பாக்கியலட்சுமி: இனியாவுக்கு தெரிந்த உண்மை.. சுதாகருக்கு சப்போர்ட் செய்த ஈஸ்வரி.. பாக்கியா கொடுத்த பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஏப்ரல் 29ஆம் தேதிக்கான எபிசோடில் சுதாகர் பாக்யாவின் இன்னொரு ரெஸ்டாரண்டையும் வாங்கி விடுகிறார். இந்த விஷயம் பாக்கியாவிற்கு தெரிய வருகிறது. அதே நேரத்தில் பாக்யாவிடம் இனியா கேட்ட கேள்வியால் பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியா தன்னுடைய ரெஸ்டாரண்ட்டை ஓனர் விற்க போகிறேன் என்று சொல்லிவிட்டார் என்று குடும்பத்தினரிடம் சொல்ல அதற்கு எழில் அவர் விற்கப் போகிறேன் என்றால் நாமே வாங்கிக்கிறோம்னு சொல்லி இருக்கலாமே என்று கேட்க, அதற்கு பாக்யா அவர் இன்னொருவரிடம் அட்வான்ஸ் வாங்கிட்டாருன்னு சொல்றாரு என்று சொன்னதும் ஈஸ்வரி, ரெஸ்டாரன்ட் என்றால் லட்சக்கணக்கில் சொல்லுவாங்களே அதற்கு உங்ககிட்ட காசு இருக்குதா?

Baakiyalakshmi Serial vijay TV

வெளிவரும் உண்மை

ஏற்கனவே வாங்கிய ரெஸ்டாரண்டுக்கு லோன் கட்ட முடியாம இருக்க, இப்போ இது வேறயா சரி போனா போகட்டும் இதுக்கு மேல ரெஸ்டாரண்ட்டை மூடிட்டு வீட்டிலேயே இரு பேரன் பேத்திகளை பார்த்துக்கொள். கடவுள் இதுகூட நல்லதுக்கு தான் பண்ணி இருக்காரா இருக்கும். நீ ரெஸ்ட் எடுக்க வேண்டிய நேரம் வந்துடுச்சு என்று பாக்கியாவை வெறுப்பேத்துற மாதிரியே ஈஸ்வரி பேசிக் கொண்டிருக்க, இதனால் கோபமான பாக்கியா என்னை தனியா விடுங்க என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.

பாக்யாவிற்கு அதிர்ச்சி செய்தி

மறுநாள் காலையில் பாக்யா ரெஸ்டாரண்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது செல்வி என்னக்கா ஆச்சு இன்னைக்கு தான் லாஸ்ட் டே, நீ என்ன பண்ண போற என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது நான் ஓனருக்கு எவ்வளவோ போன் பண்ணுனே அவர் எடுக்கவே இல்ல என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ஓனர் அங்கு வந்து இன்னைக்கு தான் உங்களுக்கு கடைசி நாள், இன்னைக்கு நைட்டுக்குள்ள எல்லாத்தையும் எடுத்து காலி பண்ணிடுங்க என்று சொல்ல நான் இந்த வாரத்திற்கான காய்கறி எல்லாம் வாங்கி வச்சிட்டேன் என்று பாக்கியா சொல்ல அதற்கான பணத்தை நான் கொடுத்து விடுகிறேன் நீங்க கிளம்புற வேலைய பாருங்க என்று ஓனர் கறாராக பேசி விட்டு கிளம்புகிறார்.

சுதாகரின் சுயரூபம்

பாக்யா அவரிடம் பேச போகிறார் ஆனால் அவர் வெளியே போய் விடுகிறார் வெளியே போன பிறகு அவரிடம் பேசலாம் என்று பாக்யா வெளியே போய் பார்க்கும்போது அங்கு ஓனர் சுதாகரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். சுதாகரை பார்த்ததும் பாக்கியா அதிர்ச்சி ஆகிறார். பிறகு ஓனர் போனதும் சுதாகரிடம் இத்தனைக்கும் காரணம் நீங்க தானா என்று கேட்க? நீங்க ரொம்ப ஷார்ப்பா இருக்கிறீங்க சம்பந்தி. இவ்வளவு ஷார்ப்பா இருந்தா தொழில் நடத்த முடியாது கொஞ்சம் பொறுமை அவசியம் என்று வெறுப்பேற்றுகிறார்.

ஈஸ்வரியின் திமிர் பேச்சு

பிறகு நீங்கள் என்னுடைய தன்மானத்தை சீண்டி விட்டுட்டீங்க. அதனால உங்களை பழிவாங்க தான் நான் இப்படி எல்லாம் பண்ணுனேன் என்று சொல்லிவிட்டு போகிறார். மறுபக்கத்தில் கோபி ஈஸ்வரியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். நாம இனியா கல்யாணத்துக்கு வந்தோம் இன்னும் வீட்டுக்கு போகல, எப்பம்மா கிளம்பனும் என்று கேட்டுக் கொண்டிருக்கும்போது ஈஸ்வரி இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

வெறுப்பேற்றும் ஈஸ்வரி

அந்த நேரத்தில் பாக்யா கோபமாக வீட்டிற்கு வந்து எல்லோரையும் கூப்பிட்டு நிற்க வைத்து இன்னைக்கோட ரெஸ்டாரன்ட் என் கையை விட்டு போய்விடும் என்று சொல்ல, அது தெரிந்தது தானே... எல்லாம் காலி பண்ணிட்டியா என்று ஈஸ்வரி திமிராக கேட்கிறார். அதற்கு பாக்கியா அந்த ரெஸ்டாரண்டை யார் வாங்கி இருக்காங்கன்னு தெரியுமா, இனியாவோட மாமனார் தான், எல்லாத்தையும் அவர் பிளான் பண்ணி பண்ணிருக்காரு என்று சொன்னதும் எல்லோரும் அதிர்ச்சடைகின்றனர்.

கோபத்தில் பாக்கியா

ஆனால் வழக்கம் போல ஈஸ்வரியும் செழியனும் நீ விசாரிக்காமல் எதுவும் சொல்லாத அவர் அப்படி பண்ண வேண்டிய அவசியமே இல்ல என்று சொல்ல பாக்கியா நான் ஓனரிடம் சுதாகர் பேசிக் கொண்டிருந்ததை பார்த்தேன் என்று சொல்ல, தெரிஞ்சவங்களா கூட இருந்திருக்கலாம் அதனால பேசிகிட்டு இருக்கலாம் என்று நம்பாமலேயே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் கோபமான பாக்கியா நீங்க யாரும் நம்ப வேண்டாம் ஆதாரத்தோடு நிரூபிச்சாலும் நீங்க நம்ப மாட்டீங்க என்று கிளம்பி விடுகிறார்.

இனியா சொன்ன வார்த்தை

பிறகு இனியாவிடம் போன் செய்து வழக்கம் போல எப்படி இருக்கிற, உன் மாமியார் மாமனார் எப்படி நடந்துக்குறாங்க, உன் ஹஸ்பண்ட் எப்படி நடந்துக்குறாங்க என்று கேட்க இனியா எப்ப பார்த்தாலும் இதையே கேட்டுட்டு இருக்கிற எதுவும் பிரச்சனையா என்று கேட்க அதெல்லாம் இல்ல உன் மேல இருக்கிற அக்கறைல தான் கேட்கிறேன் என்று பாக்கியா சமாளிக்கிறார். ஆனாலும் இனியா நீ கேட்கிறதை பார்த்தா அக்கறையில் கேட்ட மாதிரி இல்ல பயத்தில் கேட்ட மாதிரி இருக்கு என்று சொல்கிறார்.

எழில் கேட்ட கேள்வி

அப்போது நித்திஷ் இனியாவை ஷாப்பிங் போவதற்கு கூப்பிடுகிறார். பிறகு நித்திஷிடமும் பாக்கியா பேசுகிறார். அவரும் நல்லவிதமாகவே பேசுகிறார். அதைத்தொடர்ந்து எழில் ரெஸ்டாரண்ட் ஓனரை சந்தித்து அவரிடம் நீங்க உங்களுடைய கடனுக்காக தான் விக்கிறீங்களா இல்ல உங்களை யாரும் மிரட்டி இருந்த இடத்தை வாங்கினார்களா? என்று விசாரிக்கிறார். அதற்கு அவர் நான் என்னுடைய பிரச்சனைக்காகத்தான் இந்த இடத்தை விக்கிறேன் வேற எதுவும் இல்லை, யாரும் என்ன மிரட்டல என்று சமாளித்துக் கொண்டு அங்கிருந்து போகிறார். அதை தொடர்ந்து கோபி சுதாகரை சந்தித்து பேசுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+