நடுத்தெருவில் பாக்யாவால் அசிங்கப்பட்ட கோபி..போட்டியாக தொடங்கிய பிசினஸ்! புது பிரச்சனை தொடங்கியாச்சு
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவை மிரட்டிய கோபிக்கு கடைசியில் அவமானம் கிடைத்திருக்கிறது.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவை மிரட்டிய கோபியை பாக்கியா நடுத்தெருவில் அவமானப்படுத்துகிறார்.
இரண்டாவது திருமணம் செய்துவிட்டு போய்விட்ட நிலையிலும் பாக்யாவின் செயலை பார்த்து கோபியால் பொறுத்துக் கொள்ள முடியாமல் துடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் கோபி கேரக்டரில் நடிக்கும் சதீஷ் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் புது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

பாக்யாவை விட்டு சென்ற கோபி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்து ரசிகர்கள் எதிர்பார்த்த பல ட்விஸ்ட்கள் நடந்து வருகிறது. கதையின் நாயகி பாக்கியாவை கோபி வேண்டாம் என்று விட்டு விட்டு இரண்டாவதாக ராதிகாவை திருமணம் கொண்டு சந்தோஷமாக வாழலாம் என்று முடிவெடுத்திருந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு ராதிகாவால் கோபிக்கு அடுத்தடுத்து பிரச்சனைகளும் கவலையும் தான் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பாக்கியா தொடர்ந்து முன்னேற்றங்களை சந்தித்துக் கொண்டிருப்பதால் அதை பார்த்து கோபி பொறாமையில் தவிக்கிறார்.

தவிக்கும் கோபி
இந்த நிலையில் கோபிக்கு பாக்கியா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் செல்லும்போது அங்கு அவரோடு ஒன்றாக படிக்கும் பழனிச்சாமியுடன் பேசி பழகுவதை பார்த்து கோபியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பழனிச்சாமி கோபியின் கண் முன்னாடியே கேட்டரிங் திறப்பு விழா அன்று பாக்யாவை புகழ்ந்து பேசியதை குறித்து இப்போதும் புலம்பி கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ஒன்றாக சூப்பர் மார்க்கெட்டில் கோபியையும் பழனிச்சாமியையும் கோபியின் நண்பர் பார்த்ததால் அவர் எடுத்து அனுப்பிய புகைப்படத்தை பார்த்து மனதிற்குள்ளே வெந்து கொண்டிருக்கும் நிலையில் அதை நினைத்து தற்போது தொடர்ந்து குடிக்கவும் தொடங்கி இருக்கிறார்.

பாக்கியாவின் பதிலடி
இந்த நிலையில் பாக்யா தான் பெஸ்ட் நீ எல்லாம் வேஸ்ட் என்று ராதிகாவின் முகத்துக்கு நேராகவே பேசி ராதிகாவிடம் மாட்டியிருக்கும் நிலையில் பாக்யாவை தெருவில் பார்த்த கோபி பாக்யாவிடம் நேரடியாக யார் அந்த ஆள் அவரோடு நீ பேசக்கூடாது என்று உரிமையாக மிரட்டுகிறார். அதற்கு பாக்கியா அதைக் கேட்க நீங்க யார் என்று கேள்வி கேட்க, அப்படியெல்லாம் விட முடியாது. நான் கேள்வி கேட்பேன் என்று சொல்ல, பாக்கியா கோபிக்கு இங்கிலீஷில் பேசி பதிலடி கொடுக்கிறார். தற்போது இந்த பிரமோ வெளியாகி இருக்கிறது.

டீ மாஸ்டர் ரெடி
இந்த நிலையில் கோபியாக நடிக்கும் சதீஷ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், டீக்கடையில் டீ ஆற்றுவது போன்று ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அதில் இனி கூடிய சீக்கிரமே ஈஸ்வரி சாப்பாடு கேண்டின்ல டீ மாஸ்டராக சேர போறேன் என்று கூறியிருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நாங்கள் அதைத்தான் எதிர்பார்க்கிறோம் என்றும், பாக்யா பெரிய ஐடி கம்பெனியில் கேண்டீன் காண்ட்ராக்ட் எடுத்தா, கோபி பெட்டிக்கடைய ஆரம்பித்துவிட்டார் என்ற கருத்து தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications