கணேஷ் கதை முடிந்ததும் எழிலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமிர்தா.. ரசிகர்கள் நினைத்தது நடக்குது..!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பிப்ரவரி 23ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி கணேஷ் கதை முடிந்ததும் மீண்டும் கோபி பாக்யா மற்றும் பழனிச்சாமி பேசுவதை வைத்து சந்தேகப்படுவது போலவே கதையை கொண்டு போய்க் கொண்டிருக்கின்றனர்.
அதே நேரத்தில் கணேசிடமிருந்து அமிர்தா காப்பாற்றப்பட்டிருக்கும் நிலையில் அமிர்தா தன்னுடைய காதலை எழிலிடம் வெளிப்படுத்துகிறார். இன்றைய எபிசோடில் இந்த நெகிழ்ச்சியான காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோபி ஆபீசுக்கு போகாமல் இருப்பதால் ராதிகா நீங்க இன்னும் ஆபீசுக்கு போகலையா என்று கேட்க அதற்கு சமாளிக்கிறார். ஆனால் விடாத ராதிகா வாங்க நான் உங்களை ஆபீஸ்ல விட்டுட்டு போறேன் என்று சொல்ல அதற்கு கோபி வேண்டாம் நான் வேணும் என்றால் உன்னை விட்டுட்டு போறேன் என்று சமாளித்து விடுகிறார்.
அதை தொடர்ந்து எழில் அமிர்தாவிற்கு ஜூஸ் கொடுத்து அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அவர்தான் நீங்க என்னை வெறுத்திடுவீங்கன்னு நடந்தே நினைச்சு பயந்துட்டு இருந்தேன் என்று சொல்ல அதற்கு எழில் என்னைக்குமே உன் மேல எனக்கு வெறுப்பு வராது. இப்போ நாளுக்கு நாள் உன் மேல காதல் அதிகம் ஆயிட்டே இருக்கு என்று சொல்ல அமிர்தாவும் தனக்குள் இருக்கும் காதலை வெளிப்படுத்துகிறார்.
அதற்கு பிறகு கோபி ரெஸ்டாரண்டுக்கு போகிறார். அங்கு அவருடைய நண்பர் சதீஷோடு பேசிக் கொண்டிருக்கிறார். அந்த ரெஸ்டாரண்டுக்கு பாக்கியாவும் பழனிச்சாமியும் வருகின்றனர். கோபியின் நண்பர் சதீஷ் பழனிசாமி பேசிக்கொண்டிருப்பதை பார்த்து கோபியிடம் சொல்ல கோபி அதை பார்த்து கோபப்படுகிறார். அப்போது பாக்கியா பழனிச்சாமியிடம் உதவி செய்ததற்கு நன்றி என்று சொல்ல அதற்கு பழனிச்சாமி அதை விடுங்க நீங்க இனி அடுத்து ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கிற வேலைய பாருங்க என்று பாக்கியாவுக்கு மோட்டிவேஷன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
பிறகு பழனிச்சாமி அங்கிருந்து கிளம்பி விட அதைத்தொடர்ந்து பாக்யாவும் வெளியே வருகிறார். அப்போது பாக்கியாவை தடுத்து நிறுத்தும் கோபி என்ன நீங்க லவ் பண்றீங்களா? என்று கேட்க அதற்கு பாக்கியா நான் லவ் பண்ணுனா உங்களுக்கு என்ன பிரச்சனை? என்று பதிலடி கொடுக்கிறார். அதோடு உங்கள மாதிரி திருட்டு வேலை செய்யணும்னு எனக்கு எந்த அவசியமும் கிடையாது,
எனக்கு எதுவாக இருந்தாலும் வெளிப்படையாகத்தான் செய்வேன். ஒருவேளை எனக்கு யாரையாவது புடிச்சிருந்து கல்யாணம் பண்ணனும்னு தோணுச்சுன்னா கூட நான் வெளிப்படையா தான் பண்ணுவேன். அதுவும் என் பிள்ளைங்க கிட்ட சொல்லி முழு சம்மதத்தோட பண்ணுவேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications