பாக்கியலட்சுமி: மிரட்டிய சுதாகருக்கு பாக்கியா கொடுத்த பதிலடி.. செல்வி சொன்ன எதிர்பாராத வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஏப்ரல் 9ஆம் தேதிக்கான எபிசோடில் இனியாவின் திருமணத்திற்காக பாக்யாவின் ரெஸ்டாரண்டை அன்பளிப்பாக தரவேண்டும் என்று சுதாகர் பாக்கியாவிடம் மிரட்டுகிறார். அதற்கு பாக்கியா எதிர்பார்க்காத பதிலடி கொடுத்து அனுப்புகிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் இனியாவின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் பற்றி குடும்பத்தினர் எல்லோரும் கூட்டமாக இருந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஈஸ்வரி இனியாவின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் எவ்வளவு காசு செலவானாலும் பரவாயில்லை கடன் வாங்கியாவது மாப்பிள்ளை வீட்டாரின் வசதிக்கு ஏற்ப நாம செஞ்சாகணும் என்று சொல்ல, அதற்கு கோபி நான் சேமித்து வைத்திருக்கிறேன். அதை இனியாக்கு கொடுத்து விடலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது பாக்கியா நானும் கொஞ்சம் பணம் நகை எல்லாம் சேர்த்து வைத்திருக்கிறேன் அது போதும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஈஸ்வரி கேட்ட கேள்வி
அப்போது ஈஸ்வரி அண்ணன்கள் இருவரும் இன்னும் வாய் திறக்கவில்லையே என்று சொல்ல செழியன் என்னுடைய தங்கச்சிக்கு எல்லோரும் பொறாமை படுற மாதிரி நான் கல்யாணத்தை நடத்த போறேன் என்று சொல்கிறார். எழில் நான் முன்பு இருந்த மாதிரி இப்போ இல்லை அதனால இனியா என்ன ஆசைப்பட்டு கேட்டாலும் அதை நான் வாங்கி கொடுத்து விடுவேன். என்னுடைய சார்பாக இனியாக்கு எல்லாமே சிறப்பா செஞ்சு கொடுத்துடுவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
பாக்கியா விசாரணை
அதைத் தொடர்ந்து பாக்கியா ரெஸ்டாரண்டுக்கு வந்து மிக்சர் ஸ்வீட் எல்லாம் செஞ்சாச்சா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். பிறகு எல்லாரும் திருமணத்திற்கு மண்டபத்திற்கு வந்து விட வேண்டும் என்று வேலை செய்பவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது எல்லாரும் கண்டிப்பா வரோம் என்று சொல்கிறார்கள். அப்போது செல்வியிடம் நீயும் வந்துரு செல்வி என்று சொல்ல, நான் அங்கு வந்தா சரியா இருக்காது உங்க வீட்டில் இருக்கிறவர்களுக்கு ஏற்கனவே என்னை பிடிக்காது இந்த நேரத்தில் நான் அங்கு வந்தா சரிப்பட்டு வராது என்று செல்வி சொல்கிறார்.
செல்வியின் வருத்தம்
அப்போது பாக்கியா மீண்டும் செல்வியிடம் மன்னிப்பு கேட்கிறார். நடக்கிற பிரச்சனையில் நீ மனசில் கூட இனியாவிற்கு சாபம் கொடுத்திராத செல்வி என்று சொல்ல, அதற்கு செல்வி என் பையனை உங்க குடும்பத்தினர் வந்து அடிக்கும்போது கூட நான் இனியா பாப்பா மீது கோபப்படல இப்போ எதுக்குக்கா நான் கோபப்பட போறேன்? நல்லபடியா கல்யாணம் நடக்கட்டும் நான் மண்டபத்துக்கு வந்தால் தேவையில்லாத பிரச்சனை தான் நடக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
சமாளிக்கும் சுதாகர்
பிறகு ரெஸ்டாரெண்டுக்கு நாளை ஒருநாள் மட்டும் தான் லீவு என்று எல்லாரையும் அனுப்பி வைத்துவிட்டு செல்வியுடன் பேசிக் கொண்டிருக்கும்போது சுதாகர் அங்கு வருகிறார். சுதாகரை பார்த்ததும் பாக்கியா உட்கார வைத்து அவரிடம் பேசுகிறார். அப்போது சுதாகர் எங்க சொந்தக்காரங்க எல்லாரும் எந்த தகுதிக்கு ஏற்ப நாங்கள் கல்யாணம் பண்ணல என்று சொல்றாங்க என்று சொல்ல, அதற்கு கவலைப்பட வேண்டாம் எங்க வீட்டில் எல்லோருடைய சேவிங்கையும் எடுத்து தான் இந்த திருமணத்தை நடத்துறோம் அதனால கிராண்டாவே செஞ்சுருவோம் என்று பாக்கியா சொல்கிறார்.
பாயிண்ட்டை பிடித்த பாக்யா
அதற்கு நீங்க என்ன செஞ்சாலும் எங்களுக்கு ஈக்குவலா வர முடியாது. நீங்க உங்க பொண்ணோட கல்யாண வாழ்க்கைக்கு அன்பளிப்பாக இந்த ரெஸ்டாரண்ட்டை கொடுத்துருங்க ஈக்குவல் ஆகிடும் என்று சொன்னதும் பாக்கியா அதிர்ச்சியாகிறார். ஏற்கனவே உங்க மேல எனக்கு சந்தேகம் இருந்தது, வீட்டிற்கு வந்து ரெஸ்டாரண்ட் வேண்டும் என்று மிரட்டிட்டு போனவங்க ரெண்டு நாளில் பொண்ணு கேட்டு வராங்களேன்னு சந்தேகம் இருந்துச்சு இப்போ அதை நீங்க உறுதிப்படுத்திட்டீங்க என்று பாக்கியா சொல்கிறார்.
பாக்கியா பதிலடி
அதற்கு சுதாகர் என்னுடைய பிசினஸ்க்காக என் பையன் வாழ்க்கையை நான் அடமானம் வைக்க மாட்டேன். அது வேற இது வேற. உங்க பொண்ணுடைய வாழ்க்கைக்காக நீங்க அன்பளிப்பு கொடுக்க மாட்டீர்களா? என்று கேட்க அதற்கு பாக்கியா முடியாது, இது நான் கஷ்டப்பட்டு உருவாக்கியது இதை யாருக்காகவும் நான் கொடுக்க மாட்டேன் என்று சொல்கிறார்.
மிரட்டும் சுதாகர்
அதற்கு சுதாகர் நீங்க இத கொடுக்கலன்னா.. என்று சொல்ல, ஏன் கல்யாணத்தை நிறுத்திடுவீங்களா என்று பாக்கியா கேட்க அதற்கு சுதாகர் சிரிக்கிறார். பிறகு இன்னைக்கு ரிசப்ஷனில் உங்க பொண்ணும், என்னுடைய பையனும் சந்தோஷமாக இருக்கணும் என்றால் நீங்க யோசித்து முடிவெடுங்க என்று சொல்லிவிட்டு சுதாகர் போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications