ராதிகாவிடம் கெத்து காட்டிவிட்டு மண்ட மேல இருப்பதை கவனிக்க மறந்துட்டீங்களே.. இத்தனை சொதப்பல்களா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் மார்ச் 22 முதல் 23ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
ராதிகா பாக்யாவிடம் கேண்டினில் ஆர்டர் வேண்டும் என்றால் இங்கே அனைவரும் சுடிதாரில் வரவேண்டும் என்று கண்டிஷன் போட்டிருக்கிறார்.
இந்த நிலையில் ப்ரோமோவில் பாக்கியாவும் சுடிதார் ரோடு யூனிபார்மில் வந்து இருக்கிறார். கெத்தான வசனங்களும் பேசி இருக்கிறார். அது குறித்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

கோபிக்கு நிம்மதி போச்சு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் என்று தனி ரசிகர்கள் பட்டாலும் இருக்கிறது. இந்த சீரியலில் கோபி பாக்கியாவை விட்டுவிட்டு ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு கோபிக்கு ராதிகாவால் பிரச்சனை மேல் பிரச்சனை தான் வந்து கொண்டிருக்கிறது. ராதிகா அதிகமாக செலவு செய்து கோபியை கடன் வாங்க வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இனியாவும் கோபியின் வீட்டில் இருப்பதால் அங்கே அடிக்கடி சண்டை சச்சரவு வந்து கொண்டே இருக்கிறது.

பாக்கியாவிற்கு வெற்றிதான்
பாக்கியாவை கோபி விவாகரத்து செய்த பிறகு தன்னுடைய சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக அடுத்தடுத்த புது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சில நேரங்களில் சறுக்களை சந்தித்தாலும் கடைசியில் அவர்தான் அதில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து கேண்டின் தொடங்கி தற்போது அதில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார். ராதிகாவின் ஆபீசிலும் கேண்டீன் ஆர்டர் எடுத்து கெத்து காட்டி கொண்டிருக்கிறார்.

புது ரூல்ஸ்சா இது
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் இப்போது ராதிகா பாக்யாவை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று தன்னுடைய ஆபீஸில் அவர் ஹெச்ஆர் ஆக இருப்பதால் பாக்யா தொடர்ந்து இங்கே கேண்டில் நடத்த வேண்டும் என்றால் அனைவரும் சல்வார் போட்டு யூனிஃபார்மில் வரவேண்டும் என்று ஆர்டர் போடுகிறார். ஆனால் ஒரு ஆபீஸில் கேண்டினில் வேலை பார்ப்பவர்கள் சர்வாரில் வரவேண்டுமாம் ஆனால் ஹெச்ஆர் மட்டும் அதே புடவையில் வந்தால் போதுமா? இது எந்த வகையில் நியாயம்? எந்த ஆபீஸிலும் இப்படி ஒரு ரூல்ஸ் நாங்கள் கேள்விப்பட்டதே கிடையாது என்று தற்போது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அந்த கேப் எதற்கு
அது மட்டும் இல்லாமல் ராதிகா இப்போது சுடிதாரில் கெத்தாக வந்துவிட்டார். ஆனால் அவரோடு வேலை செய்யும் பெண்கள் எல்லோரும் தலையில் கேப் வைத்திருக்கிறார்கள். அது அங்கு பணி செய்யும் பெண்களின் தலையை முழுமையாக கவர் செய்யாமல் இருக்கிறது. இதை வைத்து இப்போது நெட்டிசன்கள் எதற்காக போட வேண்டுமோ அதையே சரியாக போடாமல், எதற்காக இப்படி ஸ்டைலாக போட்டுக்கொண்டு வரவேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications