பாக்கியலட்சுமி: செல்வி சொன்ன வார்த்தை.. ஈஸ்வரிக்கு அதிர்ச்சி கொடுத்த பாக்யா.. கோபியின் மனமாற்றம்! செம சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மே 17ஆம் தேதிக்கான எபிசோடில் பாக்யா வீட்டிற்கு லேட்டாக வருவது பற்றி ஈஸ்வரி பிரச்சனை செய்கிறார். அதே நேரத்தில் செல்வி பாக்கியாவிற்கு ஈஸ்வரி விஷயத்தில் நல்ல ஐடியா கொடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியா வீட்டிற்கு லேட்டாக ஸ்கூட்டியில் வந்து கொண்டிருக்கிறார். அப்போது ஒரு ஓரத்தில் வண்டியை நிறுத்தி ஹோட்டலில் நடந்த பிரச்சனைகளை நினைத்து பார்க்கிறார். ஆனால் இந்த விஷயத்தை வீட்டில் சொன்னால் கூட கொஞ்சம் பிரச்சனை பண்ணுவாங்க. ஏற்கனவே வீட்டை எதிர்த்து தான் இந்த பிசினஸ் தொடங்கி இருக்கிறோம் அதனால எல்லாவற்றையும் நாமதான் பாத்துக்கணும் என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லிவிட்டு வீட்டிற்கு வருகிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

பாக்கியாவிற்கு தண்டனை

ஆனால் வீட்டில் கதவை லாக் செய்துவிட்டு ஈஸ்வரி ஹாலில் உட்கார்ந்திருக்கிறார். பாக்கியா அத்தை, எழில் என்று கூப்பிட்டுக் கொண்டிருக்க ஈஸ்வரி கதவை திறக்காமல் ஹாலில் கோபத்தில் இருக்கிறார். அந்த நேரத்தில் அங்கு வந்த எழில் அம்மாவை போய் பார்த்துட்டு வரேன் என்று கிளம்புகிறார். அப்போது வீட்டில் வெளிச்சம் தெரிவதை பார்த்து மீண்டும் பாக்கியா எழில் எழில் என்று கத்தியதும் எழில் வந்து கதவை திறக்கிறார்.

எழில் கேட்ட கேள்வி

ஏம்மா வெளியிலே இருக்கிற? பாட்டியை கூப்பிட்டு இருக்கலாமே? பாட்டி ஹாலில் தான் இருந்தாங்க என்று எழில் சொன்னதும் பாக்யா நான் கூப்பிட்டேன் என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் வருகிறார். அப்போது ஈஸ்வரி பாக்யாவை நிறுத்தி இப்படித்தான் குடும்ப பொம்பள 12 மணிக்கு வீட்டுக்கு வருவாளா? என்று வாக்குவாதம் செய்ய, அதற்கு பாக்கியா எனக்கு டயர்டா இருக்கிறது, நான் குடும்ப பொம்பளையா இல்லையா என்று இப்போது சொல்லிக்கிட்டு இருக்க முடியாது என்று கிளம்பி போய் விடுகிறார்.

கண்டுகொள்ளாத பாக்யா

பிறகு அடுத்த நாள் காலையில் இதை வைத்து பஞ்சாயத்து செய்வதற்காக ஈஸ்வரி இருக்கும்போது பாக்கியாவை பற்றி பேசுவதற்காக கோபியையும் வீட்டிற்கு வர வைத்து இருக்கிறார். ஆனால் பாக்கியா நாலரைக்கு ஹோட்டலுக்கு போய்விட்டதாக அமிர்தா சொன்னதும் ஈஸ்வரி மேலும் கோபமாகிறார். அதற்கு கோபி விடுங்க அம்மா அவ வேலை தான பாக்குறா? அவளுடைய இஷ்டத்துக்கு இருக்கட்டும்.

ஈஸ்வரியின் வாக்குவாதம்

இதில் நான் எதுவும் சொல்ல முடியாது. ஒரு பிசினஸ் செய்தால் இப்படித்தான் சில நேரங்களில் டைம் ஆகும் அதுக்காக எல்லாம் நாம வாக்குவாதம் செஞ்சிட்டு இருக்க முடியாது என்று சொல்ல, நீங்க கொடுக்கிற சப்போர்ட்ல தான் இவ இப்படி திரியுறா என்று திட்டிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் செல்வி பாக்யாவிடம் நேற்று லேட்டா போனதற்கு உன் மாமியார் ஒன்னும் கேட்கலையா என்று கேட்க, வழக்கம் போல தான் அவங்க பஞ்சாயத்து செஞ்சாங்க.

செல்வி கேட்ட கேள்வி

குடும்ப பொம்பளையா வீட்டிற்கு நேரத்திற்கு வரணும்னு சொன்னாங்க என்று சொல்ல, உன் மாமியார் தான் உன் கூட இருக்க பிடிக்காம தான மகன் கூட போனாங்க? இப்போ எதுக்காக மீண்டும் வந்து இப்படி பிரச்சனை பண்ணிட்டு இருக்காங்க? அவங்க பையன் கூட போக சொல்ல வேண்டியது தானே என்று அட்வைஸ் செய்கிறார். மறுபக்கத்தில் அமிர்தா சாப்பாடு பரிமாறிக் கொண்டிருக்கிறார். அப்போது அமிர்தா சாப்பாடை எல்லோரும் பாராட்ட ஈஸ்வரி வழக்கம் போல அதையும் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+