பாக்கியலட்சுமியில் “ராமமூர்த்தி” கேரக்டர் இறக்க காரணமே இதுதான்! இனி கதை இப்படித்தான்- STP ரோசரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் "ராமமூர்த்தி" கேரக்டரில் நடிகர் "STP ரோசரி" நடித்து வருகிறார். அவர் தற்போது பேட்டி ஒன்றில் பாக்கியலட்சுமி சீரியலில் எதற்காக ராமமூர்த்தி கேரக்டர் இறந்து போவது போன்று காட்சி வைத்திருக்கிறார்கள் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைக்கும் சம்பவம் தான் இப்போது நடந்திருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த சீரியலில் ராமமூர்த்தியின் மரணம் வந்திருக்கிறது. ராமமூர்த்தி இந்த சிறுவர்களின் முக்கிய பில்லர் போல கதையை தாங்கி வந்தார். பாக்கியாவிற்கு வரும் பிரச்சனைகளில் துணையாக இருந்தது அவர்தான். ஆனால் அவர் இப்போது இல்லை என்பதை அந்த சீரியல் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

television baakiyalakshmi serial vijay tv

இதற்கு பதிலாக வேறு ஏதாவது கதையை மாற்றி இருக்கலாம் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் இது பற்றி நடிகர் ரோசரி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நான் சீரியலில் கதை இப்படி மாறி இருப்பதற்கு காரணம் சீரியல் விரைவில் முடிய போகிறது என்று கூறியிருக்கிறார்கள்‌.

அதோடு ராமமூர்த்தியின் கேரக்டரும் இனி முடிந்துவிட்டது என்று சொல்லிவிட்டார்கள். சீரியல் தரப்பில் இப்படி ஒரு முடிவெடுத்த பிறகு நாம் எதுவும் செய்ய முடியாது. நான் ஒரு சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறேன் அதாவது அண்ணா சீரியலில் தான். அந்த சீரியலின் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து சீரியல் தரப்பினர்கள் என்னிடம் வருத்தம் தெரிவித்தார்கள். நான் சரி இருக்கட்டும் என்று சொல்லிவிட்டேன். ஆனால் அப்போது அவர்கள் ராமமூர்த்தியின் இறுதி தருணம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

television baakiyalakshmi serial vijay tv

நானும் ஒரு நடிகர் அதனால் அதற்கு தகுந்தது போல சரியாக நடிக்க வேண்டும் என்று காட்சிகளை நடித்து முடித்து இருக்கிறேன். ஆனால் ராமமூர்த்தி கேரக்டர் தான் இறந்திருக்கிறது.. நான் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு அது ஒரு பெரிய வருத்தமா தெரியவில்லை. ஆனால் இத்தனை வருடமாக நடித்த சீரியலில் இனி நாம இல்லை என்பது நினைக்கும் போது ஒரு மாதிரி பீல் ஆகிறது.

ஆனால் ராமமூர்த்தியின் இறுதி தருணங்களை பார்த்து எங்க வீட்டில் எல்லாரும் ரொம்ப பீல் பண்ணுனாங்க. நான் ராமமூர்த்தி கேரக்டரில் நடித்துக் கொண்டிருப்பது என்னுடைய சாயல் நடிப்பு கிடையாது. அது என்னுடைய அப்பாவின் கேரக்டர் தான். ராமமூர்த்தி அப்படியே என்னுடைய அப்பாவை தான் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றார். இனி சீரியலில் ராமமூர்த்தி இல்லாமல் போன பிறகு அடுத்தடுத்து கதை திருப்பங்கள் வரப்போகிறது, என்று நடிகர் STP ரோசரி கூறி இருக்கிறார். ராமமூர்த்தி கேரக்டர் உங்களுக்கு பிடிக்குமா? ராமமூர்த்தி கேரக்டர் இறப்பு குறித்து உங்க கருத்தை தட்டி விடுங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+