பாக்கியலட்சுமி: சுதாகருக்கு ஆப்பு, இனியாவிடம் பாக்யா கொடுத்த ஐடியா.. ஈஸ்வரியால் வெடிக்கும் பூகம்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மே 16 ஆம் தேதிக்கான எபிசோடில் ரெஸ்டாரண்ட் விஷயத்தில் பாக்கியா இனியாவிற்கு சில ஐடியாக்களை கொடுக்கிறார். இதனால் சுதாகருக்கு எதிராக இனியா நிற்கப் போகிறார் என்று தெரிகிறது. அதே நேரத்தில் ஈஸ்வரியால் பாக்யா வீட்டிற்குள் புது பிரச்சனை வெடிக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் யாரும் எதிர்பார்க்காத கதைக்களம் இப்போது வந்திருக்கிறது. இதுவரைக்கும் ஈஸ்வரியால் பாக்யாவிற்கு மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்திற்கு அவ்வபோது பிரச்சனைகள் வந்து கொண்டிருந்தது. இப்போது ஈஸ்வரியிடம் எழில் நேராக மோதத் தொடங்கி இருக்கிறார். அதே நேரத்தில் நேற்றைய எபிசோடில் இனியா தன்னுடைய மாமனார், சுதாகரிடம் ரெஸ்டாரண்ட் பற்றி கேட்டிருந்தபோது உங்க அம்மா என்னிடம் பணத்தை வாங்கிட்டாங்க என்று சுதாகர் கூறியிருந்தார்.

Baakiyalakshmi Serial vijay TV

இனியா கேட்ட கேள்வி

இதனால் இது பற்றி விசாரிக்க இன்று பாக்கியாவின் ரெஸ்டாரண்டுக்கு இனியா வந்திருக்கிறார். இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியா தொடங்கி இருக்கும் புது ரெஸ்டாரண்டின் ஓனரிடம் ரவுடிகள் வந்து பிரச்சனை செய்தது குறித்து பேச, அதற்கு அவர் இது எல்லாம் உங்க பிரச்சனை. நீங்க தான் பாத்துக்கணும் அவங்களை எதிர்த்துட்டு என்னால் இந்த ஊருக்குள் இருக்க முடியாது என்று சொல்லிவிடுகிறார்கள்.

பாக்யா எடுத்த முடிவு

அதனால் ரவுடிகள் விஷயத்தை நாமளே பார்த்துக் கொள்ளலாம் என்று பாக்கியா சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் இனியா அங்கு வருகிறார். இனியாவை பார்த்ததும் பாக்கியா சந்தோஷப்படுகிறார். பிறகு நீ வீட்டில் ரெஸ்டாரண்ட் பற்றி பேச போறேன்னு சொன்னியே யாராவது ஏதாவது சொன்னாங்களா? என்று கேட்க, அதற்கு நான் பேசினேன் அவங்க நீ பணம் வாங்கினானு சொல்றாங்க என்று சொன்னதும், பாக்கியம் அதற்கு ஆமாம், நான் அதை மறுக்கல. எனக்கு நிறைய கடன் இருந்தது அதனால் அந்த பணத்தை வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்தது என்று சொல்கிறார்.

செல்வி சொன்ன உண்மை

அதற்கு செல்வி உங்க மாமனார் ஒன்னும் அக்கா கேட்ட பணத்தை அப்படியே கொடுத்துடல. அதுக்கு பாதி பணம் தான் கொடுத்தாரு. அது கடத்த மட்டும் தான் அடைக்க முடிஞ்சது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இதனால் பீல் பண்ணும் இனியா பாக்யாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு எனக்காக உன்னுடைய கனவுகளை நீ இழந்திருக்க என்று சொல்ல, நான் என்னுடைய கஷ்டங்களை தாங்கிக் கொள்வேன். நீ எனக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சா அந்த ரெஸ்டாரண்ட்டை நீயே கவனிச்சுக்கோ. மேனேஜ்மென்ட்டை நீ எடுத்து நடத்து என்று சொன்னதும் இனியா இது பற்றி நான் யோசிக்கிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

ஆகாஷ் செய்த உதவி

அதை தொடர்ந்து ஆகாஷ் அங்கு வந்து நேற்று பிரச்சனை செய்தவர்கள் இன்னைக்கு வந்தாங்களா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்‌. பிறகு செல்வியிடம் பேசிவிட்டு ஆகாஷ் கிளம்பும் நேரத்தில் பாக்கியாவும் வீட்டிற்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு கிளம்புகிறார். ஆகாஷ் நான் கொண்டு உங்கள் வீட்டில் விட்டுருவேன் என்று பாக்யாவை கூட்டிக்கொண்டு போகிறார். மறுபக்கத்தில் அமிர்தா சமைத்துக் கொண்டிருக்கிறார்.

எழில் கோபம்

அங்கு வரும் எழில் ஈஸ்வரி சாப்பாடு நல்லா இல்லை என்று சொன்னது குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு அமிர்தா அதெல்லாம் பரவாயில்லை நான் சமாளித்து விடுகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது நீ சமைச்சது நல்லாதான் இருந்தது ஆனா பாட்டி வேணும்னு தான் இப்படி சொல்றாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ஈஸ்வரி பின்னாடி வந்து நின்று இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

மாட்டிக்கொண்ட எழில்

பிறகு அமிர்தா பாட்டி என்று சொன்னதும் திரும்பிப் பார்த்த எழில் அதிர்ச்சியடைகிறார். ஈஸ்வரி வழக்கம் போல எழிலிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கிறார். அப்போது இந்த வீட்டில் அமிர்தா மட்டும்தான் வேலை செஞ்சுட்டே இருக்கணுமா? சிலர் இருந்த வீட்டில் வேலையே செய்யாமல் இருக்கிறார்கள், ஆனால் வேலை செய்த அமிர்தாவையே நீங்க குறை சொல்லிட்டு இருக்கீங்க என்று எழில் வாக்குவாதம் செய்ய இதை எல்லாம் செழியன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஈஸ்வரி கேள்வி

அந்த நேரத்தில் பாக்யா சாப்பாடு எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வருகிறார். பாக்கியவிடம் ஈஸ்வரி உன்னால தான் இந்த வீட்டில் பிரச்சனை வருது. நீ வீட்டில் இருந்து ஒழுங்கா வேலையை பார்த்தால் இந்த பிரச்சனை இல்லை என்று சொன்னதும் பாக்கியா கோபப்படுகிறார். இத்தனை வருஷமா அடுத்தவங்க கிட்ட கையேந்தி நின்னேன். இப்ப ஏழு வருஷம் தான் சுயமா சம்பாதிச்சு என்னுடைய செலவுகளை பாத்துட்டு இருக்கேன். என்னால் மறுபடியும் அடுத்தவங்க கிட்ட பணம் வேண்டும் என்று கேட்க முடியாது என்று சொல்கிறார்

பாக்யா பதிலடி

அதற்கு ஈஸ்வரி இவங்க ரெண்டு பேரும் உன்னுடைய பசங்க, அவங்க கிட்ட கூட உனக்கு பணம் வாங்க முடியாதா? என்று வாக்குவாதம் செய்கிறார். அதற்கு பாக்கியா பசங்களா இருந்தாலும் அவங்ககிட்ட இருக்கும்போது மட்டும் தான் தருவாங்க திடீர்னு அவங்க கிட்ட இல்லாத நேரம் எனக்குன்னு தேவை வரும்போது தேவையில்லாத மனக்கசப்பு வரும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+