பாக்கியலட்சுமி: செழியனுக்காக பாக்யா செய்த செயல்.. கவுன்சிலருக்கு சரியான அடி, ஆனால் குழப்பும் ஈஸ்வரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மே 27 ஆம் தேதிக்கான எபிசோடில் செழியன் ஜெயிலில் இருக்கும் நிலையில் அவரை எப்படியாவது வெளியே கொண்டு வர வேண்டும் என்பதற்காக பாக்யா முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். அதே நேரத்தில் பாக்யாவை புரிந்து கொள்ளாத ஈஸ்வரி ஒரு புதிய பிரச்சனையை கிளப்புகிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியா அமைச்சரிடம் உதவி கேட்பதற்காக வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஒருவர் வந்து இன்னைக்கு அமைச்சரின் பிறந்தநாள் கொஞ்ச நேரம் பொறுத்து அவரை மீட் பண்ணலாம் உள்ளே வாங்க என்று கூப்பிட்டு போகிறார். அவரை பார்த்ததும் செல்வி இவர் உண்மையிலேயே அமைச்சரை பார்க்க ஏற்பாடு பண்ணுவாரா? என்று சந்தேகப்படுகிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

விருந்து ஏற்பாடு

அந்த நேரத்தில் அமைச்சரின் பிறந்தநாளுக்காக தடபுடலாக பிறந்தநாள் சாப்பாடு ரெடியாகிக் கொண்டிருக்கிறது. அப்போது சாப்பாடு ருசி பார்த்த ஒருவர் சாப்பாடு ஒன்றுமே சரி இல்லை என்று திட்டிக் கொண்டிருக்கிறார். அதனால் அங்கிருந்தவர்கள் கோபத்தில் எதுவும் சமைக்காமல் கிளம்பி விடுகிறார்கள். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அங்கிருப்பவர்கள் திணறிக் கொண்டிருக்கும் போது பாக்யா நாங்க சமைச்சு தருகிறோம் நீங்க இனி வேற ஆட்களை பார்க்க வேண்டாம் என்று சொல்கிறார்.

மீண்டும் சமையல் ஆர்டர்

அதற்கு பாக்யாவிற்கு உதவி செய்வதற்காக கூட்டிக் கொண்டு வந்த நபர் நீங்க சின்ன ஹோட்டல் வச்சிருக்கீங்க உங்களை நம்பி எப்படி இவ்வளவு பேருக்கு சமைக்க விடுவது என்று கேட்கிறார். அதற்கு பாக்கியா நான் ஏற்கனவே ரெண்டு ரெஸ்டாரண்ட் நடத்துன அனுபவம் இருக்கு, அதுபோக நிறைய ஆர்டர் எடுத்து செஞ்சு கொடுத்திருக்கிறேன் என்று சொன்னதும் அதற்கு அந்த நபர் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, நீங்க சமையலை மட்டும் ஒழுங்கா செஞ்சு கொடுத்தா போதும் அமைச்சரே உங்களை கூப்பிட்டு பாராட்டுவார் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

பாக்கியா செய்த உதவி

பிறகு பாக்கியா செல்வியை பார்த்து பிரியாணி பண்ணிடலாம் என்று சொல்கிறார். அதோடு இந்த நேரத்தில் நாம இவங்களுக்கு உதவி செய்தால்தான் நமக்கு இவங்க உதவுவாங்க என்று பாக்கியா பிளான் போடுகிறார். பிறகு சமையல் வேலைகள் தடபுடலாக நடந்து கொண்டிருக்கிறது. வேலை பார்ப்பவர்களும் அங்கு வந்து எல்லோரும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். சாப்பாடு அனைத்தையும் பாக்கியா செய்து முடித்து விடுகிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

பாக்யாவின் பிளான்

அந்த நேரத்தில் பாக்யாவிடம் பிரச்சனை செய்த கவுன்சிலர் அங்கு வந்து உங்களை யார் இங்கு சமைக்க விட்டது? இனி நீங்க இங்க சமைக்க வேண்டாம் கிளம்புங்க என்று பிரச்சனை செய்கிறார். அப்போது பாக்யாவுக்கு உதவுவதாக கூறிய நபர் வந்து கவுன்சிலரிடம் வாக்குவாதம் செய்து அவரை அங்கிருந்து துரத்தி விடுகின்றனர். பாக்கியா இன்னைக்கு எப்படியாவது அமைச்சரை பார்த்து பேசி ஆகணும் அப்போதான் செழியனை ஜெயிலில் இருந்து கூட்டி வர முடியும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

கோபத்தில் ஈஸ்வரி

அந்த நேரத்தில் ஈஸ்வரி போன் செய்து வீட்டில் இவ்வளவு பிரச்சனை நடக்கும்போது எங்க போனா? செழியனை வெளியே கொண்டு வருவதற்கு ஏதாவது செஞ்சு இருக்கியா? இல்லையா? என்று திட்டிக் கொண்டிருக்கும் போது பாக்கியா நான் ஒரு முக்கியமான இடத்திற்கு வந்திருக்கிறேன் வீட்டிற்கு வந்து உங்களிடம் பேசுகிறேன் என்று போனை கட் பண்ணி விடுகிறார். இதனால் ஈஸ்வரி கோபத்தில் இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+