Baakiyalakshmi: பாக்யாவிடம் ராதிகா கேட்ட கேள்வி? இப்போதாவது இந்த முடிவு வந்ததே! ஈஸ்வரிக்கு ஏமாற்றம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 பிப்ரவரி நான்காம் தேதிக்கான எபிசோடில் ராதிகா கோபியை பிரிந்த முடிவு இறுதியானது என்று பாக்கியாவிடம் சொல்கிறார். அதுபோல பாக்யாவிடம் சில கேள்விகளையும் ராதிகா கேட்கிறார். அதுமட்டுமல்லாமல் ராதிகா மற்றும் கோபி நிரந்தரமாக பிரிய வேண்டும் என்று ஈஸ்வரி எடுத்த முடிவு கடைசியில் அவருக்கு ஏமாற்றத்தை கொடுக்கிறது.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கமலா பாக்கியாவிடம் தன்னுடைய பொண்ணு வாழ்க்கை இப்படி போய்விட்டதே என்று கவலைப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியா கமலாவுக்கு ஆறுதல் சொல்கிறார். பிறகு ராதிகாவிடம் பேச வேண்டும் என்று சொல்கிறார். ராதிகாவிடம் பேசும்போது கோபி உங்களை நினைத்து நேற்று இரவு குடித்துவிட்டு வருத்தப்பட்டார் என்று சொல்கிறார்.

அதற்கு ராதிகா கோபி உங்ககிட்ட பேசினாரா? என்று கேட்க, இல்ல அவர் என்கிட்ட எதுவும் சொல்லல. அவங்க அம்மாவிடம் தான் சொல்லிட்டு இருந்தாரு என்று சொல்கிறார். அதற்கு ராதிகா ஆமா அவர் இங்க வந்தாரு இந்த பிரிவு தற்காலிகமானதா? நிரந்தரமா? என்று கேட்கிறார் என்று சொல்ல, அதற்கு பாக்கியா நானும் அதே தான் கேட்கிறேன், இந்த பிரிவு நிரந்தரமானதா? தற்காலிகமானதா? என்று கேட்கிறார்.
ராதிகா அதற்கு உங்களால் அவரைப் பிரிந்து தனியாக வாழ முடிந்த போது என்னால் வாழ முடியாதா? அவரை நம்பி என்னுடைய வாழ்க்கையில் பல கஷ்டங்களை நான் அனுபவித்து விட்டேன். நான் மட்டுமல்ல என்னை சார்ந்த பலரும் கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை. அதனால் இனி நிரந்தரமாக இந்த முடிவை எடுத்து விட்டேன் என்று சொல்கிறார்.
பிறகு பாக்கியா நான் உங்களை ஒரு நல்ல தோழியாக தான் பார்க்கிறேன். உங்களுக்கு எதுவும் என்றால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. நான் உடைந்து போய் இருந்த நேரத்தில் உங்களால் எல்லாம் முடியும் என்று எனக்கு தன்னம்பிக்கை கொடுத்தது நீங்கதான். என்னை நானே நம்ப வைத்ததும் நீங்கதான். நீங்க மட்டும் எனக்கு ஆரம்பத்தில் அவ்வளவு உதவிகள் செய்யவில்லை என்றால் நான் இன்று தைரியமாக இருப்பேனா என்று எனக்கே சந்தேகம் தான் என்று ராதிகாவுக்கு சப்போர்ட்டாக பேசுகிறார்.

பிறகு ராதிகாவை கட்டி அணைத்து, மயூவிற்கு முத்தம் கொடுத்துவிட்டு உங்களுடைய மகள் இனி நன்றாக இருப்பார் என்று கமலாவிடம் சொல்லிவிட்டு பாக்யா கிளம்புகிறார். மறுபக்கத்தில் ஈஸ்வரி கோபியை தூக்கத்திலிருந்து எழுப்புகிறார். பிறகு எல்லாரும் டீ குடிக்க உட்காரும்போது கோபிக்கும் போடவா என்று ஜெனி கேட்க கோபி வேண்டாம் என்று மறுத்து விடுகிறார்.
சீரியல் டீச்சரையே நிஜத்தில் திருமணம் செய்த விஜய் டிவி நடிகர்.. மணப்பெண் கூட இந்த சன் டிவி நடிகை தான்
பிறகு ஈஸ்வரி அங்கு வந்து நான் உனக்கு டீ போட்டு தரவா என்று கேட்க, எதுவும் வேண்டாம் என்று கோபி சொல்கிறார். அப்போது கோபியிடம் ராதிகாவை மறந்துவிட ஈஸ்வரி சொல்கிறார். நான் உன்னுடைய அப்பாவை பிரிந்து இருக்கவில்லையா? பாக்யா உன்னை பிரிந்து இருக்கலையா? இப்ப வந்தவ தானே ராதிகா... அவ வந்த பிறகு உன்னுடைய வாழ்க்கையில் நிறைய பிரச்சனை நடந்துச்சு.
நீ எப்போதுமே சந்தோஷமாகவே இல்லை. அவளுக்காக வீட்டில் எல்லாரையும் விட்டுட்டு போன, ஆனா நீ எப்பவாவது சந்தோசமா இருந்தியா? என்று கேட்கிறார். இதனால் கோபி தனியாக யோசித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications