பாக்கியலட்சுமி: பாக்யாவை அசிங்கப்படுத்த சுதாகர் கண்டுபிடித்த வழி.. கதறி அழுத ஈஸ்வரி, கோபி பிடித்த பாயிண்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஏப்ரல் 25ஆம் தேதிக்கான எபிசோடில் பாக்யாவின் ரெஸ்டாரண்டில் இருந்து ராமமூர்த்தியின் போட்டோவை தூக்கி எறிந்ததற்காக சுதாகரிடம் பாக்யா வாக்குவாதம் செய்கிறார். இதனால் பாக்யாவை பழிவாங்க வேண்டும் என்று மற்றொரு ரெஸ்டாரண்டுக்கும் சுதாகர் பிரச்சனை கொடுக்க இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்யா ரெஸ்டாரண்டுக்கு வருகிறார். அப்போது அங்கு அவருடைய பொருட்கள் எல்லாம் வெளிய வைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் சுதாகரின் மேனேஜரிடம் எனக்கு தேவையான சில பொருட்கள் உள்ளே இருக்கிறது அதை எடுத்துக் கொள்கிறேன் என்று சொன்னதும் அவர் நீங்க வெளியவே இருங்க, நாள் சார் கிட்ட பேசிட்டு வரேன் என்று போகிறார்.

போட்டோ உடைந்தது
பிறகு வந்து உங்களை உள்ள விடக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க என்று சொல்கிறார். அந்த நேரத்தில் எழில் வந்து யார் ரெஸ்டாரண்டுக்கு யார் வரக்கூடாதுன்னு சொல்றது என்று கோபப்பட பாக்கியா அமைதியாக இரு எழில் என்று சொல்லி என்னுடைய மாமாவின் போட்டோ இருக்கிறது அதை மட்டும் எடுத்து கொடுங்க என்று பாக்கியா கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அங்கே வேலை பார்ப்பவர் ராமமூர்த்தி போட்டோவை தூக்கி வெளியே வீசுகிறார்.
அடிக்கப்போன எழில்
இதை பார்த்து எழில் மேனேஜரின் சட்டையை பிடித்து சண்டை போடுகிறார். பாக்யா எழிலை தடுத்து இவங்ககிட்ட பேசினா வேலைக்காகாது பேச வேண்டியவங்ககிட்ட பேசணும். நீ வீட்டுக்கு போ என்று அனுப்பி வைத்துவிட்டு சுதாகரை சந்திக்க ஆஃபீஸுக்கு போகிறார். அங்கு சுதாகர் பாக்யாவை பார்த்ததும் வாங்க சம்மந்தி என்ன சர்ப்ரைஸா வந்து இருக்கீங்க என்று கேட்க, நீங்க பண்றது எதுவுமே சரி இல்ல என் மாமனார் போட்டோவை தூக்கி வெளியே போட சொல்லி இருக்கீங்க? என்று கோபப்படுகிறார்.
அதிர்ச்சியில் பாக்கியா
அதற்கு சுதாகர் நான் உங்களை ரெஸ்டாரண்டை விட்டு போகணும்னு சொன்னேன் அப்போவே முக்கியமானதை எடுத்துட்டு போயிருந்தா இந்த பிரச்சனை வந்திருக்காதே என்று கேட்க, நீங்க வேணும்னு தான் இதை பண்ணி இருக்கீங்க. ரெஸ்டாரண்டுக்காக உங்க பையனுடைய வாழ்க்கையை அடமானம் வச்சிருக்கீங்க என்று திட்டுகிறார் அதற்கு சுதாகர். ஒரு பெட்டி ரெஸ்டாரண்டுக்காக என்னுடைய பையன் வாழ்க்கையை நான் கெடுக்கல என்று சொல்கிறார்.
மிரட்டிய பாக்யா
என்கிட்ட ஒரு மாதிரி பேசுறீங்க, எங்க வீட்ல ஒரு மாதிரி பேசுறீங்க, இனியா அப்பா கிட்ட ஒரு மாதிரி பேசுறீங்க உங்களை இனிமேல் நம்பவே மாட்டேன். உங்களுக்கு வேணுனா உங்க பையன் மேல அக்கறை இல்லாம இருக்கலாம் ஆனா என் பொண்ணு மேல எனக்கு அக்கறை இருக்கு. இந்த ரெஸ்டாரன்ட் பிசினஸை கூட விட்டுடுவேன். ஆனால் எங்க மாமனார் போட்டோவை தூக்கி போட்ட மாதிரி இனியாவை ஒரு நாள் தூக்கி போடணும்னு நினைச்சா அவ்வளவு தான் என்று மிரட்டுகிறார்.
