பாக்கியலட்சுமி: போலீஸ் வந்ததும் கோபி சொன்ன வார்த்தை! அதிர்ச்சியில் ஈஸ்வரி.. செல்வி கேட்ட கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மார்ச் 21ம் தேதிக்கான எபிசோடில் இனியா தன்னுடைய நிச்சயதார்த்தத்தை நிறுத்துவதற்காக போலீசை வர வைத்திருந்ததை தொடர்ந்து கோபி முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். இதனால் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் போலீஸ் இந்த வீட்டில் இனியாவுக்கு விருப்பம் இல்லாமல் தான் எங்கேஜ்மென்ட் நடைபெற இருக்கிறதா என்று கேட்க, அதற்கு ஈஸ்வரி பாக்கியா தான் போலீசுக்கு போன் பண்ணி இருப்பா, கல்யாணத்தில் பொண்ணுக்கு சம்மதம் தான். அவளுடைய அம்மாவுக்கு தான் சம்மதம் இல்ல ஆனா பொண்ணோட அம்மாவின் சம்மதம் எல்லாம் முக்கியம் கிடையாது இல்ல என்று போலீஸிடம் கேட்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

போலீஸ் கொடுத்த அதிர்ச்சி

அதற்கு போலீஸ் இல்ல எங்களுக்கு வந்த தகவல் பொண்ணுக்கு விருப்பமில்லை என்றுதான் சொன்னாங்க என்று சொல்ல அதைக் கேட்டு ஈஸ்வரி அதிர்ச்சியில் இருக்கிறார். அப்போது இனியா, நான் தான் போலீசுக்கு போன் செய்தேன். நான் ஆகாஷ் என்ற ஒரு பையனை காதலிச்சேன். அவன்கூட பேசக்கூடாது என்று சொன்னாங்க நானும் சரின்னு சொல்லிட்டேன். ஆனா இப்போ எனக்கு அவசரமா எங்கேஜ்மென்ட் பண்ணுவதற்கு ஏற்பாடு பண்ணுறாங்க என்று சொல்கிறார்.

கோபப்பட்ட மாப்பிள்ளை குடும்பம்

வந்திருந்த மாப்பிள்ளை வீட்டார்கள் இதை கேட்டு இன்னொருத்தனை லவ் பண்ண பொண்ணை தான் எங்க மேல கட்ட பாக்குறீங்களா என்று கோபப்பட்டு திட்டிவிட்டு போய்விடுகிறார்கள். அதைத் தொடர்ந்து போலீஸ் நாங்க போன பிறகு நீங்க இந்த பொண்ணை திட்டக்கூடாது, அப்படி ஏதாவது திட்டுனா எனக்கு இந்த நம்பருக்கு போன் பண்ணு நாங்க உனக்கு முழு சப்போர்ட் கொடுக்கிறோம் என்று போலீஸ் இனியாவிடம் நம்பர் கொடுத்துவிட்டு போகிறார்கள்.

இனியா கொடுத்த விளக்கம்

போலீஸ் போனதும் ஈஸ்வரி உனக்கு இப்ப சந்தோஷமா, இது எங்க இருந்து கத்துகட்ட எல்லாத்துக்கும் காரணம் உங்க அம்மா தான் என்று திட்ட, அதற்கு இனியா இப்போ தான திட்டக்கூடாதுனு போலீஸ் சொல்லிட்டு போயிருக்காங்க நீங்க மீண்டும் திட்டுறீங்க. உங்ககிட்ட நாங்க எத்தனையோ முறை சொன்னோம் நீங்க தான் கேட்கல அதனால்தான் வேறு வழி இல்லாமல் நான் இந்த முடிவு எடுத்தேன் என்று சொன்னதும் கோபியும் ஈஸ்வரியும் கோபப்பட்டு அங்கிருந்து போய் விடுகிறார்கள்.

பாக்கியா வருத்தம்

அடுத்ததாக பாக்கியா ரெஸ்டாரன்டில் சோகமாக இருக்கிறார். அப்போது செல்வி நான் உனக்கு டீ போட்டுட்டு வரட்டா அக்கா ஏதோ டென்ஷனில் இருக்கிற என்று கேட்ட, அதற்கு பாக்கியா என்ன நடந்தது என்று சொல்ல தயங்குகிறார். அப்போது செல்வி சொல்ல விருப்பம் இருந்தா சொல்லு இல்லன்னா வேண்டாம் என்று சொல்ல, இனியாவிற்கு அவசர எங்கேஜ்மென்ட் செய்ய முயற்சித்ததும் போலீஸ் வந்து தடுத்த விஷயங்கள் எல்லாவற்றையும் பாக்கியா சொல்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

செல்வி கேட்ட கேள்வி

அதற்கு செல்வி எங்களை மன்னிச்சிருக்கா ஆகாஷ் மட்டும் இந்த தப்பு பண்ணாம இருந்திருந்தா உங்க வீட்டுல இந்த பிரச்சனை வந்திருக்காது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அடுத்த கட்டத்தில் செல்வி ஆகாஷுக்கு கஞ்சி வைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது அவருடைய கணவர் வருகிறார்.

ஆகாஷ் அப்பா வாக்குவாதம்

ஆகாஷ் அப்பாவை பார்த்ததும் செல்வி இவ்வளவு நாளா எங்க போன என்று திட்டுகிறார். அதற்கு அவர் நீ எப்படி என் புள்ளையை அடிச்சவங்க மேல போலீஸ் கம்பிளைன்ட் கொடுக்காமல் இருக்கலாம்? நான் அவங்கள சும்மா விடமாட்டேன் என்று சொல்லிவிட்டு போகிறார். மறுபக்கத்தில் பாக்யா வீட்டில் எல்லோரும் இருக்கும்போது எழில் மற்றும் செழியன் இருவரும் வாக்கிங் போயிட்டு வருகிறார்கள்.

கோபி எடுத்த முடிவு

கோபி எல்லோரையும் கூப்பிட்டு வைத்து பேச வேண்டும் என்று சொல்கிறார். அப்போது இனியா செய்த செயலால் தான் ரொம்பவும் மனம் உடைந்து விட்டதாகவும் இந்த வீட்டில் இருப்பதற்கு காரணமே இனியாதான். ஆனால் இனியாவிற்கு இப்போ நாம் முக்கியம் இல்லை என்று ஆன பிறகு இந்த வீட்டில் இருந்து பிரயோஜனம் இல்ல. அதனால் இன்னைக்கு சாயங்காலம் நான் வீட்டை விட்டு போயிருவேன் என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சியில் நிற்கிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+