பாக்கியலட்சுமி: கோபியிடம் சுதாகர் சொன்ன வார்த்தை! இனியா எடுத்த உருப்படியான முடிவு.. உண்மை உடைபட்டது

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஏப்ரல் பத்தாம் தேதிக்கான எபிசோடில் சுதாகர் ரெஸ்டாரெண்ட் பற்றி சொன்ன விஷயத்தை பாக்கியா குடும்பத்தினரிடம் சொல்ல, ஈஸ்வரி எதிர்பார்க்காத வார்த்தையை சொல்கிறார். அடுத்ததாக இனியா பாக்யாவிடம் நல்ல முடிவு சொல்லி இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியா வீட்டிற்கு குழப்பத்தோடு வர அங்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது எழில் வீட்டு வாசலில் போன் பேசிக் கொண்டிருக்க எழிலை வீட்டிற்குள் கூட்டிக்கொண்டு பாக்கியா வருகிறார். பாக்கியாவை பார்த்ததும் ஈஸ்வரி நீ இப்பவே வந்துட்ட ஆச்சரியமா இருக்கு நீ திருமணத்திற்கு அடுத்தவங்களை மாதிரி நேரடியா மண்டபத்துக்கு தான் வருவேன்னு நினைச்சேன் என்று சொல்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

புரிந்து கொள்ளாத கோபி

அதற்கு பாக்யா நான் எல்லாரிடமும் ஒரு விஷயம் பேசணும் என்று சொல்ல, எல்லோரும் என்ன விஷயம் என்று கேட்கும் போது சுதாகர் ரெஸ்டாரண்டுக்கு வந்த விஷயம் பற்றியும் ரெஸ்டாரண்டை தன்னுடைய பெயருக்கு மாற்ற வேண்டும் என்று சொன்ன விஷயத்தை பற்றியும் சொல்ல அதற்கு கோபி சம்பந்தி சொன்னது நல்ல விஷயம் தான். உன்னுடைய ரெஸ்டாரண்டின் பெயர் மட்டும்தான் மாறும் அதனால உன்னுடைய மற்றொரு ரெஸ்டாரண்டுக்கும் நல்ல பிரபலம் கிடைத்துவிடும் என்று சொல்கிறார்.

சந்தேகத்தில் பாக்யா

அதுபோல செழியன், ஈஸ்வரி எல்லோருமே சுதாகர் கேட்டதில் தப்பு ஒன்னும் இல்ல. உன்னுடைய மகளுக்காக இதை கூட நீ செய்ய மாட்டியா? என்று பாக்கியாவை சென்டிமென்டாக அட்டாக் செய்கிறார்கள். ஆனால் பாக்கியா யாருக்காகவும் என்னுடைய ரெஸ்டாரண்டை கொடுக்க முடியாது, நான் கஷ்டப்பட்டு உருவாக்கியது எல்லாவற்றையும் என்னுடைய பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டால் நாளைக்கு என்னுடைய அடையாளம் இல்லாமல் போய்விடும் இனியாவுக்கு என்னவெல்லாம் செய்யணுமோ அதை எல்லாம் நானே செய்து விடுவேன் ஆனால் இதை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல.

பாக்யாவுக்கு நெருக்கடி

நான் ஆரம்பத்தில் இருந்தே இந்த கல்யாண விஷயத்தில் சொல்லிக் கொண்டே இருந்தேன் அதுதான் இப்போ நடந்திருக்கு. சுதாகர் சார் இந்த கல்யாணத்தை ரெஸ்டாரண்டுக்காக தான் நடத்துகிறாரோ என்று எனக்கு சந்தேகமா இருக்கு என்று சொல்ல, எல்லோரும் பாக்யாவுக்கு எதிராக பேசிக் கொண்டிருக்கிறார்கள். எழில் மட்டும் அம்மா சொல்வதுதான் சரி என்று எனக்கும் தோணுகிறது, அம்மாவிற்கு சந்தேகம் வந்து இருக்கிறது என்றால் அது தப்பு என்பது போல எனக்கு தெரியல என்று சப்போர்ட் செய்கிறார்.

இனியாவின் மன மாற்றம்

அதற்கு ஈஸ்வரி எழிலை திட்டிக் கொண்டிருக்கிறார். பிறகு பாக்கியா ரூமிற்கு சென்று தனியாக யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் இனியா எல்லா விஷயமும் எனக்கு தெரியும். உன்னுடைய அடையாளத்தை எனக்காக நீ கொடுக்க வேண்டாம். யாருக்காகவும் எதையும் விட்டுக் கொடுக்காத அம்மா. நான் அப்பா பாட்டிக்காக என்னுடைய ஆசை கனவுகளை விட்டுக் கொடுத்திருக்கிறேன்.

இனியா சொன்ன வார்த்தை

நமக்கு பிடித்ததை அடுத்தவர்களுக்காக விட்டுக் கொடுக்கிறது எவ்வளவு பெரிய வலி என்று எனக்கு தெரியும். அதனால நீ விட்டுக் கொடுத்துதான் இந்த கல்யாணம் நடக்கணும் என்றால் அப்படி ஒரு கல்யாணம் எனக்கு தேவையில்லை. எனக்கு இந்த கல்யாணத்தில் பெருசா எந்த விருப்பமும் இல்லை. அதனால நீ இந்த ரெஸ்டாரண்டை யாருக்காகவும் கொடுக்காத என்று சொல்கிறார்.

சந்தோஷத்தில் ஈஸ்வரி

அதற்கு பாக்கியா நான் என்ன செய்தாலும் அந்த முடிவு சரியா இருக்கும்னு நினைக்கிறியா என்று கேட்க அதற்கு இனியா ஆமாம் என்று சொன்னதும் சரி என இனியாவை அனுப்பி வைத்துவிட்டு சிறிது நேரம் யோசித்து கொண்டு இருக்கிறார். பிறகு சோகமாக மாடி படியில் இறங்கி வர அப்போது ஈஸ்வரி சொந்தக்காரங்க எல்லாரிடமும் இனியாவை மாப்பிள்ளைக்கு டிவியில் பார்த்ததும் பிடிச்சு போயிடுச்சு என்று பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்.

மிரட்டும் ஈஸ்வரி

அப்போது அங்கு இருப்பவர்கள் பாக்யாவிற்கு இந்த கல்யாணத்தில் சம்மதம் இல்லையா என்று கேட்க, அதற்கு ஈஸ்வரி பாக்கியா டயர்ட் ஆக இருக்கிறா அவ்வளவுதான் என்று சொல்லி பாக்கியாவை தனியாக கூட்டிட்டு போய் திட்டுகிறார். அப்போது ஏற்கனவே ரெண்டு பிள்ளைங்க கல்யாணத்துல பண்ணிய குழப்பத்தை இப்பவும் பண்ணிராத. இந்த கல்யாணத்துக்காக எல்லா வேலைகளையும் நாம செஞ்சிட்டோம். சொந்தக்காரங்க எல்லாம் வந்துட்டாங்க இந்த நேரத்தில் மீண்டும் எங்களை அசிங்கப்படுத்தி விடாதே.

கோபிக்கு வந்த சந்தேகம்

இந்த ஒரு கல்யாணமாவது நல்லபடியா நடக்கட்டும் என்று சொல்லிக் கொண்டிருக்க பாக்கியா எதுவும் பேசாமல் யோசித்துக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் கோபி பாக்கியாவின் சந்தேகத்தை சரி செய்யணும் என்று சுதாகர் வீட்டிற்கு செல்கிறார். அங்கு சுதாகர் பார்த்து பேசும் போது சுதாகர் ரெஸ்டாரன்ட் போன விஷயத்தைப் பற்றி கேட்க அதற்கு சுதாகர் ஆமா நான் போனேன்.

சுதாகர் சொன்ன வார்த்தை

நான் ரெஸ்டாரண்டை என்னுடைய பெயருக்கு எழுதி தாங்க என்று கேட்கல அந்தப் பெயரை நம்முடைய கம்பெனி உடன் சேர்த்தால் நல்லது அதனால் அவர்களுக்கு தான் பெனிஃபிட்டு. என்னுடைய ஆம்பிஷன் அஞ்சு கிலோமீட்டர்க்கு ஒரு ரெஸ்டாரன்ட் வைக்க வேண்டும் என்பதுதான் அதற்காகத்தான் அந்த ரெஸ்டாரண்டின் பெயரை மட்டும் மாற்ற சொன்னேனே தவிர மேனேஜ்மென்ட் முழுமையாக சம்மந்தி தான் கவனிக்க போறாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

கோபியின் கேள்வி

அப்போது கடைசியாக கோபி இந்த ரெஸ்டாரண்ட் பிரச்சனையால் திருமணத்தில் எதுவும் பிரச்சனை வந்துவிடாதே என்று கேட்க, அதற்கு சுதாகர் சிரித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+