எழில் சொன்ன செய்தி
அடுத்தவங்களை அழிச்சு முன்னேறனும்னு நினைக்கிற உங்களுடைய வெறி உங்களை ஒருநாள் அழிச்சிடும் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். மறுபக்கத்தில் கோபி ஈஸ்வரியிடம் பாக்யா சொல்றது ஒரு மாதிரி இருக்கு, ஆனா சுதாகர் சார் சொல்றது ஒரு மாதிரி இருக்கு எதை நம்புறதுனே தெரியல என்று சொல்லிக் கொண்டு இருக்க, அதற்கு ஈஸ்வரி பாக்கியா ஓவரா பேசிருப்பா. அவ அப்படி பேசக்கூடிய ஆளுதானே என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது எழில் வருகிறார்.
ஈஸ்வரியின் திமிர் பேச்சு
என்ன ஆச்சு என்று கேட்க, எழில் நாங்க ரெஸ்டாரண்டுக்கு போனோம் அங்க அம்மா கொஞ்சம் திங்ஸ் இருந்தது அதை எடுக்கக்கூட அவங்கள உன்ன விடல என்று சொல்ல, உங்க அம்மா ஏதாவது பேசினாளா? என்று ஈஸ்வரி கேட்டதும் அம்மா வாயே திறக்கல. அதுவும் இல்லாம தாத்தாவோட போட்டோவை தூக்கி விசிறி அடிச்சிட்டாங்க என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
கோபிக்கு வந்த சந்தேகம்
ஈஸ்வரி அழுது கொண்டிருக்கின்றார். பிறகு எல்லாத்துக்கும் காரணம் பாக்கியா தான் என்று சொல்ல, கோபி எனக்கு ஏதோ சந்தேகமாயிருக்கு பாக்யா சொல்ற மாதிரி அவர் நம்மகிட்ட ஒரு மாதிரி பேசிக்கிட்டு பாக்கியா கிட்ட வேற மாதிரி பேசுறாருன்னு நினைக்கிறேன் என்று சொல்ல, அதற்கு செழியன் அப்படி எல்லாம் இருக்காதுப்பா, அவரு பாவம் அப்படி பேசமாட்டார் என்று சொல்ல, எழில் இன்னைக்கு வந்த அவரை நம்புவ, அம்மாவை நம்ப மாட்டியா என்று சொல்லி எதுவும் பேசாமல் கிளம்பி விடுகிறார்.
பீல் பண்ணும் பாக்கியா
மறுபக்கத்தில் பாக்கியா ராமமூர்த்தியின் போட்டோவை தன்னுடைய முதல் ரெஸ்டாரண்டில் வைத்து மாலை போடுகிறார். அதே நேரத்தில் சுதாகர் தன்னுடைய ஆஃபீஸில் பாக்கியா பேசியதை எல்லாம் நினைத்து பார்த்துக் கொண்டே இருக்கிறார். அங்கு அவருடைய மேனேஜர் ஒருவர் வந்து பாக்கியா வைத்திருக்கும் முதல் ரெஸ்டாரன்ட் வாடகை இடத்தில்தான் இருக்கிறது அதை வாடகைக்கு கொடுத்த நபர் குறைந்த வாடகைக்கு தான் கொடுத்து இருக்கிறார்.
சுதாகரின் வில்லத்தனம்
அந்த அவர் இப்போ ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறார் என்று சொல்ல அந்த ரெஸ்டாரண்டையும் நாம வாங்கணும் அது நல்லா வருமானம் வருதா என்று சுதாகர் விசாரிக்க, மேனேஜர் நல்ல வருமானம் வருகிறது என்று சொல்கிறார். அப்படினா அதை வாங்குவதற்கான வேலையை பாருங்க, சம்பந்தி அம்மாவுக்கு இந்த ரெஸ்டாரண்டும் போயிட்டுருச்சுன்னா என்ன பண்ணுவாங்க என்று கேட்க மேனேஜர் நடு தெருவுக்கு தான் வரணும் என்று சொல்லி சிரித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications