பாக்கியலட்சுமி: பாக்யாவுக்கு துணை நிற்கும் கோபி.. சுதாகர் குடும்பத்தின் உண்மை முகத்தை அறிந்த இனியா.. செம சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஜூன் இரண்டாம் தேதிக்கான எபிசோடில் பாக்யாவிற்கு துணையாக கோபி பாக்யாவின் ரெஸ்டாரண்டிற்கு செல்கிறார். அதே நேரத்தில் இனியா சுதாகரின் குடும்பத்தின் உண்மை முகத்தை அறிந்து கொள்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியாவும், செல்வியும் ரெஸ்டாரண்டில் சமையல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அங்கு கூட்டம் எதுவும் வரவில்லை மொத்தமே மூன்று பேர் தான் வந்திருக்கிறார்கள். இது குறித்து செல்வியும் பாக்யாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கோபி அங்கு வருகிறார். கோபியை பார்த்ததும் எதற்காக வந்தீங்க? என்று பாக்கியா கேட்க, எனக்கு தலை வலிக்கிறது, அதனால உன் ரெஸ்டாரண்டுக்கு வந்து மாத்திரை வாங்கலாம் என்று வந்தேன் என்று கிண்டல் செய்கிறார்.

மீண்டும் கவுன்சிலர் வருகை
அதற்கு பாக்யா கடுப்பாக, ஹோட்டலுக்கு எதுக்கு வருவாங்க சாப்பிட தான் வந்திருக்கிறேன் என்று சொன்னதும், சாப்பிட போறீங்களா? என்று பாக்யா கேட்க இல்லை சாப்பிட வரல என்று கோபி சொல்ல பாக்யா கோபமாக எதற்கு வந்தீங்க என்று கோபப்பட்டு கேட்க, இந்த ஹோட்டலில் உனக்கு இனி யார் பிரச்சனை கொடுக்குறாங்கன்னு நான் பார்க்கிறேன் என்று சொல்ல எனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் நானே பார்த்துப்பேன் நீங்க கிளம்புங்க என்று சொல்கிறார்.
கோபத்தில் பாக்கியா
அதற்கு கோபி அப்படியெல்லாம் விட்டுட்டு போக முடியாது. எனக்கு ஒரு காபி கொடு என்று சொல்லிவிட்டு அங்கே உட்கார்ந்திருக்கிறார். பிறகு பாக்கியா காபி கொண்டு வந்து கொடுத்ததும் அதை குடித்துக் கொண்டிருக்கும் போது கவுன்சிலர் அங்கு வந்து நீங்க அமைச்சர் வரைக்கும் போய் என்னென்னலாமோ பண்ணி உங்க பையனை வெளியில கொண்டு வந்துட்டு ஹோட்டல்லையும் திறந்துட்டீங்க. உண்மையிலேயே நீங்க பெரிய ஆளு தான் என்று பாராட்டுவது போல தன்னுடைய கோபத்தை வெளி காட்டுகிறார்.
கோபி செய்த செயல்
அதற்கு பாக்கியாவும் கோபமாக பார்க்க, நான் இங்க பிரச்சனை பண்ண வரல மேடம், சாப்பிட தான் வந்தேன் என்று சொல்கிறார். அதோடு எனக்கு பூரியும் உருளைக்கிழங்கு குருமா வேண்டும் என்று கேட்க அதற்கு பாக்கியா இங்கே பூரி கிடையாது என்று சொல்கிறார். அப்போது கோபி நைட்டு டைமில் கொலஸ்ட்ரால் இருக்கிற மாதிரி ஆயில் புட் எல்லாம் சாப்பிடக்கூடாது சார் என்று சொல்கிறார்.
கடுப்பாகும் கவுன்சிலர்
கோபி பேசியதை கேட்டு கோபமான கவுன்சிலர் பாக்யாவிடம் ஒவ்வொன்றாக கேட்டுக் கொண்டே இருக்க, அதற்கு கோபியே பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதனால் கடுப்பாகும் கவுன்சிலர் இது யார் என்று விசாரிக்கிறார். அந்த நேரத்தில் கவுன்சிலர் உடன் வந்தவர்கள் இப்பதான் இந்த அம்மா கூட பிரச்சனை ஆகியிருக்கு இப்போ பேசினால் சரியா இருக்காது நாம இங்கிருந்து போகலாம் என்று கூட்டிக்கொண்டு போகிறார்.
மன்னிப்பு கேட்ட இனியா
பிறகு பாக்கியா ஹோட்டலை மூட போகும்போது கோபி ஹெல்ப் பண்ணுகிறார். அதோடு பாக்கியா வேண்டாம் என்று சொன்னாலும் ஒவ்வொரு வேலையாக செய்து கொண்டு இருக்கிறார். பிறகு பாக்யா பைக்கில் கிளம்பும்போது கோபி காரில் பின்தொடர்ந்து வீடு வரைக்கும் வருகிறார். மறுபக்கத்தில் இனியா சுதாகர் வெளியே கிளம்பும் நேரத்தில் நேற்று நீங்க சாப்பிடும்போது நான் குரலை உயர்த்தி அப்படியெல்லாம் பேசி இருக்க கூடாது என்று சொல்கிறார்கள்.
அதிர்ச்சியில் இனியா
இனியா பேசுவதை பார்த்து கடுப்பாகும் சுதாகரின் மனைவி, அவர் இவ்வளவு நேரமும் இங்கதானே இருந்தாரு. அப்ப எல்லாம் சொல்லாம கிளம்புற நேரம் நிறுத்தி தான் சொல்லனுமா? என்று கோபமாக கேட்கிறார். இதை எதிர்பார்க்காத இனியா அதிர்ச்சியில் நின்று கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications