம்மா பாக்யா வீட்டிற்கு வந்து என் பொண்ணு எங்க போயிருக்கா? அவளை வெளியே அனுப்பிடாதீங்க அவ பாவம் என்று அழுது கொண்டிருக்கிறார்.

அதற்கு பாக்கியா கணேஷ் இங்க வரல, அமிர்தாவும் எழிலும் கோயிலுக்கு போயிருக்காங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அமிர்தாவும் எழிலும் வீட்டிற்கு வருகின்றனர். உள்ளே வந்த அமிர்தா அவங்க அம்மாவை பார்த்ததும் கட்டிப்பிடித்து அழுது கொண்டிருக்கிறார். பிறகு எழில் பாக்கியாவிடம் நாங்கள் கணேஷை பார்த்தோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அப்போது பின்னாடியே கணேஷூம் அவங்க அப்பா அம்மாவும் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது அமிர்தாவின் அம்மா இங்கு எதுக்கு வந்த நான் எத்தனை தடவை உன்கிட்ட வந்து என் பொண்ணை தொந்தரவு பண்ணாதன்னு கெஞ்சி இருக்கேன். நீ பாட்டுக்கு செத்துப் போயிடுவ அதுக்கு என் பொண்ணு அழனும், அப்புறமா திரும்பி வந்தா சந்தோஷப்படனுமா? அவ என்ன பொம்மையா?

அவளுக்குன்னு மாமனார், மாமியார், தாத்தா, பாட்டி குடும்பம் எல்லாம் இப்போது இருக்கு அவ இப்போதான் சந்தோஷமா இருக்கா, அவளை விட்டுடு என்று கணேசிடம் கெஞ்சி கொண்டிருக்கிறார். பிறகு அமிர்தாவின் அம்மா எழிலிடமும் என்னுடைய பொண்ணை வீட்டை விட்டு அனுப்பிடாத அவ எந்த தப்பும் பண்ணல என்று கெஞ்சுகிறார்.

இன்னொரு பக்கம் கணேசின் அம்மாவும் அப்பாவும் எழிலுடைய கையை பிடித்துக் கொண்டு கணேசின் நிலைமையை நீ அவனுடைய இடத்தில் இருந்து பாரு.. திடீர்னு அவன் திரும்பி வந்து அவன் பொண்டாட்டி பிள்ளையை கேட்கிறான். நாங்க என்ன பண்றது என்று அவர்களும் அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கின்றனர்.

அப்போது கணேஷ் இப்ப எதுக்கு எல்லாரும் தேவையில்லாம பேசிட்டு இருக்கீங்க. நான் என் அமிர்தா கிட்ட பேசுறேன் என்று அமிர்தா கிட்ட நெருங்க, அமிர்தா எழில் கையை பிடித்துக் கொள்கிறார். அப்போது கணேஷ் எழிலை கையை எடுடா... எதுக்குடா என் பொண்டாட்டி மேல கை வைக்கிற என்று சத்தம் போடுகிறார்.

அதற்கு செழியன் அவனோட பொண்டாட்டி கையை அவன் புடிச்சிருக்கான் நீ யாரு என்று திட்டுகிறார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி என்னுடைய பேரன் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சு என்று அழுது கொண்டிருக்கிறார். அப்போது அமிர்தா பாட்டி என்னை மன்னிச்சிடுங்க இந்த மாதிரி எல்லாம் நடக்கும் என்று எனக்கு சத்தியமா தெரியாது என்று அழுகிறார்.

அதற்கு கணேஷ் அமிர்தாவிடம் நான் உன்னை நல்லா பாத்துப்பேன். நீ என்கூட வா என்று கூப்பிடுகிறார். ஆனால் அமிர்தா போக மறுத்து அழுது கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவு அடைந்துள்ளது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications