பாக்கியலட்சுமி: பாக்யா சொன்னது நடந்தது.. ஈஸ்வரியால் மிரட்டும் எழில்.. தவிக்கும் அமிர்தா.. செம சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 மார்ச் 5ஆம் தேதிக்கான எபிசோடில் பாக்கியாவை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக கோபி செய்த செயல் அவருக்கே பிரச்சனையை கொடுத்திருக்கிறது. அதேபோல கோபியை எழில் மிரட்டுகிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியாவிடம் கோபி பசங்க வந்தது உனக்கு சந்தோஷம் தானே? உன்னுடைய முகத்திலேயே தெரியுது என்று வழிந்து கொண்டு இருக்க, செல்வி அக்கா கடுப்புல இருக்கு இவர் இப்படி பேசிட்டு இருக்காரு. இந்த ஆளு எப்படித்தான் அக்கா கூட இவ்வளவு நாள் வாழ்ந்தார் என்று தெரியவில்லை என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

கோபத்தில் பாக்கியா

அப்போது பாக்கியா டென்ஷன் ஆகி நான் உங்ககிட்ட வந்து என் பசங்களை பிரிஞ்சு இருக்கிறதுனால எனக்கு வருத்தமா இருக்குன்னு சொன்னேன்னா? நீங்களா ஒரு முடிவு எடுத்துட்டு நீங்களா ஒரு வேலை பண்ணி வச்சிடுவீங்களா? செழியன் மாமனாருக்கு உடம்பு சரியில்லை என்று வேலை பார்த்துட்டு உதவியா இருந்தான்.

குடும்பப் பெண்ணின் கஷ்டம்

அதுபோல எழில் ஒரு காரணத்துக்காக வீட்டுக்கு வராமல் இருந்தான் நாங்க அப்போவும் போனில் பேசிட்டு சந்தித்து சந்தோஷமாக இருந்தோம். ஆனால் இப்போ எல்லோரும் வீட்டுக்கு வந்துட்டா எல்லோருக்கும் கஷ்டம் தான். நான் காலையில் கிச்சனுக்குள்ள போனேன் இன்னும் முடியல. ஈவினிங் ஆயிடுச்சு ரெஸ்டாரண்ட் போகல.

Baakiyalakshmi Serial vijay TV

பாக்கியா வருத்தம்

வீட்டு வேலையை பார்த்துப்பேன். சரி, ரெஸ்டாரண்ட்டல யாரு பார்த்துப்பாங்க? அது மட்டும் இல்லாம வீடு ரெஸ்டாரண்ட் பிரச்சனையை கூட விடுங்க என் பசங்களுக்கு சமைச்சு கொடுப்பது எனக்கு சந்தோஷம்தான். ஆனால் இப்போ ஜெனி அவங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு அடிக்கடி போவா, செழியன் போய் பார்த்துட்டு வருவான். ஆனா அப்படி போக கூடாதுன்னு உங்க அம்மா சொல்லுவாங்க.

ஈஸ்வரிக்கு தேவை இல்லாத வேலை

அதுபோல அமிர்தா கிட்ட ஜெனி ரெண்டு குழந்தை பெத்துட்டா நீ இன்னும் குழந்தை பெத்துக்கலையான்னு கேட்பாங்க. எழில் கிட்ட அதான் படம் பண்ணி முடிச்சிட்டியே சீக்கிரம் குழந்தை பெற்றுக்கொள் என்று சொல்லுவாங்க. இது பற்றி பிரச்சனை வந்துகிட்டே இருக்கும். இதனால எல்லோரும் கோவிச்சுக்கிட்டு ஒவ்வொரு ரூம்லயா போய் உட்காருவாங்க. அவங்களையெல்லாம் யாரு சமாதானம் பண்றது என்று பாக்கியா கேட்டுக் கொண்டே இருக்க கோபி பதில் எதுவும் சொல்லாமல் தவிக்கிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

மாட்டிக்கொண்ட கோபி

பிறகு அங்கிருந்து கோபி ஈஸ்வரி ரூமிற்கு வருகிறார் அங்கு ஈஸ்வரி ஒருவரிடம் போனில் பேசிக் கொண்டிருக்கிறார். அது யார் என்று கோபி கேட்க, அதற்கு என்னுடைய பேரன்கள் வீட்டை விட்டு போயிட்டாங்க என்று ஒருத்தி பின்னாடி பேசிட்டு இருந்தா அதனால தான் இப்ப எல்லாரும் வீட்டுக்கு வந்துட்டாங்கன்னு அவளுக்கு போன் பண்ணி சொல்லிட்டு இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஈஸ்வரியின் புலம்பல்

பிறகு பாக்கியா மகன்கள் வந்த பிறகு சோகமா இருக்கிறா என்று கோபி கேட்க, அவளுக்கு எழில் செழியன் வந்தது சந்தோஷம் இல்லாத மாதிரி இருக்கு... ஏன் தான் இவள் இப்படி பண்ணுறாளோ என்று திட்டிக் கொண்டிருக்கிறார். பிறகு பாக்கியா எல்லோருக்கும் சாப்பாடு எடுத்து வைக்கிறார். அப்போது பாக்கியா சொன்னது போலவே ஈஸ்வரி எழில் மற்றும் அமிர்தாவிடம் நீங்க எப்போ குழந்தை பெத்துக்க போறீங்க என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் எழில் கோபப்படுகிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

எழில் வார்னிங்

பிறகு கோபி தனியாக உட்கார்ந்து இருக்கும் போது அங்கு வரும் எழில் கோபி இடம் இனிமேல் பாட்டி இப்படி பேசக்கூடாது நீங்க சொல்லி வைங்க என்று மிரட்டுகிறார். பிறகு ஈஸ்வரி இடம் கோபி பேசப்போகிறார். அப்போது எழில் அமிர்தா இஷ்டப்பட்ட நேரத்தில் குழந்தை பெத்துக்க போறாங்க. ஏம்மா நீங்க அதை பற்றியே கேட்டுட்டு இருக்கீங்க என்று பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+