பாக்கியலட்சுமி: ரெஸ்டாரண்ட் பற்றி நேரடியாக இனியா கேட்ட கேள்வி.. கோபத்தில் பாக்யா.. சுதாகர் வீட்டுக்கு போகும் கோபி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஏப்ரல் 18ஆம் தேதிக்கான எபிசோடில் ரெஸ்டாரண்ட் விஷயம் பற்றி பாக்யாவிடம் இனியா கேட்டதும், பாக்யா கோபத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் ரெஸ்டாரண்ட் விஷயத்தை பற்றி கேள்விப்பட்டதும் கோபி முக்கிய முடிவு எடுத்திருக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் எதிர்பாராத திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் இனியா நித்திஷுடன் பாக்கியா வீட்டிற்கு வந்திருக்கிறார். ரெஸ்டாரன்ட்டை சுதாகர் ஏமாற்றி வாங்கிவிட்டார் என்ற கோபத்தில் பாக்கியா வீட்டிற்கு வரும்போது இனியாவை பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறார். அதோடு நித்திஷும் வந்திருப்பதை பார்த்து மனதிற்குள் கோபம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

பாக்கியாவுக்கு பாராட்டு
பாக்யா முகம் வாடி இருப்பதை பார்த்து குடும்பத்தினர் கேள்வி கேட்கிறார்கள். ஆனால் இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம் என்று பாக்கியா சொல்லாமல் மறைக்கிறார். பிறகு ஈஸ்வரி எல்லாருக்கும் சாப்பாடு செய் என்று பாக்யாவிடம் சொல்கிறார். பாக்யாவும் சமையல்களை செய்து முடிக்கிறார். பிறகு நித்திஷ் சாப்பிட்டு விட்டு நான் வாழ்க்கையில் இதுபோல சாப்பாடு சாப்பிடவில்லை என்று பாக்கியாவை பாராட்டுகிறார்.
திட்டும் ஈஸ்வரி
பிறகு இனியா பாக்யாவிடம் பேசுகிறார். அப்போது ரெஸ்டாரண்ட் விஷயம் என்னாச்சுமா என்று கேட்க, பாக்யா அதிர்ச்சி அடைகிறார். ஆனால் அதை எல்லாம் முடிச்சாச்சு பிரச்சனை இல்ல என்று சமாளித்து விடுகிறார். இனியாவிடம் எந்த விஷயமும் சொல்லாமல் மறைக்கிறார். பிறகு இனியாவும் வீட்டிற்கு கிளம்பி போகிறார். அதைத் தொடர்ந்து பாக்கியா கோபத்தில் உட்கார்ந்து இருப்பதை பார்த்ததும் ஈஸ்வரி வந்தவங்கள வழி அனுப்ப கூட வரமாட்டியா என்று திட்டுகிறார்.
ரெஸ்டாரண்ட் மாறிடுச்சு
அப்போது நான் இவ்வளவு நேரமா மனசுக்குள்ள வச்சிருந்த பிரச்சனையை வெளியே சொல்லாமல் எப்படி இருந்தேனே தெரியல நீங்க இன்னும் என்கிட்ட கேள்வி கேட்காதீங்க என்று கோபப்படுகிறார். அப்போது என்ன நடந்தது என்று புரியாமல் மொத்த குடும்பமும் இருக்கிறார்கள். அதற்கு பாக்கியா ரெஸ்டாரண்டுக்கு சுதாகர் வந்த விஷயத்தை பற்றியும் ரெஸ்டாரன்டை முழுமையாக அவருடைய கம்பெனி பெயருக்கு மாற்றிவிட்டது குறித்தும் சொல்கிறார்.
புரியாத ஈஸ்வரி
இனி எனக்கும் அந்த ரெஸ்டாரண்டுக்கும் எந்த தொடர்பும் இல்லையாம் என்று கத்தி பேசுகிறார். அதற்கு ஈஸ்வரி என்ன பேசிட்டு இருக்க என்று கேட்க, நான் அவ்வளவு தூரம் வேணான்னு சொல்லியும் எல்லாரும் என்னை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி காலி பத்திரத்தில் கையெழுத்து போட சொன்னீங்க. அப்பவே ஏதோ பெருசா நடக்க போகுதுன்னு தெரியும் ஆனா இவ்வளவு சீக்கிரமா நடக்கணும்னு நான் எதிர்பார்க்கல.
கோபப்படும் பாக்கியா
இனியாவுக்கு ரெஸ்டாரண்ட்டை கிப்ட்டா கொடுத்து விட்டதா எழுதி இருக்கிறார் என்று சொன்னதும் ஈஸ்வரி நீ சம்பாதிக்கிறது எல்லாமே உன் பிள்ளைகளுக்கு தானே? இப்போ ஒன்னும் கெட்டுப் போகவில்லை. உன் பிள்ளை பெயரில் தானே இருக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணிக்கிட்டு இருக்க என்று திமிராக பேசுகிறார். அதற்கு செழியன் அவர் அப்படி பண்ணிருக்க மாட்டாருமா. நீ சரியா படிச்சு பாத்தியா என்று கேட்க, ஆமா எனக்கு படிக்க தெரியாதில்ல... உனக்கு ஏபிசிடி கத்து கொடுத்ததே நான் தான் என்று செழியனிடம் கோபப்படுகிறார்.
சந்தேகப்படும் கோபி
அதற்கு ஈஸ்வரி அவருக்கு அவ்வளவு ரெஸ்டாரண்ட் இருக்குது ஆனா அவர் உன் ரெஸ்டாரண்டில் தான் சம்பாதிக்க போறாரா என்று கேட்க பாக்கியா கோபப்பட்டு திட்டுகிறார். பிறகு அங்கிருந்து வேகமாக கிளம்பி போய்விடுகிறார். இதனால் கோபி பாக்கியா இவ்வளவு சொல்லுறான்னா ஏதோ நடந்திருக்கிறது. ஆனால் என்ன நடந்தது என்று நான் விசாரிச்சுட்டு வரேன் என்று சுதாகர் வீட்டிற்கு கிளம்புகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications