பாக்கியலட்சுமி: இனியா மீது பெரிய பழியை போட்ட சுதாகர் குடும்பம்.. ஆட்டத்தை தொடங்கிய கோபி.. அதிர்ச்சியில் பாக்யா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜூன் 18ஆம் தேதிக்கான எபிசோடில் இனியா மீது சுதாகர் குடும்பத்தினர் பெரிய பழியை போடுகின்றனர். அதே நேரத்தில் கோபி செய்த செயலை பார்த்து பாக்கியா வியந்து இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியா தன்னுடைய ரெஸ்டாரண்டில் பாட்டு பாடுபவர்களுக்கு சாப்பாட்டில் 30 சதவீத டிஸ்கவுன்ட் என்ற நோட்டீசை ஒட்டி இருக்கும் நிலையில் அதை பார்த்து ஒரு பெண் வந்து பாட்டு பாடிவிட்டு சாப்பிடுகிறார். அந்த நேரத்தில் கோபி காரில் வந்து இறங்க, அவரிடம் பாக்கியா என்ன சாப்பிடுறீங்க என்று கேட்க கோபி ஈஸ்வரி ராதிகாவிடம் சென்று பேசியதற்கு மன்னிப்பு கேட்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

கோபியின் திறமை

ஆனால் பாக்கியா நான் உங்ககிட்ட கேட்டது வேற நீங்க என்ன சாப்பிட போறீங்க என்று கேட்க கொஞ்சம் இரு என்று கோபி காருக்கு சென்று கிட்டாரை எடுத்து வந்து பாட்டு பாடுகிறார். கோபி பாடுவதை பார்த்து பாக்கியா இன்ப அதிர்ச்சி அடைகிறார். அப்போது செல்வி பாக்யாவிடம் சாருக்கு பாட தெரியுமா? என்று கேட்க, பாக்யா இதுவரைக்கும் எனக்கு இது தெரியாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். கோபியின் பாட்டை எல்லோரும் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

சுதாகர் குடும்பம் நடத்தும் நாடகம்

அப்போது வெளியில் இருந்தும் சிலரும் வந்து கோபியின் பாட்டை கேட்டு கைதட்டி பாராட்டுகின்றனர். அப்போது கோபி என்னுடைய திறமையை பற்றி நீ எதுவுமே சொல்லல பாக்கியா என்று சொல்ல, நான் பில் எடுத்துட்டு வரேன் என்று பாக்கியம் கிளம்புகிறார். மறுபக்கத்தில் சுதாகர், சந்திரிகாவிடம் நிதிஷ் எங்க என்று கேட்க, நிதிஷ் தன்னுடைய பிரண்ட்ஸை பார்க்க போயிருக்கிறான் என்று சந்திரிகா சொல்ல, அவன் நிலைமை தெரிஞ்சும் எதற்கு நீ அவனை வெளியே அனுப்புன என்று கோபப்பட்டு பேசுகிறார்.

போதையில் நிதிஷ்

அப்போது நிதிஷ் தள்ளாடியபடி உள்ளே வருகிறார். அவரை தாங்கி பிடித்து உட்கார வைத்து இந்த ட்ரக்ஸ் பழக்கத்தால் நீ இழந்தது போதாதா எது நடக்கக் கூடாதுன்னு நினைச்சமோ அது மறுபடியும் நடந்துச்சு என்று சுதாகர் திட்டிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் இனியா வந்துவிட நிதிஷ்க்கு என்ன ஆச்சு என்று கேட்க, ஒன்னும் இல்ல நான் அவனை எங்க ரூம்ல படுக்க வைத்து விட்டு வரேன் என்று சுதாகர் சொல்லிவிட்டு வெளியில் கூட்டிக்கொண்டு வருகின்றனர்.

இனியா மீது விழுந்த பழி

அதைப் பார்த்த இனியா நிதிஷுக்கு என்ன ஆச்சு? அவர் குடிச்சிருக்காரா? என்று கேட்க அதற்கு சந்திரிகா கோபப்பட்டு அதற்கு காரணம் நீதான். கல்யாணம் ஆனதற்கு அப்புறம் லவ் பண்ற பையன் கூட பொண்டாட்டி பேசுறதை பாத்தா எந்த ஆம்பளைக்கு கோபம் வராமல் இருக்கும்? உன்னால என் பையன் வாழ்க்கையே நாசமா போச்சு என்று இனியா மேல் பழியை தூக்கி போட, சுதாகர் நீ போய் படு அப்புறம் பேசிக்கலாம் என்று அனுப்பி விடுகிறார்.

கோபத்தில் ஈஸ்வரி

மறுபக்கத்தில் ஈஸ்வரி சோகமாக உட்கார்ந்து இருக்கிறார். அப்போது செழியன் வந்து பேச ஈஸ்வரி கோபப்பட்டு திட்டி அனுப்புகிறார். அப்போது பாக்யா வந்து என்ன விஷயம் என்று பேச, பாக்யாவிடம் நீ கோபியுடன் செய்து வாழ மாட்டேன் என்று சொன்னதும் தான் நான் ராதிகாவிடம் பேசினேன். ஆனால் ராதிகாவுமா என் பையன் கூட சேர்ந்து வாழ மாட்டேன் என்று சொல்லிட்டா. என் பையன் கடைசி காலத்தில் தனி மரமாய் இருப்பதை பார்க்கும்போது எனக்கு கஷ்டமா இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+