ரஜினியோடு ஜோடியாக நடித்தேன்! ஆனால் பல வருடம் கழித்து அவர்..! பாக்கியலட்சுமி சீரியல் ஈஸ்வரி ஓப்பன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரி கேரக்டரில் நடித்து வரும் நடிகை ராஜலட்சுமி நடிகர் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக மூன்று முகம் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் ரஜினிகாந்த் குறித்து ஒரு பேட்டியில் ராஜலட்சுமி சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஒரு சில நடிகைகள் ஆரம்பத்தில் கதாநாயகியாக புகழின் உச்சத்தில் கொடிக்கட்டி பறந்து கொண்டிருந்தாலும் சில வருடங்களில் அவர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போனதும் சின்னத்திரையை நோக்கி அடி எடுத்து வைக்கிறார்கள். அந்த வரிசையில் பல நடிகர்கள் சின்ன திரையில் வெற்றி பெற்று புகழின் உச்சத்தில் வலம் வருகிறார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் தான் நடிகையாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சில நடிகைகள் அம்மா, கேரக்டரிலும் வில்லியாகவும் மாறிவிடுகிறார்கள். அந்த வரிசையில் ஒருவர்தான் நடிகை ராஜலட்சுமி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மாமியார் ஈஸ்வரியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது சீரியலில் இவரை சுற்றி தான் கதை ஓடிக்கொண்டிருக்கிறது என்று சொல்ல வேண்டும்.
பாக்யா வீட்டை விட்டு கிளம்பி போய் ராதிகா வீட்டில் இருந்து கொண்டு தன்னுடைய மகன் தன் பேச்சை கேட்டு ஆட வேண்டும் என்று ஈஸ்வரி போடும் ஆட்டம் மற்றும் பிரச்சனை வைத்து சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இவர் சில வருடங்களுக்கு முன்பு பேசிய வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் திடீரென்று டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
அதில் ராஜலட்சுமி நான் மூன்று முகம் திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தேன் என்று கூறுகிறார். அதோடு மேலும் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் ராஜலட்சுமி பேசுகையில் நான் மூன்று முகம் திரைப்படத்தில் ரஜினி நடித்த அலெக்சாண்டர் கேரக்டரில் அவருக்கு ஜோடியாக நான் தான் நடித்திருந்தேன். அப்போது அவர் ரொம்பவும் எளிமையான நபர்.
அந்த திரைப்படம் 1982 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஆனால் அப்போது இருந்த மாதிரி தான் இப்போதும் ரஜினிகாந்த் இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்தை நான் சந்தித்தேன். அப்போது அவர் பழையது போலவே எளிமையாக பேசிக் கொண்டிருந்தார். எனக்கு வியப்பாக இருந்தது. இப்போதும் அவர் நடிக்கும் திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி அடைந்து கொண்டிருக்கிறது.

அவர் சூப்பர் ஸ்டாராக ஜெயித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் தனிப்பட்ட கேரக்டரில் எந்த மாற்றமும் இருப்பது போன்று எனக்கு தெரியவில்லை. பழையது போலவே யாருக்கும் தெரியாமல் அதிகமான உதவி செய்து கொண்டிருக்கிறார். அதனாலேயே அவர் ஆரோக்கியத்தோடு நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று நான் அவருடைய ரசிகர்கள் போலவே வேண்டிக்கொள்கிறேன் என்று அந்த பேட்டியில் ராஜலட்சுமி பேசியிருக்கிறார்.
ராஜலட்சுமி மூன்று முகம் திரைப்படத்தில் மட்டுமில்லாமல் மேலும் பல தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாகவும் முக்கிய கேரக்டரிலும் நடித்திருக்கிறார். அதிலும் சுஜாதா, அதிசய பிறவிகள், அர்ச்சனை பூக்கள், பூவிழி வாசலிலே, சங்கர் குரு போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அதற்கு பிறகு சில வருடங்களுக்கு முன்பு வெளியான யாரடி நீ மோகினி, பிரியசகி, வரலாறு, திருப்பாச்சி, எம் மகன், பிரிவோம் சந்திப்போம், குட்டி, உத்தமபுத்திரன், சைவம் போன்ற பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications