பாக்கியலட்சுமி: இனியாவிடம் பாக்யா வாங்கிய சத்தியம்.. கதறி அழுத செல்வி.. எழில் சொன்ன ஆறுதல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மார்ச் 11ஆம் தேதிக்கான எபிசோடில் இனியாவிடம் பாக்கியா சத்தியம் வாங்குகிறார். அதே நேரத்தில் பாக்யா பேசாததால் செல்வி அழுது கொண்டிருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியாவும் எழிலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பாக்கியா இந்த இனியாவுக்கு நம்ம இந்த வீட்டில் என்னடா குறை வச்சோம்? அவளுக்கு என்ன பிரச்சனை? நல்லா தானே பாத்துக்கிட்டோம், ரொம்ப டேலண்டான பொண்ணு மூணு மாசத்திலேயே படிச்சு ஸ்கூல் ஃபர்ஸ்ட் மார்க் வந்தவ. ஆனா இப்படி பண்ணுவா என்று நினைக்கல.

நான் அவ கிட்ட படிச்சு முன்னேறனும்னு சொல்லாத நாளே இல்ல. உங்க அப்பாவும் பாட்டியும் சொல்லிக்கிட்டு இருக்கிற மாதிரி வேலைக்காரங்க பையன் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன், அது மட்டும் இல்லாம அவ என்கிட்டையே வந்து சொல்றா.. ஆகாஷ் தான் இதெல்லாம் வேணாம்னு சொன்னானாம், ஆனா இவ தான் பேசணும்னு சொன்னதா சொல்றா.
ஒருவேளை நான் இனியாவை தப்பா வளர்த்துட்டேன்னு தோணுது என்று வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருக்க, அதற்கு எழில் இல்லம்மா நீ இனியாவுக்காக ரொம்ப சாக்ரிபேஸ் பண்ணி இருக்க என்று சொல்ல, அதற்கு பாக்கியா இந்த ஆகாஷுக்கு இது தேவையா? புருஷன் கிட்ட மாட்டிகிட்டு செல்வி எவ்வளவு கஷ்டப்படுறா, இவனால தான் இந்த குடும்பம் முன்னேற பாக்குதுனு என்று ரொம்ப கனவு கண்டிட்டு இருந்தா, மனசை அலைப்பாய விட்டா எப்படி அவனால் சாதிக்க முடியும்.

அவன் படிச்சு கலெக்டர் ஆனா அவங்க தம்பி தங்கச்சி லைஃப் மாறிடும். அவன் குடும்பம் கரை ஏறும் இந்த மாதிரி பண்ணுவான் என்று நான் நினைக்கல என்று பேசிக் கொண்டிருக்கும்போது செல்வி போன் செய்கிறார். ஆனால் பாக்கியா செல்வி போனை எடுக்காமல் இருக்க ஆகாஷிடம் செல்வி அழுது கொண்டு இருக்கிறார். என் சோத்துல மண்ணை அள்ளி போட்டுட்டே என்று திட்டுகிறார்.
மறுநாள் காலையில் கோபி, செழியன், ஈஸ்வரி, எழில் நான்கு பேரும் ஹாலில் காபி குடித்துக் கொண்டிருக்க இனியா அங்கு வருகிறார். இனியாவை பார்த்ததும் எல்லோரும் முகத்தை திருப்பிக் கொள்ள எழில் மட்டும் பேசுகிறார். காபி குடிக்கிறியா என்று எழில் கேட்க, அதற்கு ஈஸ்வரி அவளை கொஞ்சிக்கிட்டு இரு என்று திட்டுகிறார்.
அப்போது இனியா என்கிட்ட எல்லாரும் ஏன் பேச மாட்டேங்கறீங்க? நான் செஞ்சது தப்புதான். என்னை திட்டுங்க அடிங்க ஆனா பேசாம மட்டும் இருக்காதீங்க என்று சொல்ல செழியன் நீ பண்ண வேலைக்கு உன்கிட்ட யாரு பேசுவா? எவனை பார்த்தாலும் பல்லை காட்டுற, அவன் பின்னாடியே போயிடுவியா? என்று திட்ட கோபி செழியா என்று அதட்டுகிறார். அப்போது பாக்கியா நீ என்ன வார்த்தை பேசுற? என்ன இருந்தாலும் நீ அவளோட அண்ணன்.

அவளை கண்டிப்பதற்கு அம்மா நான் இருக்கிறேன். அப்பா இருக்காரு. அப்படியும் மீறி பேசணும்னா என்ன பேசணும்னு தெரிஞ்சு பேசு என்று திட்ட ஈஸ்வரி அவனை எதுக்கு திட்டுற, இவ பண்ணுனது தானே தப்பு என்று சொல்கிறார். அதற்கு பாக்கியா நீங்க செழியனை கண்டித்து இருந்தா இப்ப நான் பேசியிருக்க மாட்டேன் என்று திட்டி விட்டு போகிறார்.
இனியா அழுது கொண்டு இருக்க பாக்கியா வந்து போனை எடுத்துக் கொண்டு போக, இனியா பாக்யாவை கூப்பிட்டு நீயாவது என்கிட்ட பேசுமா என்று சொல்ல, பாக்கியா செழியன் பேசினது தப்பு தான் ஆனா நீ அந்த அளவுக்கு இடம் கொடுத்து வச்சிருக்க. உங்க மேல தப்பு இருக்கு. அதனாலதான் அப்படி பேசுறாங்க என்று சொல்கிறார்.

ஆனால் இனியா ஆகாஷ் எனக்கு நல்ல சப்போர்ட்டா இருந்திருக்கான் நான் என்ன சொன்னாலும் காது கொடுத்து கேட்பான் என்று சொல்ல, அப்போ இந்த வீட்ல இருக்கிறவங்க யாரும் உன்னை நல்லா பாத்துக்கலையா? உன்கிட்ட எத்தனை நாளா நான் சொல்லி இருக்கேன் நீ படிச்சு நல்ல வேலைக்கு போகணும்னு சொல்லியிருக்கிறேன்.
வெள்ளி திரையில் அறிமுகமான சிறகடிக்க ஆசை சீரியல் ரோகிணி.. அதுவும் இந்த டாப் நடிகர்களின் படத்தில் தான்
ஆகாஷ் படிச்சு நல்ல வேலைக்கு போவான் அவன் கிட்ட லட்சியம் இருக்கு உனக்கு என்ன இருக்கு? என்று கேட்க, பதில் எதுவும் சொல்ல முடியாமல் இனியா தலை குனிந்து நிற்கிறார். எவ்வளவு பெரிய படிப்பு வேணும்னாலும் படி வேலைக்கு போ. அதுக்குள்ள இந்த மாதிரி மனசை அலைபாய விடாத அப்படின்னு எனக்கு சத்தியம் பண்ணு என்று கேட்கிறார். முதலில் தயங்கும் இனியா பிறகு பாக்யாவிற்கு சத்தியம் செய்து கொடுக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications