ராதிகாவால் பெட்ரோல் பங்கில் வேலைக்கு சேரும் பாக்கியா, எழில்.. இனி நடக்கப்போவது இதுதானா..?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இனி யாரும் எதிர்பார்க்காத வகையில் கதை பயணிக்க போகிறது என்று சில வீடியோக்கள் வெளியாகி இருக்கிறது.
இதுவரைக்கும் பாக்கியா சமையல் காண்ட்ராக்டர் மற்றும் ஆர்டர் எடுத்து செய்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது தன்னுடைய மகன் எழிலோடு சேர்ந்து பெட்ரோல் பங்கில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.

ஏற்கனவே இன்றைய எபிசோட்டில் பாக்கியா சமையல் செய்யும் இடத்தில் பாயாசத்தால் பெரும் பிரச்சனை நடந்திருக்கும் நிலையில் இனி கதை வேற மாதிரி பயணிக்கப் போகிறது.
பாக்கியலட்சுமி சீரியலுக்கென்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். பாக்யாவை கோபி வேண்டாம் என்று விட்டு விட்டுப் போய் வேறு திருமணம் செய்த பிறகு தன்னால் தனியாக தன்னுடைய திறமையை நிரூபிக்க முடியும் என்று பாக்கியா தொடர்ச்சியாக நிரூபித்துக் கொண்டிருக்கிறார். எத்தனையோ பிரச்சனைகள் கோபி மற்றும் ராதிகாவால் தொடர்ச்சியாக வந்து கொண்டு இருந்தாலும் அதில் எல்லாம் பாக்கியா அடுத்தடுத்து ஜெயித்துக் கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் தற்போது இனியா ஸ்கூல் ஃபர்ஸ்ட் மார்க் எடுத்து இருக்கும் நிலையில் பாக்கியாவால் கூட இருக்க முடியாமல் இருக்கிறது. காரணம் பாக்கியா சமையல் ஆர்டருக்கு போன இடத்தில் அங்கே பாயாசம் கம்மியாக வைத்ததால் நிச்சயதார்த்த வீட்டின் பெண் வீட்டாருக்கும் மாப்பிள்ளை வீட்டாருக்கும் பெரும் பிரச்சனை வெடித்து இருக்கிறது.
இதனால் பாக்கியாவை சமையலுக்கு கூப்பிட்ட பெண் வீட்டார்கள் உங்களால் தான் பிரச்சனை வந்திருக்கிறது. இன்னைக்கு என்னுடைய பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை என்றால் நடக்கிறதே வேறு என்று பாக்யாவையும் அவரோடு போனவர்களையும் மண்டபத்திலேயே பிடித்து வைத்திருக்கின்றனர். அதோடு உங்களை போலீசில் ஒப்படைக்க போகிறேன் என்றும் கூறியிருக்கின்றனர்.

இந்த நிலையில் பாக்கியாவாக நடிக்கும் சுசித்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் பாக்கியா மற்றும் எழில் இருவரும் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது எழில் நானும் எங்க அம்மாவும் இங்கே வேலைக்கு சேர்ந்து விட்டோம் என்று சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் ஏற்கனவே பாக்யா கோபியிடம் போட்ட சவாலில் ஜெயிப்பதற்காக ஒரு சில நாட்கள் மட்டுமே வேலைக்கு போன எழில் 5 லட்சம் ரூபாய் கொடுத்து இருந்தார்.
இதனால் இந்த பணம் எப்படி எழிலுக்கு கிடைத்திருக்கும் என்று ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் தற்போது பெட்ரோல் பங்கில் வேலை செய்தபடி எழில் இருப்பதால் அப்போ எழில் பெட்ரோல் பங்கில் தான் வேலை செய்து கொண்டிருக்கிறாரா? அப்படி பார்த்தால் கூட அந்த ஐந்து லட்சம் ஒரு சில நாட்களுக்குள் கிடைத்திருக்க வாய்ப்பில்லையே என்று கேள்விகள் வரும் நிலையில், பாக்கியா நிச்சயதார்த்த வீட்டில் நடந்த பிரச்சனையால் சமையல் வேலையை விட்டுவிட்டு பெட்ரோல் பங்க்கில் வேலைக்கு சேர போகிறாரா? என்றும் கேள்விகள் வருகிறது.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications