பாக்கியலட்சுமி: மயூ கேட்ட கேள்வி.. கதறிய கோபி! பாக்யாவிடம் மன்னிப்பு கேட்ட செழியன்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 பிப்ரவரி 5ஆம் தேதிக்கான எபிசோடில் ராதிகாவின் பிரிவை நினைத்து கோபி அழுது கொண்டு இருப்பதை பார்த்து செழியன் மனம் மாறுகிறார். அதே நேரத்தில் மயூ ராதிகாவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோபி ராதிகா பேசியதை நினைத்து சாப்பிடாமல் இருக்கிறார். அப்போது ஈஸ்வரி வந்து நடந்ததை எல்லாம் மறந்துவிட்டு சாப்பிடவா என்று சொல்ல, அதற்கு கோபி எனக்கு சாப்பாடு வேண்டாம். நான் லேட்டா சாப்பிடறேன் என்று சொல்லிவிட்டு போகிறார். அடுத்ததாக குடும்பத்தோடு இருக்கும்போது அவர்களோடு ஈஸ்வரியும் சாப்பிட உட்காருகிறார். பிறகு சாப்பாடு பிடிக்கவில்லை என்று எழுந்து செல்ல, பாக்யா அவரை உட்கார வைத்து சாப்பிட சொல்கிறார்.

ஆனால் எனக்கு இப்போ பசிக்கல என்று கோபியை போலவே ஈஸ்வரியும் சொல்ல, அதற்கு பாக்யா அத்தை நீங்க மாத்திரை சாப்பிடணும் அதனால சாப்பிடுங்க என்று சொல்கிறார். பிறகு இனியாவிடம் கோபியை வந்து சாப்பிடுமாறு சொல்கிறார். உடனே இனியா கோபியை சாப்பிட வருமாறு கூப்பிடுகிறார்.
அதற்கு இப்போ வரல என்று கோபி சொல்ல, உங்கள அம்மா தான் கூப்பிட்டாங்க வாங்க என்று சொன்னதும் கோபி எழுந்து வருகிறார். பிறகு எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மறுபக்கத்தில் மயூ சோகமாக இருக்கிறார். அப்போது கமலா தன்னுடைய மகனிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ராதிகா ஆர்டர் செய்த சாப்பாடு வருகிறது.
சாப்பாட்டை வாங்கியதும் ராதிகா மயூவை சாப்பிட கூப்பிடுகிறார். ஆனால் எனக்கு பசிக்கல வேண்டாம் என்று சொல்கிறார். பிறகு ராதிகா மயூவை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார். அப்போது ராதிகாவிடம் இனிமேல் அப்பா பார்க்க வரமாட்டாரா? என்று கேட்க, ராதிகா நான் இருக்கிறேன் உன்கூட.. கடவுள் இப்படி எல்லாம் கஷ்டம் தருவது நம்மளை திடப்படுத்த, நீயும் நானும் எப்படி இருந்தோமோ அதுபோல நாம இனி சந்தோஷமா இருக்கலாம் என்று ஆறுதல் சொல்கிறார்.

இதை தொடர்ந்து கோபி ராதிகா விட்டு சென்றதை நினைத்து பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார். அப்போது ராதிகாவுக்கு போன் பண்ண முயற்சி செய்கிறார். முதலில் ரிங் போகிறது பிறகு போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்துவிடுகிறார். இதனால் கோபி தனியாக நின்று புலம்பி கொண்டிருக்கிறார்.
அங்கு வந்த செழியன் கோபியிடம் ஆறுதலாக பேசுகிறார். அப்போது கோபி உன்னை விட்டு ஜெனி பிரிந்த போது நீ எவ்வளவு கஷ்டப்பட்டியோ அவ்வளவு கஷ்டமா எனக்கு இருக்கு என்று புலம்பி கொண்டிருக்கிறார். அதோட வீட்டில் பெண்கள் நம்ம கூட இருக்கும்போது அவங்களுடைய அருமை தெரிய மாட்டேங்குது. அவங்க நம்ம விட்டு பிரிஞ்சு போன பிறகுதான் நமக்கு கஷ்டம் புரிகிறது.
உனக்கு ஜெனி பிரிந்த போது எப்படி இருந்ததோ.. அதுபோலத்தான் நான் பாக்கியாவை விட்டு பிரிந்த போது பாக்யாவிற்கும் இருந்திருக்கும். ஆனால் அப்போது அது எனக்கு தெரியல. இப்போது ராதிகா என்னை விட்டு பிரிஞ்சு போன போது தான் எனக்கு வலி தெரிகிறது என்று புலம்பி கொண்டிருக்கிறார்.

பிறகு கீழே வந்து செழியன் பாக்கியாவிடம் நான் உனக்காக எப்போதும் சப்போர்ட்டாக நின்றதில்லை என்று சொல்லி அழுகிறார். அதற்கு பாக்கியா உங்க பிரச்சனைகளை சமாளிக்க தெரிந்த எங்களுக்கு எங்களுடைய பிரச்சனைகளை சமாளிக்க தெரியாதா? எதைப் பற்றியும் யோசிக்காதே என்று சொல்லி அனுப்புகிறார்.
கடைசியாக கோபி அடுத்தநாள் காலையில் ராதிகா வீட்டிற்கு போகிறார். அங்கு கமலாவிடம் ராதிகாவை பார்க்க வேண்டும் என்று சொல்ல அதற்கு ராதிகா அவங்க இங்கே இல்லை.. எங்கு போனாங்கனு தெரியல என்று சொல்கிறார். ஆனாலும் அதை நம்பாத கோபி ஒவ்வொரு ரூமாக தேடுகிறார். ஆனால் ராதிகா எங்கேயும் இல்லை. இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications